தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் THOU SON OF DAVID, HAVE MERCY ON ME லாங் பீச், கலிபோர்னியா, அமெரிக்கா 61-02-15 மொழியாக்கம் : சகோ.அலெக்ஸ்.P 1. ஜெபத்திற்காக சற்று நேரம் நாம் நின்ற வண்ணமாக இருப்போம். தேவனுக்கு முன்பாக எத்தனை பேர் இன்றிரவு நினைவு கூறப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.......? 2. எங்கள் பரலோகப் பிதாவே, நீர் ஜெபத்திற்கு பதில் அளிக்கிறவர் என்பதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சி உள்ளவர்களாக இருக்கிறோம். பல வருடங்களுக்கு பிறகு 1946 மற்றும் 1947-ம் வருடங் களின் கட்டங்களில் புற்றுநோயால் மரித்துக் கொண்டிருந்தவர்கள், சக்கர நாற்காலிகளில் ஊனமுற்ற நிலையில் இருந்தவர்கள் மற்றும் பார்வையற்றவர்கள் இப்பொழுது சுகத்தைப் பெற்றுக் கொண்டவர்களாக இருந்து கொண்டிருக்கிற அந்த ஜனங்களை காண்பதில் மிகவும் மகிழ்ச்சி. மேலும் அவர்கள் இங்கே இருந்து கொண்டு என் கரங்களை குலுக்கி "சகோதரர் பிரன்காம் அவர்களே நான் ஊனமுற்றவனாக இருந்தேன்; நான் பார்வை அற்றவனாக இருந்தேன்; நான் புற்றுநோய் உ டையவனாக இருந்தேன், அந்த நாளில் இருந்து இன்றுவரை நான் சுகவீனமாக இருந்ததில்லை" என்று கூறிக் கொண்டிருந்தனர். ஓ தேவனே, அது உம்முடைய கிருபையாக மட்டுமே இருக்கிறது என்ற நாங்கள் அறிவோம். அதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சி உள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் தேவனே இன்றைய நாளிலும் வேதனையுடன் இருந்து கொண்டிருப்பவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறீர் என்பதை நினைவு கூறுகிறோம். 3. இன்றிரவு நீர் எங்களை ஆசீர்வதிப்பீராக, எழுதப்பட்ட வார்த்தையை சுற்றிலும் நாங்கள் ஐக்கியம் கொள்ளும் போது தேவனுடைய மகிமையானது எங்கள் மத்தியில் வர வேண்டும் என்று ஜெபிக்கிறோம். கடந்த இரவு கூட்டத்தில் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டு பாதுகாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை கேட்பதற்கு, அந்த பலன்களுக்காக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஓ தேவனே, இந்தக் காரியங்களுக்காக நாங்கள் உமக்கு எவ்வளவாக நன்றி கூறுகிறோம். தொடர்ந்து நடக்கும் இந்த ஆராதனையில் நீர் எங்களை ஆசீர்வதிப்பீர் என்று நாங்கள் உமக்காக காத்திருக்கிறோம். அதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 4. இது போன்ற ஒரு நல்ல கூட்டத்தினருடன் இதைப்போன்று பேசிக்கொண்டிருப்பது ஒரு சிலாக்கியமாக இருக்கிறது, மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது தேவனை விசுவாசிப்பது என்பது உங்களுக்கு எளிதாகிறது. இப்பொழுது சில இரவுகளாக நான் பிரசங்கித்து வருகிறேன். சுவிசேஷத்தை மட்டுமே பிரசங்கித்து வருகிறேன். ஏனெனில் ஒரு நபர் சுகமடைந்து அவர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தாலும் நிச்சயமாகவே அவர்கள் மீண்டும் சுகவீனமடைவார்கள். ஆனால் நீங்கள் இரட்சிக்கப்பட்டால் அது உங்களுக்கு நித்தியமாக இருக்கும். நீங்கள் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்கிறீர்கள். ஆகவே சாயங்கால வெளிச்சங்களை மிகவும் தாமதமாக பெற்றுக் கொண்டிருக்கிறோம், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மகத்தான காரியம் தேவையாக உள்ளதை நான் உணருகிறேன்; அது இரட்சிப்பாக இருக்கிறது. 5. சகோதரர் பாஸ்வொர்த் (Brother Bosworth) வழக்கமாக கூறுவதைப் போல, "தெய்வீக சுகமளித்தல் என்பது நீங்கள் தூண்டிலில் வைக்கும் இரையைப் போன்று இருக்கிறது. மீன் தூண்டிலை இழுப்பதில்லை. அதில் உள்ள இரையை இழுத்துக் கொள்ளும் போது தூண்டிலையும் சேர்த்து பிடித்துக் கொள்கிறது அது அப்படித்தான் இருக்கிறது. இயற்கைக்கு மேம்பட்ட, இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளையும், தேவன் வியாதியஸ்தர்களை குணமாக்குவதையும் காண்கிறார்கள். பின்னர் அவர்கள் அதை அடைய முயற்சி செய்கின்றனர். முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அவர்கள் மகத்தான ஒரு விசுவாசத்தில் நம்பிக்கை வைத்து கர்த்தராகிய இயேசுவின் கரங்களில் நன்றாக இருக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் ஒரு கிறிஸ்தவராக மாறி, நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்கின்றனர். 6. இப்பொழுது, நம்முடைய கர்த்தரின் ஊழியத்தில் அதிக சதவிகிதம், சுமார் எண்பது சதவிகிதம் கணக்கின்படி எண்பது சதவிகிதத்திற்கும் அதிகமான ஊழியமானது தெய்வீக சுகமளித்தலாகவே இருந்தது என்று நான் நினைக்கிறேன் எனவே திரளான ஜனங்களின் கண்களை கவரும்படியாகவும் அவர் அவர்களுடைய மேசியா என்பதை காண்பிக்கவும், மேசியா என்று அவர்கள் கூறும்படி மேசியாவின் அடையாளங்களைக் காண்பித்தார். 7. நேற்று இரவு சகோதரர் ஆர்கன் பிரைட் அவர்கள் பார்வை யாளர்களிடம், "எத்தனை பேர் பிரசங்க ஆராதனையில் தொடர்ந்து இருப்பதற்கு விரும்புகிறீர்கள் அல்லது எத்தனை பேர் சுகமளிக்கும் ஆராதனைகளில் தொடர்ந்து இருக்க விரும்புகிறீர்கள்" என்று கேட்டார் என்று நான் நம்புகிறேன். ஓ அவர்களில் மிகக்குறைந்த சதவிகி தத்தினர் மட்டுமே குணமளிக்கும் ஆராதனைகளுக்காக இருக்கி றார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எப்படி இருப்பினும், தேவனிடத்தில் நம் இருதயங்களை திறந்து கொடுப்போம் என்றால் தேவன் அதை எப்படியும் செய்வார். பாருங்கள்? நாம் அதை அப்படித்தான் பார்க்கிறோம். 8. இன்றிரவு சிறிது சோர்வாக இருக்கிறது. எனக்கு..... ஒரே நாளில் ஒன்று முதல் மூன்று ஆராதனைகள் வரையில் இருக்கிறது. உங்களுக்குத் தெரியும். அதனால்தான் இங்கு வந்த நேரத்தில் நான் மீண்டும் துவங்குவதற்குள் சோர்வடைந்து விடுகிறேன். ஆகவே இன்று பிற்பகல் பழைய பிஸ்கா சபையிலும் இருந்தேன் அல்லது பிஸ்கா இல்லத்திலும் அது எப்படி அழைக்கப்பட்டாலும்; மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நாங்கள் ஒரு மகிமையான நேரத்தைக் கொண்டிருந்தோம் அசுசா தெருவைச் சேர்ந்த சில பழைய காலத்தவர்கள் இன்னுமாக பழைய அசுசா தெருவில் உள்ள தேவலாயத்தில் ஆராதனை செய்து கொண்டிருந்ததைக் கண்டு பிடித்தேன். அங்கே அவர்கள் வயதான மனிதர்களும், ஸ்திரீகளுமாக அமர்ந்து கொண்டிருந்ததை பார்த்தேன் நான் அவர்களைச் சுற்றிலும் எனது கரங்களைப் போட்டு அணைத்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு தெரியுமா அவர்கள்....அவர்கள் மிகவும் இனிமையானவர்கள். 9. ஒரு உண்மையான சிறிய குழந்தை அல்லது வயதான நபரோ அவர்கள் பார்ப்பதற்கு இரண்டாம் முறை உதவியற்றவர்களாக தெரிகின்றனர் என்று நான் நினைக்கிறேன். மேலும் நான் ஒரு இளைஞனை அவர்களை அசைத்து சரியான பாதையில் நடத்திச் செல்ல விரும்புவதே எனக்குப் பிடிக்கும்; அதன் பிறகு அந்த வயதான நபரிடம் சென்று அவர் எத்தனை பள்ளங்களை கடந்தார் என்றும் அவைகளை அவர் எப்படி கடந்து வந்தார் என்பதையும் நான் அறிந்து கொள்வேன். பின்பு அங்கு சென்று அதை எப்படி கடப்பது என்பதை நான் அறிந்து கொள்வேன். ஆகவே நான் அந்த வாலிப மற்றும் வயதான மற்றும் இடையில் உள்ளவர்களையும் கூட விரும்புகிறேன். ஒவ்வொருவரையும் எனக்கு பிடிக்கும். நான் என் இருதயத்தில் இருந்து இதைக் கூற முடியும். 10. இன்றிரவு, ஒரு எதிரி இருப்பதாக நான் அறிந்திருந்தால், ஒரு வேளை அப்படி இருக்கலாம். அது யார் என்று எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நான் முதலில் சென்று அதை சரி செய்ய முடியுமா என்று பார்க்கும் வரையிலும் நிச்சயமாக பிரசங்கிக்க செல்ல மாட்டேன் ஏனென்றால் நாம் யாருக்கும் எதிராக இருக்கக் கூடாது. அல்லது நமக்கு எதிராக எதுவும் இருக்கக் கூடாது பாருங்கள்? இப்பொழுது "உன் சகோதரனுக்கு எதிராக ஏதாவது இருந்தால்" என்று அது கூறவில்லை. "உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாக உனக்கு ஏதாவது இருந்தால் நீ அவனிடம் செல்" பாருங்கள், "அவனிடம் ஏதாவது இருக்குமானால்" ஆகவே அந்த வழியில்தான் நாம் சமாதானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே சகோதரர் கோட் இங்கே இருக்கிறார். அவர் ஒரு விலையேறப்பெற்ற பையன். சில நேரங்களில் யாராவது சிலர், "சகோதரர் பிரன்காம் அவர்களே, உங்கள் ஊழியத்தின் வெற்றியின் இரகசியம் என்ன?" என்று கூறினார்கள். நிச்சயமாக அது கிறிஸ்துவேதான். "நீங்கள் எப்படி இவ்வளவையும் தாங்கிக் கொண்டு இரவுக்கு பின் இரவு தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள் 11. என்னோடு இருக்கின்ற இந்த ஜனங்கள், இந்த சிறுவர்கள் சில நேரங்களில் பலநாட்கள் உணவும் கூட எடுத்துக் கொள்ளாமல், முகம் குப்புற விழுந்து எனக்கு உதவும்படியாக தேவனிடம் கதறிக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது தேவனால் அதை மறுக்க முடியாது. பாருங்கள் என்னுடைய மனைவி வீட்டில் இருக்கின்றாள். என்னுடைய குழந்தைகள், நான் நேசிக்கின்றவர்கள், ஜனங்கள், என்னுடைய நண்பர்கள், உபவாசம் இருந்து ஜெபிக்கிறார்கள். அங்கே தான் வெற்றி இருக்கின்றது. 12. பாருங்கள், நாம் எல்லோருமே பிரசங்கிக்க முடியாது, நம்மில் சிலர் மற்றவர்கள் செய்யும் ஒரு காரியத்தை செய்ய முடியாது. ஆனால் நாம் எல்லோரும் ஏதோ சில காரியங்களைச் செய்ய முடியும். பார்த்தீர்களா? அது உதவியாக இருக்கும். 13. சற்று இந்த கடிகாரத்தைப் போலவே. அதற்கு ஒரு முள் இருக்கிறது, அது நேரத்தை நமக்கு கூறுகிறது. எத்தனை முறை அந்த ஒரு சிறிய காரியமானது முன்னும் பின்னுமாக சென்று அது என்ன நேரம் என்பதை நமக்கு கூறிக் கொண்டிருக்கிறது. அந்த முள் எப்படி அதை சொல்லிக் கொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் அந்த சிறிய சக்கர சுருளானது அதை முன்னும் பின்னுமாக தள்ளிவிடவிட்டால் அது-அது-அது-அது- எந்த நேரம் என்று காண்பிக்க முடியாது. பாருங்கள்? அந்த சிறிய காரியத்தை சுழற்றுவதற்கு அங்கே ஒரு சுருள் கம்பி இல்லையென்றால் அது முன்னும் பின்னுமாக அசைந்து செல்ல முடியாது. பாருங்கள்? 14. எனவே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டும். அனைத்து சபையாரும் ஜெபிக்க வேண்டும், மேலும் பொதுவான ஜனங்களும் ஜெபிக்க வேண்டும். மூப்பர்களும், தர்மகர்த்தாக்களும் போதகர் மற்றும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து தேவனுடைய பிரசன்னத்திற்குள் ஒரு பெரிய குழுவாக வருகிறோம். 15. இப்பொழுது பாருங்கள், உதாரணத்திற்கு அந்த இசைக் கருவியானது (Piano) ஒரு சத்தத்தை எழுப்புகிறது. எனக்கு அது எப்படி தெரியும்? அது ஒரு சப்தத்தை எழுப்புகிறது என்று எனக்கு தெரியும். அது ஒரு சத்தத்தை எழுப்புகிறது அதை நான் நம்புகிறேன். அது என்னுடைய நம்பிக்கையாக இருக்கிறது. இப்பொழுதும் அந்த பியானோவில் ஒரு சத்தத்தை எழுப்புவதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? என்னுடைய விரலானது அதைத் தொட வேண்டும். சரி இப்பொழுது என் மூளை, என் மனம், அதைப்பற்றி சிந்தித்து பார்க்கிறது. அது நடக்குமா அல்லது இல்லையா என்பதை என் இதயமானது விசுவாசத்தின் மூலம் சொல்வதாக இருக்கிறது இப்பொழுது என்னுடைய விரல் அது ஒரு மகத்தான காரியமாக இருக்கிறது என்று கூறுகிறது. என்னுடைய கண் தீர்க்கதரிசனத்தின் பக்கமாக அதை பார்த்துக் கொண்டிருக்கிறது. 16. சரி, இப்பொழுது நான் சற்று அமர்ந்து அந்த இசைப் பேழையை கவனித்து "சரி அது இசைக்கிறது என்று கூறுவேன் என்றால் அது சாத்தியம் இல்லை. அப்படி அல்ல அது அப்படி செய்யாது, பாருங்கள், இப்பொழுது நாம் செய்ய வேண்டியது, என்னுடைய பாதங்கள் அந்த வேலையைச் செய்ய வேண்டும். 17. இப்பொழுது என்னுடைய பாதங்கள், நல்லது, "நான் கண்ணாக இராதிதனால் அதைக்குறித்து நான் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுமானால் நல்லது. "நான் உன்னை அங்கு கொண்டு போகிறேன் என்று என் கால்கள் கூறுகிறது சரி நாம் போகலாம். பாருங்கள் என் கால்கள் அங்கு செல்கிறது ஆனால் அது அந்த சுருதிக்கட்டையை தொட முடியாது சரி என் கண்கள் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது அந்த சுருதிக்கட்டையை தொட முடியாது. ஆனால் என் விரலானது அதை எடுத்துக் கொள்ளும்படி கூறுகிறது. எனவே மூக்கு "நான் அதைச் செய்வேன்" என்று கூறுமானால் அது அதை செய்ய முடியாது. 18. கண்ணானது "நான் அதைத் தொடுவதற்கு முயற்சிப்பேன்" என்று கூறினால் அது உதவாது. பாருங்கள்? அது என் விரலாக இருக்க வேண்டும். எனவே எல்லாம் ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டும் அதை நான் உடையவனாக இருக்கிறேன். பாருங்கள்? அவ்வளவு தான். (சகோதரர் பிரன்காம் பியோனோவில் சில இசைக் குறிப்புகளை இசைக்கிறார்] 19. இப்பொழுது, விசுவாசம் என்றால் என்ன? மனித சரீரத்தில் எத்தனை புலன்கள் இருக்கின்றன? ஐந்து: பார்த்தல், சுவைத்தல், உணர்தல், முகருதல், கேட்டல். அது சரியா? நல்லது, இப்பொழுது விசுவாசம் என்பது நீங்கள் காணக்கூடாத சுவைத்தல், உணருதல், முகர்தல், கேட்டல் என்பவைகளின் நம்பிக்கையாகவும் நிச்சயமாகவும் இருக்கிறது அது சரிதானே? காணக்கூடாதவைகளின் ஆதாரமாக அந்த ஆறாவது புலன் இருக்கிறது. எனக்கு இன்னும் ஒரு வாரம் இருக்குமானால் அல்லது ஒரு சுகமளிக்கும் ஆராதனையில் அந்த ஆறாவது புலனைக் குறித்து சில காரியங்களை பிரசங்கிப்பேன். 20. இங்கே வாருங்கள் சகோ. பார்டர்ஸ் அவர்களே. நான் உங்களுக்கு காண்பிக்கட்டும், "கண்கள் காண்பது மட்டும்தான் நம்பிக்கையாக இருக்கிறது?" என்று எப்பொழுதாவது ஜனங்கள் கூறியதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? எத்தனை பேர் அதைக் கேட்டிருக்கிறீர்கள்? ஒ, நீங்கள் அதைக் கேட்டிருக்கிறீர்கள், "நான் மிசோரியை சேர்ந்தவன்" என்பது உங்களுக்குத் தெரியும் "நீங்கள் அதை எனக்கு காண்பிக்க வேண்டும்". 21. இப்பொழுது எனக்கு முன்பாக ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கிறான். அவன் பழுப்பு நிற தலை முடியுடன், பழுப்பு நிற தோற்றமுடைய சூட் (Suit), பழுப்பு நிற தலைமுடியடன், பழுப்பு நிற கழுத்துப் பட்டை [Tie] மற்றும் வெள்றைநிற சட்டை அணிந்தி ருக்கிறான். எத்தனை பேர் அதை நம்புகிறீர்கள்? பாருங்கள்? நான் பெற்றுள்ள ஒரு புலன். அவன் அங்கே இருக்கிறான் என்பதை எனக்கு அறிவிக்கிறது. அதை நான் பார்ப்பதாக இருக்கிறது. கொஞ்சம் பின்னால் அடி எடுத்து வைக்கிறேன் இப்பொழுது என்னுடைய புலனால் அவரைக் காண்பது என்பது எனக்கு சாத்தியமற்றது, ஆனால் அவர் இப்பொழுதும் அங்கே இருந்து கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஏன்? நான் அவரை பார்க்க முடியவில்லை. அவர் அங்கு இருந்து கொண்டிருக்கவில்லை என்று என்னுடன் வாதிட விரும்புவீர்களா? "மேலே இருப்பது சகோதரர் பன்டேன்" என்று நீங்கள் கூற முடியும். இல்லை-இல்லை-இல்லை-இல்லை. அது சகோதரர் பன்டேன் அல்ல, அது சகோதரர் ராய் - ராய் பார்டர்ஸ் (Roy Borders). 22. "நீ ஒரு மனிதனின் கரத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய், மனிதர் உன்னைத் தொட்டுக் கொண்டிருக்கவில்லை என்பது எப்படி உனக்குத் தெரியும்." அவன் உண்மையில் ஒரு பெரிய திருமண மோதிரத்தை போட்டுக் கொண்டிருக்கிறான் அது அவன்தான் என்று எனக்குத் தெரியும் பார்த்தீர்களா? இப்பொழுது என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை; ஆனால் இன்னும் நான் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே அவன் அங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியும். கண்களால் காண்பது மட்டும் உண்மையாக இருக்காது அப்படித்தானே, இந்த முறை இல்லை. நிச்சயமாக இல்லை, ஏனென்றால் உணர்வு என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அது சரிதானே? 23. சரி, இப்பொழுது பாருங்கள்(உங்களுக்கு நன்றி). விசுவாசம் என்றால் என்ன? விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் சாராம்சமாக இருக்கிறது. காரியங்களின் நேரடியான ஆதாரங்களாக இருக்கிறது, நீங்கள் காணமுடியாதவைகள், சுவைத்தல், முகருதல், மற்றும் கேட்டல் இவைகள் பாருங்கள்? அப்படித்தான் அது இருக்கிறது நீங்கள் "அந்த சட்டை வெள்ளை நிறத்தில் இருக்கிறது" என்று கூறுகிறீர்கள். சரி, "அது சிவப்பு சட்டை" என்று நான் உங்களிடம் கூறினால், "ஒரு நிமிடம் பொறுங்கள், சகோதரர் பிரன்காம் அவர்களே அந்த சட்டை வெள்ளையாகத்தான் இருக்கிறது" என்று நீங்கள் கூறுவீர்கள். 24. நான், நல்லது, "இல்லை அது சிவப்பு நிறம்" என்று சொல்கிறேன். அது சிவப்பு நிறமாக இருந்தால் மட்டுமே அப்படி இருக்கும். ஆமாம் அது சிகப்பு நிறமாக இருப்பதற்கு சாத்தியம் இருக்குமா? நீங்கள் நிறக்குருடராக (Color Blind) இருந்தால் அது சிவப்பு நிறமாக இருக்கும். பார்த்தீர்களா? அப்படி என்றால் இன்னுமாக காணப்படுகிறவைகள் என்பது நம்பப்படுகிறவைகளாக இருக்காது. பார்த்தீர்களா? 25. ஆனால் உங்கள் விசுவாசம்.... விசுவாசமானது நேர்மறையாக இருக்கும் போது, நீங்களும் கூட மிகவும் நேர்மறையாக இருக்க முடியும். உதாரணமாக, நீங்கள் ஒரு சோதனையில் சிக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு ஜன்னலின் வழியாக ஒரு விபத்தை பார்ப்பதைப் போல. உங்கள் ஆதாரங்களை எடுத்துக் கொள்ள அவர்களுக்கு கடினமாக இருக்கும். காரணம், ஒரு மாயையான தோற்றத்தை நீங்கள் பார்த்திருக்க முடியும். நீங்கள் அதை ஒரு போதும் அதை அப்படி பார்த்தது கிடையாது பார்த்தீர்களா? ஆகவே சில நேரங்களில் நீங்கள் சொல்வது சரி என்று நேர்மறையாக நினைக்கிறீர்கள். 26. நீங்கள் எப்பொழுதாவது சாலையில் சென்று கொண்டிருக்கும் போது சாலையின் மேல் ஒரு வித மாயத் தோற்றத்தை (கானல் நீர்) பார்த்திருக்கிறீர்களா? சற்று, பார்ப்பதற்கு அது தண்ணீரைப் போலவே இருக்கும். சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்திதாளில் வாசித்தேன். அங்கே ஒரு வாத்துக் கூட்டமானது தண்ணீர் என்று நினைத்து, சாலையின் மேல் இருந்த வெளிச்சம் அவைகளின் கண்களுக்கு தண்ணீரைப் போல தெரிந்திருக்க வேண்டும். அவைகள் எல்லாம் கொல்லப்பட்டன. பாருங்கள். ஏனென்றால் அது ஒரு மாயையான தோற்றமாக இருந்தது (கானல் நீர்) 27. அநேக நேரங்களில் மனிதர்கள் ஒரு வித மாயைத் தோற்றத்தைக் கண்டு, "ஓ, இதுதான் அது", என்று நினைத்து அதில் சிக்கிக்கொண்டு தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்கின்றனர். பாலைவ னத்திற்குள் இருப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் பாலைவனத்தின் ஊடாக வளங்களைத் தேடிச் செல்லும் போது அவர்களைக் கவனியுங்கள். அவர்களுடைய உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரும் தீர்ந்து விடுகிறது, ஆகவே அவர்கள் மாயத்தோற்றமான கானல்களை பார்க்கத் துவங்குகின்றனர். அது தண்ணீர் என்று அவர்கள் நினைத்து ஓடிச்சென்று கீழே விழத்துவங்குகின்றனர். அது என்னவாக இருக்கிறது? அது ஒரு சூடான மணல் குவியலாக இருக்கிறது. அதைப் போல பிசாசானவன் ஒரு பொய்யான மாயத்தோற்றத்தை காண்பிப்பான். அதை நீங்கள் ஏதோ ஒரு மகத்தான காரியம் என்று நினைத்துக் கொள்கிறீர்கள் ஆனால் நீங்கள் அங்கே போனவுடன் சூடான மணல் குவியலை மட்டுமே கண்டு உங்களை நீங்களே அதில் இருத்திக் கொண்டு மேலும் மேலும் உங்கள் மீது பாவத்தை சுமத்திக் கொள்வதை காண்பீர்கள். பாருங்கள். நீங்கள் பிசாசின் மாயையான தோற்றத்திற்கு பின்னால் செல்ல வேண்டாம். உங்களுடைய விசுவாச நங்கூரமானது தேவனுடைய வார்த்தையில் சரியாக இருக்கட்டும். அதனுடன் நிலைத்திருங்கள், பாருங்கள், அதையே விரும்புங்கள். அது உங்களை வெளியே இழுத்துக் கொண்டு வருவதாக இருக்கிறது. பார்த்தீர்களா? 28. அந்த ஆறாவது புலனானது மற்ற ஐந்து புலன்களையும் எதிர்க்கும். அந்த ஐந்து புலன்களும் ஆறாவது புலனுக்கு ஏற்புடையதாக இருக்கும்வரை அது சரிதான். ஆனால் மனிதன் வாழ்வதற்காக இந்த ஐந்து புலன்களும் கொடுக்கப்படவில்லை. அவனை அந்த ஐந்து புலன்களும் அந்த ஆறாவது புலனை சார்ந்து அவனை வழிநடத்தும்படியாக அவன் பிறந்திருக்கிறான் தேவன் அதை அவனுக்கு கொடுத்திருக்கிறார். நம்மை வழிநடத்த நம்முடைய இருதயத்தில் தேவன் வாசம் செய்யும் இடமாக அது இருக்கிறது. ஆகவேதான் நாம் ஆறவாது புலனால் வழி நடத்தப்படுகிறோம், நாம் அதை அனுமதித்தால் போதும். இப்பொழுது ஆறாவது புலனானது, வார்த்தை தவறாக இருக்கிறது என்று கூறுமானால் நீங்கள் ஆறாவது புலனில் இருக்கவில்லை என்றாகிறது. பாருங்கள்? அங்கே ஐந்து புலன்கள் இருக்கிறது, ஆனால் ஆறாவது புலனானது, அந்த ஐந்து புலன்களும் அறிவிக்காத காரியங்களை நம்பும்படியாக செய்கிறது. அது ஒரு வகையில் குழப்பமாக இருக்கும் ஆனால் அது உண்மையாக இருக்கிறது, பாருங்கள் நாம் அந்த ஆறாவது புலனால்தான் வழிநடத்தப்படுகிறோம். 29. நான் சற்று, நேரத்திற்கு முன்பு நான்கு நாட்களாக படுக்கையில் காத்துக் கொண்டிருக்கும் ஒரு அன்பான வயதான ஸ்திரீக்காக ஜெபித்தேன். இப்படிப்பட்ட காரியங்களுக்காக எப்படியாவது ஒரு சுகமளிக்கும் ஆராதனையாக மாற்ற வேண்டும் என்றும் நான் உங்களிடம் கூறினேன். தேவனுடைய ஆவியானது அசைவதைக் காண வேண்டும் என்று நான் உணர்கிறேன். அந்த வயதான ஏழையின் காரியம், என்ன வென்று அவளுடைய கரத்தை பிடித்தவுடன் அவளுக்கு என்ன தொல்லை உள்ளது என்று எனக்கு புரிந்தது. ஆகவே நல்லது, அந்த.... 30. (இப்பொழுது என்ன வாசித்தீர்கள்? லூக்காவின் புத்தகம், ஆமாம், ஹா...ஹா...சரி) இப்பொழுது அதிலிருந்து ஒரு பாடத்தை எடுக்க விரும்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால் நான் தேவனுடைய முத்திரை என்பதின் பேரில் பேசுவதாக வாக்களித்திருக்கிறேன் பிரசங்கங்கிக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் இதுபோன்ற பாடங்களைக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? தேவனுடைய முத்திரை அதன்பிறகு தொடர்ந்து மிருகத்தின் அடையாளம் என்பதின் பேரில் பேச விரும்புகிறேன். இன்றிரவு நான் இதிலிருந்து ஒரு பாடத்தை எடுக்க விரும்புகிறேன்; அல்லது இங்கே அவர் வாசித்த இடத்திலிருந்து பரிசுத்த லூக்காவின் புத்தகம், 18-வது அதிகாரம், 35-ம் வசனம் முதல் 43-ம் வசனம் வரையிலும் இதில் அடங்கும். பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக் கொண்டிருந்தான். ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான். நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள், அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள், அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டு வரும்படி சொன்னார். அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப் படுத்திக் கொண்டே, அவருக்குப் பின்சென்றான், ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள். 31. இப்பொழுது, 38-வது வசனத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். தாவீதின் குமாரனே என் மீது இரக்கமாயிரும் இன்றிரவு இதை ஒரு சிறிய நாடகம் போல எடுத்துக் கொள்வோம். எனக்கு தொண்டையில் கொஞ்சம் சோர்வு இருக்கிறது, ஆகவே சிறிது நேரம் அதை ஒரு நாடகமாக பார்க்கலாம். 32. வசந்த காலத்தின் ஒரு குளிர்ந்த காலை வேளையில் நமக்கு காட்சி தொடங்குகிறது. எரிகோ பட்டணத்தின் பழைய இடிந்த சுவர்களின் அருகே அங்கே ஒரு மனிதன் அமர்ந்திருக்கிறான். குருடனான பிச்சைக்காரன், அவனுடைய பெயர் பர்திமேயு அல்லது பர்திமேயுஸ் அப்படி அழைக்கப்படுகின்ற ஒன்று என்று நமக்குத் தெரியும்; அந்த நாட்களில் நிறையப் பிச்சைக்காரர்கள் இருந்தனர். இரவு முழுவதும் அவன் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். நம்மில் பலருக்கு அப்படிப்பட்ட இரவுகள் எப்படி இருக்கும் என்பது தெரியும். எப்பொழுதும் கொஞ்சம் கூட ஒய்வு இருக்காது. ஆகவே படுக்கையின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் வரையிலும் அந்த வயதான ஏழை மனிதன் உருண்டு கொண்டிருந்தான். அவனால் தூங்க முடியவில்லை அதனால் அவன் தாமதமாக எழுந்து அவனுடைய இடத்திற்கு வந்தான். அங்கே வியாபாரிகள் உள்ளே வந்து கொண்டிருப்பார்கள் எனவே பிச்சைக்காரர்கள், குருடர்கள், குணப்படுத்த முடியாத தொழுநோயாளிகள், ஊனமுற்றோர், மற்றும் வறுமையில் வாடும் மக்கள், மற்றும் இப்படிப்பட்டவர்கள் அங்கே இல்லையென்றால் அவர்கள் முதலில் சந்திக்கும் பிச்சைக் காரர்களுக்கு ஒரு நாணயத்தை கொடுப்பார்கள், அது சற்றேறக் குறைய அதைத் தீர்த்து வைத்து விடுகிறது. அந்த நாளுக்கு அவர்களால் கொடுக்க முடிந்த உதவி அவ்வளவுதான். 33. அவன் ஆறு மணிக்கெல்லாம் வந்திருக்க வேண்டும் அவன் தூக்கததை இழந்ததால் தன்னுடைய இடத்திற்கு மிகவும் தாமதமாக வந்திருந்தான். அது காலை எட்டு மணி என்று வைத்துக் கொள்ளலாம் என்று வைத்துக் கொள்வோம், மேலும் அவனுக்கு அங்கே அது ஆறுமணியைப் போல இருந்திருக்க வேண்டும். தாமதமாக வந்ததின் காரணம் அதிக நேரம் தூங்கியதால்தான். இரவின் பெரும்பாலான நேரம் அவன் உருண்டு புரண்டு படுத்ததினால் அவனால் சரியாக தூங்க முடியவில்லை. அவன் இரவு முழுவதும் கனவு கண்டு கொண்டிருந்தான். அவனுக்கு மீண்டும் பார்வை கிடைத்து விட்டதாக அவன் கனவு கண்டான். எனவே அவன் விழித்துக் கொள்வான், பிறகு திரும்பவும் தூங்கி விடுவான். 34. தேவன் கனவுகளின் மூலம் நம்மை பல நேரங்களில் எச்சரிக்கை செய்கிறார் என்று நான் நம்புகிறேன். அப்படி நீங்கள் நினைக்க வில்லையா? அவர் எப்பொழுதுமே அதைச் செய்கிறார், மேலும் கடைசி நாட்களில் சொப்பனம், சொப்பனங்கள் மற்றும் தரிசனங்களை காணச் செய்வதாக அவர் வாக்குக் கொடுத்துள்ளார். எனவே நாம் பர்திமேயுஸ்-ன் சொப்பனத்தைக் குறித்தும் அவன் திரும்பவுமாக தனது கண் பார்வையைப் பெற்றுக் கொண்டு காண முடிந்தைக் குறித்தும் சிந்தித்துப் பார்ப்போம். 35. ஆகவே அன்று காலையில் அவன் அங்கு செல்வதற்கு தாமதமாகிவிட்டது. எல்லா வியாபரிகளும் நகரத்திற்குள் சென்று விட்டனர். மேலும் அந்த பெரிய வணிக நகரம் அப்படி இருந்தது. அவர்கள் அனைவரும் தங்கள் பொருட்கள், மற்றவைகளை விற்பதற்காக சீக்கிரமாகவே அந்த சந்தைக்குள் சென்று விட்டனர். அதனால் அந்த நாளே இல்லாததைப் போல இருந்தது. அவனுக்கு சாப்பிடுவதற்கு ஒரு காசும் கூட இல்லை. அவனுடைய பழைய கிழிந்த மேலங்கியை சுற்றிக் கொண்டு, அதைப் போல அவனுடைய சுருங்கிப் போன கைகள், முகம் முழுவதும் நரைத்துப்போன தாடியுடன், பார்வையற்றவனாக சாலையின் ஓரமாக அவனுடைய இடத்திற்குச் சென்று அங்கே அமர்ந்து பிச்சைகேட்க முயற்சிப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஓவ்வொருவருக்கும் அவர்கள் உட்கார்ந்து பிச்சை எடுப்பதற்கு ஒரு சொந்த இடம் அங்கே இருந்தது. 36. அது ஒரு பரிதாபகரமான காரியமாக இருந்தது. நான் இந்தியாவில் அவர்களைக் கவனித்தேன், இந்தியாவில் நானூற்று எழுபது மில்லியன் (நாற்பத்தி ஏழு கோடி) மக்கள் இருக்கின்றனர். ஏறக்குறைய, அந்த நானூற்று எழுபது மில்லியன் மக்களில் நானூறு மில்லியன்(நான்கு கோடி பேர்) ஜனங்கள் பிச்சைக்காரர்கள் என்று நான் கூற முடியும். எல்லா இடங்களிலும் பிச்சைக்காரர், பிச்சைக்காரர், பிச்சைக்காரர், ஒவ்வொரு கம்பத்தின் கீழேயும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இடம் இருந்தது. சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு அவர்கள் செய்யும் காரியங்கள், வித்தைகள் ஒரு அற்புதமான காட்சியாக, மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கும். 37. பின்னர் அவன் அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். அந்த மோசமான இரவுக்கு பிறகு வேறு யாருமே இல்லாததைக் கண்டான். எனவே அவன் போய் அந்தப்பாறை மீது உட்கார்ந்து கொள்ளலாம் என்று நினைத்தான். அந்தப் பாறைகள் யோசுவாவின் நாட்களில் அந்த சுவர்கள் இடிந்து கீழே விழுந்த அந்த பாறைகள் ஒருபக்கமாக கிடந்தன என்று உங்களுக்குத் தெரியுமா. எனவே அவன் எருசலேம் நோக்கிச் செல்லும் வடக்கு வாசலின் பக்கத்திலிருந்து வெளியே செல்ல ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். அவன் அங்கே சென்று சூரிய வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டான் "சரி இப்போது பகல் பொழுது வந்து கொண்டிருக்கிறது, நான் இங்கே சற்று வெயிலின் வெப்பத்தில் அமர்ந்து கொள்வேன். எனக்கு இந்த காலையில் கொஞ்சம் குளிராக இருக்கிறது. மேலும் என்னுடைய உடைகள் நனைந்து போய்விட்டது. நான் கொஞ்ச நேரம் இந்த சூரிய வெளிச்சத்தில் அமர்ந்து கொள்ளலாம் என்று நம்புகிறேன் எனக்கு கிடைக்காமல் போன அந்த என்னுடைய பணத்தை நான் பெற்றுக் கொள்ள முடியும். அப்படி நான் செய்யாமல் போனால் என்னுடைய குடும்பம் இன்று பசியில் வாடும்" என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். 38. அங்கே அவன் அமர்ந்து கொண்டு தன் சொப்பனத்தைப் பற்றி யோசிக்கத் துவங்கினான். "நேற்று இரவு என்னால் பார்க்க முடிவதைப் போல நான் கனவு கண்டேன். ஓ, அந்த வானம் எவ்வளவு அழகாக இருக்க வேண்டும், அந்தக் குன்றுகள் மீண்டும் பூத்துக் குலுங்கத் துவங்கிக் கொண்டிருக்க வேண்டும்". 39. பின்னர் அவனது மனம், அவன் சிறுவனக இருந்த காலத்தில் யோர்தான் நதிக்கரையில் வசித்து வந்த காலத்திற்கு சென்றது. மேலும் அந்த வசந்த கால துவக்கத்தில் அன்பைக் குறிக்கும் அந்த மலர்கள் (Buttercops) எப்படி மலர்ந்து வெளியே வருகின்றன, மேலும் அந்த சிறிய மலர்கள். எப்படியாக அந்த சிறிய பையன் அந்த குன்றை சுற்றிலும் ஓடி திரிந்து, அந்த மலர்களை பறித்து அங்கே படுத்துக் கொள்வான். மேலும் ஓ, அந்தக் காலைப் பொழுதில் வானம் அவ்வளவு அழகாக இருந்தது, அந்த பெரிய வெள்ளை நிற மேகக் கூட்டமானது வசந்த காலத்தில் மிக அருகில் வந்து சென்று கொண்டிருக்கும், மேலும் - மேலும், எப்படி அந்த பசுமையான துளிர்கள் வளர்ந்து மேலே வந்து கொண்டிருக்கும், எப்படி அந்த நீலநிற வானம், மற்றும் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் யோர்தான் நதி எப்படி யூதேயா மலைக ளிலிருந்து பனியானது கீழே இறங்கிக் கொண்டிருக்கும், மேலும் எப்படி அந்த மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும். 40. அதன் பிறகு நாம் அனைவரும் கேட்க விரும்பும் ஒரு பழக்கமான குரலைப் போல, "பர்திமேயுஸ் என் சிறிய பையனே, உன்னுடைய மதிய உணவு தயாராக இருக்கிறது" என்ற ஒரு தாயின் இனிமையான குரலின் அழைப்பைக் கேட்பான். பிறகு அவனது தந்தை எங்காவது வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, எப்படியாக அவன் உள்ளே வருவான், அந்த யூத தாயானவள் அவனுக்காக படிக்கட்டில் காத்துக் கொண்டிருப்பாள். அவனை தன் கைகளில் அணைத்துக் கொண்டு, கட்டிப்பிடித்து அவனை கீழே அமரவைத்து அவனுடைய இரவு உணவை அவளுக்கு கொடுப்பாள். 41. பின்னர் அவன் அதை சாப்பிட்டு முடித்த பிறகு தாழ்வாரத்திற்கு செல்வான். மேலும் அவனை தாழ்வாரத்தில் அமரவைத்து அவனுடைய தாயார் அவனை தாலாட்டுவாள், அவன் பிற்பகல் தூக்கத்தை எடுத்துக் எடுத்துக் கொள்வான். அவனுடைய கண்களுக்கு முன்பாக தொங்கிக் கொண்டிருக்கும் தலைமுடியை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அந்த அழகான பெரிய மென்மையான கண்களை அந்த தாயானவள் பார்த்தவாறு, அவனுடைய சிறிய கன்னங்களில் முத்தமிட்டு, "ஓ நான். பர்திமேயுவாகிய உன்னைப் போல் ஒரு சிறிய மென்மையான பையனை பெற்றுக் கொண்டதற்காக நான் நன்றியுடையவளாக இருக்கிறேன். உனக்குத் தெரியுமா பர்திமேயுஸ், நீ பிறந்த பொழுது யெகோவா தேவனுக்கு உன்னை பிரதிஷ்டை செய்து விட்டேன். அவர் தம்முடைய மகிமை விளங்கும்படியாக ஒருநாளில் உன்னை பயன்படுத்துவார் என்று எப்பொழுதும் நான் அதை விசுவசித்துக் கொண்டிருக்கிறேன்". 42. "நான் இங்கு பார்வை அற்றவனாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நான் விளையாடிக் கொண்டிருந்த மற்றும் பார்த்த இடங்கள் இங்கே இருந்து ஒரு மைல் தூரத்திற்கும் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆகவே யெகோவா எப்படி என்னை பயன்படுத்த முடியும்? நான் பார்வையற்றவனாக இருக்கிறேன். எனக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை" என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். 43. தேவன் அதிசயிக்கத்தக்க வழிகளில் தம்முடைய அற்புதங்களைச் செய்கிறவராக இருக்கிறார். எப்பொழுதுமே நாம் அறிந்து கொள்ள முடியாது என்பது உங்களுக்கு தெரியும்; நம்முடைய குழந்தை களுக்காக அல்லது வேறு எதற்காகவோ நாம் ஜெபம் செய்யும் பொழுது, தேவன் அந்த ஜெபத்திற்கு பதில் அளிப்பார். என்று நாம் விசுவசிக்கிறோம் இன்று நான் புறப்படுவதற்கு முன்பு, தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது; மேலும் அந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு "அவர்களுக்காக ஜெபியுங்கள்" என்று தொடர்ந்து தொலைபேசியில் கூறிக் கொண்டிருந்தனர். 44. "அதைத் தேவனிடம் ஒப்படைத்து விடுங்கள்" நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவு தான். ஆகவே இனிமேல் உன் கரங்களை அதில் வைக்காதே. தேவனிடம் அது இருக்கட்டும். அதைக்குறித்து நீ ஏதேனும் செய்யப் போய்க் கொண்டிருப்பாயானால் பிறகு தேவன் பின்னால் நின்று கொண்டு நீ அதை முடிக்கும் வரையிலும் உன்னை அனுமதித்து விடுவார். ஆனால் நீ அதை தேவனிடம் ஒப்படைத்து அவரிடம் விட்டுவிட்டால் அவர் அதைச் செய்வார்" என்றே நான் கூறுவேன். நீங்கள் அவரை நம்ப மட்டும் செய்யுங்கள். பின்னால் நின்று கொண்டு அதை செய்யாதீர்கள். ஆனால் நம்புங்கள். நீதிக்காகவும், தேவனுடைய சித்தத்தை நம்பும்படியாகவும் அங்கே கிருபைானது உள்ளே வைக்கப்பட்டிருக்கிறது. 45. பின்பு, சந்தேகமே இல்லை, என்று தன் இருதயத்தில் கூறிக் கொண்டான். வேதாகமத்தில் உள்ள கதைகளை அம்மா எப்படி வாசித்துக் காண்பிப்பாள் என்பது அவனுடைய ஞாபகத்திற்கு வந்தது. ஒரு காலத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு வேதாகமக் கதைகளை படித்துக் காண்பிக்க நேரம் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது அவர்களுக்கு அதற்கு நேரமில்லை. அவர்கள் புதிய காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்று பெண்களுக்கான விருந்துக்கும், சீட்டு விளையாடவும் மற்ற காரியங்களுக்கும் செல்வதற்குத்தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறது. 46. முன்பெல்லாம் வழக்கமாக தாய்மார்கள் ஊற்று நீரை எடுத்து கொதிக்க வைப்பார்கள். என் தாயாரிடம் ஒரு பழைய பெரிய இரும்பு கொதிகலன் (Kethle) இருந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது, அவர்கள் அதை வெளியில் வைத்து அதிக நேரம் துணிகளை சலவை செய்து கொண்டிருப்பார்கள். இப்பொழுதோ நவீன அம்மா என்பவள் ஒரு பொத்தானை மட்டுமே அழுத்தி பாத்திரங்களை கழுவுவது, துணிகளை சலவை செய்வது போன்ற மற்ற அனைத்து வேலைகளையும் செய்கிறவளாக இருக்கிறாள். ஒரு பொத்தானை அழுத்துவது மட்டுமே. ஆனால் நமது நவீன வசதிகள் நம்மை எங்கோ கொண்டு சென்று விட்டதாக நான் நினைக்கவில்லை, அது என்னவாக இருக்கிறது, நம்மை மோசமான சோம்பேறிகளாக ஆக்கி வைத்துள்ளது, மாரடைப்பு மற்றும் ஒவ்வொரு காரியங்களுடனும் அது நம்மை கொன்று கொண்டிருக்கிறது. 47. சூசன்னா வெஸ்லி (வெஸ்லியின் தாயார்)க்கு பதினேழு குழந்தைகள் இருந்தார்கள். நூறு வருடங்களுக்கு முன்பு அவர்களுடைய ஒய்வு இல்லாத அந்த தருணங்களில்கூட அவர்கள் வேதாகமத்தை வாசித்து மற்றும் குழந்தைகளுக்காக மூன்று மணி நேரம் ஜெபிப்பதுண்டு என்ன நிகழ்ந்தது? அவர்களிடம் இருந்துதான், அங்கே இருந்துதான் உலகையே திரும்பிப் பார்க்க பார்க்க வைத்த ஜான்வெஸ்லி மற்றும் சார்லஸ் வந்தனர். சிறிது நாட்களுக்கு முன்பு சூசன்னா வெஸ்லியின் கல்லறையின் அருகே நின்று அதன் மேல் கைகளை வைத்து "தேவனே இவரைப் போன்ற சில தாய்மார்களை அமெரிக்காவிற்கு தருவீராக"என்று ஜெபித்தேன். அது சரிதான் அவர்களிடமிருந்து தான் ஒரு சார்லஸ்-ம் மற்றும் ஒரு ஜான் வெஸ்லியும் வந்தனர். 48. சார்லஸ், சிறந்த வேதாகமப் பாடல்களை இந்த உலகிற்கு வழங்கினார். மேலும் ஜான் நிச்சயமாகவே ஓ...நான்... நெருப்பில் இருந்து சிதறும் ஒரு அக்கினிப் பொறியாக அவர் இருந்தார். அவர் எப்படிப்பட்ட தேவனுடைய ஒரு மகத்தான மனிதராக இருந்தார். 49. ஆனால் இன்று நமக்கு உள்ள இந்த நவீனமான வசதிகளையெல்லாம் வைத்துக் கொண்டு நம் குழந்தைகளுக்கு வேதாகமத்தை படித்துக் காண்பிப்பதற்கு பதிலாக நாம் தொலைக்காட்சியை திருப்பி அவர்களுக்கு பொருந்தாத ஏதோ சில காரியங்களை பார்க்கும்படியாக செய்து கொண்டிருக்கிறோம். அது சரியே. மேலும் ஒரு காரியம், நாம் அவர்களுக்கு சிறிய பழைய கதைப்புத்தகங்களையும், பழைய படபுத்தகங்களையும் மரக்கறி தயாரிக்க எரிப்பதற்குக் கூட விலை போகமால் இருக்கும். மருந்து கடைகளில் இருக்கும் ஏதோ ஒரு வகை மர அலமாரி போன்றவைகளை வாங்கிக் கொடுக்கிறோம். இன்னும் கூட நம்முடைய குழந்தைகளின் தொண்டைக்குள் இந்த மாதிரியான காரியங்களை திணிக்கிறோம். ஏன், அந்த அமெரிக்கன்.... 50. அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு பையனும் டேவி க்ராக்கெட் (Davy Crackett) யார் என்று உங்களிடம் சொல்ல முடியும் என்று நான் பந்தயம் கட்டுகிறேன். ஆனால் அவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர்களுக்கு கூட இயேசு கிறிஸ்து என்பவர் யார் என்று உங்களிடம் கூற முடியாது என்று நான் நினைக்கிறேன். ஓ, லோன் ரேஞ்சர் (Lone Ranger) அல்லது அதைப் போல சில சினிமா நட்சத்திரம் இவர்களைப் பற்றி அவர்களுக்கு எல்லாம் தெரியும் காரணம் என்னவென்றால் அது அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளது. 51. வேதாகமம் என்பது ஒரு புத்தகமாக இருக்கிறது, அவர்கள் அதை தள்ளிவைத்து விட்டு ஊழியக்காரர்கள் வரும் போது, தூசு தட்டி அதை தேடிப்பிடித்து வெளியில் இப்படி மேலே வைத்துவிடுவார்கள். அது ஒரு போதும் வாசிக்கப்பட்டிருக்காது. இன்று நமக்கு என்ன தேவை என்றால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை மீண்டும் பண்டைய நாகரீக பாணியிலான ஜெபத்திற்கு அழைத்துச் செல்வது மட்டுமே, சிறுவர் குற்றங்களை (juvenile delinquency) சரிபடுத்துவதற்கான ஒரே தீர்வு. எனக்கு தெரிந்தமட்டில் அது தான் தாய்மார்களாக இருக்கிறது. சரி. அது நல்ல நேர்மையான 52. தேசத்தின் பலபகுதிகளில் இருந்து வந்த கென்டக்கியில் உள்ள எழுத்தறிவு இல்லாத தாய்மார்கள் பேசுவதை நான் கேட்கிறேன். அவர்கள் வலது கைக்கும் மற்றும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுடைய பெண்களில் யாராவது ஒருத்தி தலைமயிர் முழுவதும், அவளுடைய ஆடைகள் முழுவதும் கலைந்து, இப்படி உதட்டுச்சாயம் பூசினவளாக, மேலும் அரை போதையில் சிகரெட் புகைத்துக் கொண்டு இரவில் வருகிறாள் என்று வைத்துக் கொள்வோம். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவள் மூன்று மாதம் வரையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாதவளாக இருப்பாள் என்று நான் உங்களுக்கு உத்திரவாதம் தருகிறேன். ஆம் ஐயா. நீங்கள் எழுத்தறிவின்மையைப் பற்றி பேசுகிறீர்கள். நமக்கு அப்படிப்பட்ட தாய்மார்கள் அதிகமாக தேவை. (ஆம், ஐயா, ஆம், ஐயா) அது மீண்டும் ஒழுக்கத்தைக் கொண்டு வருகிறது. 53. எங்களுடைய வீட்டில் பத்துக் கட்டளைகள் (Ten Commandments) இருந்தன, கதவின் மேல் அவர்கள் அந்த பத்து கட்டளைகள் எழுதப்பட்ட மரப்பலகையில் இப்படி தொங்க விட்டிருந்தனர். நாங்கள் எங்களுடைய கல்வியை அங்கே இருந்துதான் பெற்றுக் கொண்டோம். ஹீம்...ஹீம்... அது சரி. என் தந்தை அருகில் வந்து வில்லியம் என்று கூறுவதை காண முடிகிறது. ஓ நான்" என்று கூறுவேன். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர் அப்படி செய்ததற்காக நான் மகிழ்ச்சியுடையவனாக இருக்கிறேன். அது சரி. 54. வேதாகமக் கதைகளில் தேவன் என்ன செய்தார் என்பதை எப்படியெல்லாம் அவனுக்கு சொல்லிக் கொடுத்திருப்பாள் என்று பர்திமேயுஸ் அவனுடைய விலையேறப்பெற்ற சிறிய தாயைக் குறித்து சிந்தித்திருப்பான். "பர்திமேயுஸ், உனக்குத் தெரியுமா, தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின் படி, நாம் யூத ஜனங்களாக இருக்கிறோம். ஏனென்றால் நாம் அவரை நேசித்து அவருக்கு ஊழியம் செய்கிற ஜனங்களாக இருப்பதற்கு அவர் நம்மை தெரிந்து கொண்டார். பர்திமேயுஸ் நீ ஒரு நாள் மகத்தான மனிதனாக வாழப் போகிறாய். நீ இஸ்ரவேலின் இராஜாவாக இருப்பாய் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் - நான் விரும்புகிறேன். நீ...." ஓவ்வொரு தாய்மார்களின் எதிர்பார்ப்புகளும் அவர்களுடைய குழந்தை ஏதோ ஒரு காரியத்தில் மகத்தானவனாக இருக்க வேண்டும். என்று நினைத்துக் கொண்டிருப்பாள். அவளும் அப்படித்தான் நினைத்து இருக்க வேண்டும். மேலும் "நான் ஜெபம் ஏறெடுத்து விட்டேன். ஆகவே நீ இந்த உலகத்திற்கு வந்து கொண்டிருந்த போதே, உன்னை தேவன் என் இருதயத்தில் வைத்து விட்டார் என்று எனக்குத் தெரியும், ஆம். நான் உன்னுடைய சிறிய ஜீவனை தேவனுக்குக் கொடுத்துவிட்டேன். மேலும் இந்த மகத்தான தேவனுக்கு நீ சேவை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பது உனக்குத் தெரியும். பர்திமேயுஸ், அவர் எவ்வளவு மகத்தான தேவனாக இருக்கிறார் என்று நான் உனக்கு கூறப் போகிறேன். பர்திமேயுஸ் நாம் எகிப்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம், நாம் ஒரு சமயம் அடிமைகளாக இருந்தோம், எப்படி தேவன் செங்கடலை திறந்தார் என்றும் இஸ்ரவேல் புத்திரர்களை வானத்தின் மன்னாவினால் போஷித்தார், இறைச்சியை வரவழைத்து பாலைவனத்தில் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்து, இப்படிப்பட்ட எல்லா மகத்தான காரியங்களையும் அவர் செய்தார் என்று உனக்குத் தெரியும். மேலும், ஓ அவனுடைய சிறிய பிரகாசமான கண்கள்....சற்று "ஓ...அம்மா, அதைச் செய்த அந்த மகத்தான யெகோவா தேவன் இன்னுமாக ஜீவிக்கிறார்?" என்று கேட்டிருப்பான். "ஓ, ஆமாம் அன்பே, அவர் எப்பொழுதும் இருந்ததைப் போலவே, இன்றும் அவர் அதே யெகோவா தேவனாக இருந்து கொண்டிருக்கிறார்" என்று அவள் கூறினாள். 55. அவன் அந்தக் கதையை மிகவும் விரும்பினான், மேலும் இஸ்ரவேல் புத்திரர்களுக்கு, அந்த நாளில் தானே பெரிய மகத்தான வல்லமை கொண்ட யோசுவா இஸ்ரவேல் புத்திரர்களுடன் எப்படி அந்த பழைய கோட்டையை கடந்து சென்றார்கள் என்பதைப் பற்றி கூறுவதுண்டு. அங்கே எரிகோவில் நாங்கள் சென்று மளிகைப் பொருட்களை பெற்றுக் கொள்வோம். அந்த நகரத்தை சுற்றி மகத்தான தேவனுடைய ஊழியக்காரன் அந்த ஊழியக்காரன் அந்த யுத்தவீரனாகிய யோசுவா, எப்படி நடந்து சென்றிருப்பார். எப்படி மோசே அந்த மலை உச்சியின் மேல் நின்று கொண்டு அந்த ஆற்றின் கொந்தளிக்கும் அலைகளை பார்த்திருப்பார், "இது ஒரு நல்ல தருணம், நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்" நதியை இந்த வருடத்தில் இந்த நேரத்தில் கடந்து செல்வதற்கு தேவன் ஒரு திறமையற்ற பொறியாளராக இருக்கிறார் பொண்டிருக்கிறார் என்று அவிசுவாசி நினைத்திருப்பான். ஆனால் சில நேரங்களில் தான் தேவன் என்பதை நிருபிக்கும்படியாக மோசமான நேரத்தை எடுத்துக் கொள்வார்" ஆம் ஐயா, அந்த நதியின் வழியாக அவர்கள் மேலே கொண்டு வரப்பட்ட போது தேவன் அப்படிப்பட்ட ஒரு நேரத்தை எடுத்துக் கொண்டார். அப்பொழுது அந்த நதி மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. இல்லை, அது அப்படி அல்ல...அவர் தேவன் என்பதை உங்களுக்கு நிருபிக்கும்படியாகவே அதைச் செய்ய விரும்புகிறார். அவர் தனது மகிமையை வெளிப்படுத்த விரும்புகிறார். ஓ எனக்கு அது மிகவும் பிடிக்கும், அவர் அவர் தேவனாக இருக்கிறார் என்பதைக் காண எனக்கு மிகவும் பிடிக்கும். 56. பின்னர் அந்த சிறிய பர்திமேயுவுக்கு பிடித்த கதைகளில் ஒன்று சூனேமித்தியாள் என்ற ஸ்திரீயின் கதையாகும், ஏனெனில் அங்கே ஒரு சிறுவன் இருந்தான் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த பெரிய மகத்தான தீர்க்கதரியாகிய எலியாவைக் குறித்து, தேவன் அவரை எப்படி வல்லமையுள்ள ஒரு மகத்தான தீர்க்கதரிசியாக ஆக்கினார் என்று அவள் கூறியிருக்கிறாள். அவன் வனாந்தரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான், அவனுக்கு நிறைய ஆடைகள் இல்லை, ஒரு தோல் துண்டை மட்டும் தன் உடலில் சுற்றிக் கொண்டவனாக இருந்தான், அப்படி இருந்த போதும் அவன் மகத்தான தேவனுடைய மனிதனாக இருந்தான். தேவனுடைய அபிஷேகத்தின் கீழாக வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் ஒரு குறிப்பிட்ட நகரத்தின் வழியாக கடந்து சென்று கொண்டிருந்தான்; அங்கே சூனேமித்தியாள் என்கிற ஒரு ஸ்திரீ இருந்தாள். அவள் தேவனை நேசிப்பவளாகவும், கருணை உள்ளம் கொண்ட ஒரு ஸ்திரீயாகவும் இருந்தாள், இருப்பினும் அவள்-அவள் அவள்-அவள் தேவனை நேசித்த ஒரு புறஜாதி ஸ்திரீயாக இருந்தாள். 57. அன்பே "பர்திமேயுஸ், நாம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களாக இருக்கிறோம், ஒரு நாளில் அந்த மகத்தான மேசியா வருவார் என்றும் மேலும் அவர் வரும் பொழுது எல்லா தேசங்களாலும் அழைக்கப்படும் ஒருவராக இருப்பார் உனக்குத் தெரியும் ஏனென்றால் இந்த சூனேமித்தியாள்...தேவனிடத்தில் அன்பாக இருக்கும் அனைவ ரிடத்திலும் அவர் அன்பாகவே இருக்கிறாள். உதவி தேவை என்று யார் விரும்புகிறாய் அவர்களுக்கு அவர் உதவி செய்ய விரும்புகிறார்." இப்படி அவள் கூறியிருக்க வேண்டும் என்று நான் சொல்லக்கூடும். 58. "எனவே பர்திமேயுஸ், இந்த கனம் பொருந்திய ஸ்தீரீயானவள், இந்த பரிசுத்தமான மனிதன் அந்த நகரத்தின் வழியாக கடந்து சென்றதைப் பார்த்திருக்க வேண்டும். எனவே அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினாள், ஏனென்றால் அவள் தேவனை நேசித்தாள், மேலும் அவன் ஒரு தேவனுடைய ஊழியக்காரன் என்று அவள் அறிந்திருந்தாள். அவனுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினாள் எனவே அவன் வந்து கொண்டிருப்பதை அவள் பார்த்தாள் உள்ளே வந்து தங்களுடன் தங்கியிருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். அவளுடைய கணவன் ஒரு செல்வந்தனாக இருந்தார். ஆகவே, ஒரு நாள் அவள் கணவனிடம் உங்களுக்குத் தெரியுமா, அன்பே, மகத்தான, தேவனுடைய இந்த பரிசுத்தவான் இங்கே போக்கும் வரத்துமாக இருக்கிறார், மேலும் கர்மேல் மலைக்கு மேலே ஒரு குகையில் வசித்து வருகிறார். அவர் இங்கே வந்து செல்லும் போது தங்கிச் செல்லும்படியாக நம் வீட்டில் அவருக்கு ஒரு சிறிய அறை ஒன்றை கட்டினால் நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். உண்மையில் நாம் அப்படிச் செய்தால் அது அருமையாக இருக்கும், ஏனென்றால் நாம் இருவருமே தேவனிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் அவர் தேவனாகவும், தேவனுடைய பிரதிநிதியாகவும் இருக்கிறார் என்றும் நாம் விசுவசிக்கிறோம். பூமியில் தேவனுடைய பிரதிநிதியாக இருப்பதே மிகவும் மேலான ஒழுங்காக இருக்கிறது என்று அவளுடைய கணவனிடம் கூறினாள். "ஆகவே அவளுடைய கணவன், நானும் கூட அது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறினான் எனவே அவர்கள் அங்கே ஒரு சிறிய வீட்டை கட்டினார்கள். 59. ஒருநாள் எலிசாவும் அவனுடைய வேலைக்காரன் கேயாசியும் அங்கே வந்து அந்த சிறிய அறை கட்டியிருப்பதைக் கண்டு உள்ளே சென்ற போது அங்கே ஒரு சிறிய படுக்கை, ஒரு சிறிய நாற்காலி, கொஞ்சம் தண்ணீர் இப்படி ஒவ்வொன்றையும் அங்கே வைத்திருந்தனர். இந்த சூனேமியாளுக்கு நான் என்ன செய்ய வேண்டும், அவள் நம்மேல் இவ்வளவு அன்பாக இருக்கிறாளே; ஒருவேளை அன்பை திருப்பிக் கொடுக்க, அவளுக்காக நான் இராஜாவிடத்தில் போய் ஏதாவது பேச வேண்டுமா அல்லது சேனாதிபதியிடத்தில் அல்லது வேறு யாரிடத்திலாவது பேச வேண்டும் என்று விரும்பலாம் நீ சென்று அவளிடத்தில் கேள்' என்றான். 60. "ஆனால் பர்திமேயுஸ் உனக்குத் தெரியுமா; அந்த ஸ்திரீயானவள் எந்த ஒன்றையுமே கேட்கவில்லை. ஆனால் கேயாசி திரும்பவுமாக வந்து "தேவனுடைய மகத்தான தீர்க்கதரிசியாகிய எலிசாவே, அந்த ஸ்திரீக்கு குழந்தைகள் எதுவும் இல்லை, அவள் மலடியாய் இருக்கிறாள்" என்று கூறினான். 61. மேலும், பர்திமேயுஸ், எந்த தாயும் உன்னைப் போல ஒரு சிறிய இனிமையான பையன் இருக்க வேண்டும் என்றே விரும்புவாள்" என்று உனக்குத் தெரியும். பாருங்கள் காரணம் உன்னைப் போல ஒரு சிறிய பையனை எனக்கு கொடுத்த யெகோவா மிகவும் நல்லவராக இருக்கிறார். எனவே அந்த ஏழை தாயும் உன்னைப் போல ஒரு சிறிய பையன் வேண்டுமென்று விரும்பினாள். 62. "ஆகவே நீ அவளிடம் சென்று, எனக்கு முன்பாக அவளை வந்து நிற்கச் சொல்" என்று எலிசா கூறினான். அந்த ஸ்தீரியானவள் உள்ளே வரும் பொழுது எலிசா என்ன செய்ய வேண்டும் என்று ஒரு தரிசனத்தை பார்த்திருப்பான் என்பதில் சந்தேகம் இல்லை.'ஒரு உற்பத்தி கால திட்டத்தில் நீ ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய்' என்று கூறினான். எனவே அவள் வெளியே சென்றாள். மேலும் என்னவென்று உனக்குத் தெரியுமா பர்திமேயுஸ்? அந்த தாயானவள் ஒரு அழகான சிறிய அழகான சிறிய பையனை பெற்றுக் கொண்டாள், யூத சிறிய பையனாகிய உன்னைப் போலவே ஒரு சிறிய புறஜாதி பையனை பெற்றுக் கொண்டாள். எவ்வளவாக அந்தப் பையனைக் அவள் நேசித்திருப்பாள். எவ்வளவாக அந்த இனிமையான காரியத்தைக் குறித்து அவள் நினைத்திருப்பாள். 63. அவனுக்கு சுமார் பதினொரு வயது ஆன போது தன் தந்தையுடன் அறுவடைக்காக வயலுக்குச் சென்றான். மேலும் அவன் என் தலை வலிக்கிறது, என் தலை மேலும் மேலும் வலிக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தான். சூரிய வெப்பத்தால் அவன் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். 64. எனவே அந்த தகப்பன் அவனை அவனுடைய தாயின் மடியில் கொண்டு போய் சேர்க்கும் படி தன் வேலைக்காரனிடத்தில் கூறி அனுப்பினான். அவள் அவனை நண்பகல் வரை தன் மடியில் வைத்திருந்தாள் பிறகு அந்த ஏழைச் சிறுவன் இறந்து விட்டான். பர்திமேயுஸ், இப்பொழுது அந்த புறஜாதி ஸ்தீரியானவள் என்ன செய்தாள் என்று நீ கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவள் அவனை எடுத்துக் கொண்டு போய் அந்த தீர்க்கதரிசியின் படுக்கையின் மீது கிடத்தினாள். 65. இப்பொழுது அங்கே ஒரு அருமையான வெளிப்பாடு இருக்கிறது. பாருங்கள்? அவள் தன்னுடைய சொந்த படுக்கையில் அவனை கிடத்தவில்லை, அவனுடைய தகப்பனுடைய படுக்கையிலோ அல்லது அவளுடைய படுக்கையிலோ கிடத்தவில்லை, அங்கே தீர்க்கதரிசி தூங்குகின்ற அவனுடைய படுக்கையில் கிடத்தினாள். பிறகு அவள் தன் கணவனிடம், நீங்கள் எனக்கு ஒரு கோவேறு கழுதையின் மேல் சேணம் வைத்து கொடுக்க வேண்டும் என்று கூறினாள். பின்னர் தன் வேலைக்காரனிடம் எனக்கு முன்பாக சென்று கொண்டு இரு, வழியில் எங்கும் நிறுத்தாதே, யாராவது உனக்கு வந்தனம் கூறினால், பதிலுக்கு நீ அவர்களுக்கு வந்தனம் சொல்ல வேண்டாம் நீ நேராக அந்த கர்மேல் மலையின் மேல் இருக்கும் தேவனுடைய மனிதனிடம் செல் என்று கூறினாள். அவளுடைய கணவன் 'இது அமாவாசை நாளும் அல்ல, அல்லது ஓய்வு நாளும் அல்ல, ஆகவே தேவனுடைய மனிதன் அங்கே இருக்க மாட்டார்' என்று அவள் கணவன் கூறினான். "எல்லாம் சரியாக இருக்கும்" என்று அவள் கூறினாள் எனக்கு அது பிடிக்கும்; உண்மையான விசுவாசத்தை நீங்கள் பெற்றுக் கொண்டு அதை பிடித்துக் கொள்ளும் பொழுது ம்....ம்.. அதில் நிலைத்திருங்கள். சிறிய பர்திமேயுஸ்க்கும், உங்கள் சிறந்த பாடமாக இருக்கிறது. அனைவருக்கும் அது ஒரு கவனியுங்கள். 67. 'போ... முன்னேறிச்சென்று கொண்டே இரு சமூக அழைப்புக்கள் மற்றும் அந்தவிதமான காரியங்களுக்காக, நின்று விடவேண்டாம், முன்னேறிச் சென்று கொண்டு இரு, போய்க் கொண்டே இரு நான் கூறுகின்ற வரையிலும் ஓட்டத்தை நிறுத்தாதே. கர்மேல் பர்வத்தை நெருங்கிய போது, அந்த தீர்க்கதரிசி....." உங்களுக்குத் தெரியுமா, தேவன் அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு எல்லாவற்றையும் வெளிப்படுத்துவதில்லை. அது நம் அனைவருக்கும் தெரியும். எதை அவர் தெரியப்படுத்த வேண்டுமோ அதை மட்டுமே அவர் அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். 68. ஆகவே இப்பொழுது அவன் அருகில் வந்த போது எலிசா வெளியே நடந்து வந்தான். ஒருவேளை நிச்சயமாகவே அவனுடைய பார்வை மங்கலாக இருந்திருக்கலாம். அவன் தன் கைகளை உயர்த்தி "இதோ அந்த சூனமித்தியாள் வருகிறாள், மேலும் பார்ப்பதற்கு அவள் துயரத்துடன் இருப்பதைப் போல தெரிகிறது, ஆனால் தேவன் அதை எனக்கு மறைத்து விட்டார்" என்று கூறினான். அவன் கேயாசியிடம், "வெளியில் சென்று அவளை அழைத்துக் கொண்டு வா" என்று கூறினான். ஆனால் அவளோ மிக வேகமாக சென்று கொண்டிருந்தாள். அவள் அங்கே வந்த போது அவன் சத்தமாக "நீயும் மற்றும் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? உன்னுடைய கணவன் நலமுடன் இருக்கிறனா? உன் குழந்தை நலமாக இருக்கிறதா? என்று கேட்டான். அந்த ஸ்திரீ கூறியதைப் பாருங்கள். "எல்லாரும் நலமுடன் இருக்கிறார்கள்" ஆமென். பாருங்கள், தேவன் அந்த தீர்க்கதரிசிக்குள் இருந்ததை அவள் அறிந்திருந்தாள். அது சரி. அந்த நாளில் தேவன் வைத்திருந்த ஒரு மிகப்பெரிய உயர்ந்த ஒழுங்கு என்று அவளுக்குத் தெரியும். 69. அங்கே மார்த்தாவுக்கும் அந்த யோசனை தோன்றியிருக்க வேண்டும்; அவள் அந்தக் கதையை படித்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மரித்துவிட்டிருந்தபோது, இருந்திருப் பாரென்றால், அவளுடைய சகோதரன் லாசரு அந்த தீர்க்கதரிசிக்குள் தேவன் நிச்சயமாக அவருடைய குமாரனுக்குள் அவர் இருப்பார் என்று அவள் அறிந்திருந்தாள். அது சரி. ஆகவே அவள் அவரிடம் சென்று, "தேவனே, நீர் இங்கே இருந்திருப்பீர் என்றால் என்னுடைய சகோதரன் மரித்திருக்க மாட்டான். ஆனால் இப்பொழுதும் கூட, தேவனிடம் நீர் கேட்டுக் கொள்வது எதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருள்வார்" என்று கூறினாள். அதை நான் விரும்புகிறேன், அதை நான் விரும்புகிறேன் பாருங்கள், 'இப்பொழுதும் கூட தேவனிடத்தில் நீர் எதைக் கேட்டாலும் தேவன் அதை உமக்கு தந்தருள்வார்". 70. இந்த சிறுவன் உடைந்த பாதத்துடன் இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறான். மற்றொரு நபரும் அங்கே அமர்ந்திருக்கிறார் கடந்த இரவு அவர்கள் இருவரும் சத்தமிட்டுக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அவர்கள் பெந்தெகொஸ்தே பையன்களாக இருக்க வேண்டும், அவர்களுடைய இருதயங்களில் அவர்கள் தேவனைக் கொண்டிருக்க வேண்டும். "சகோதரர் பிரான்காம் அவர்களே, நிச்சயமாகவே நான் மீண்டும் ஒரு போதும் நடக்க முடியாது, என்று மருத்துவர் கூறிவிட்டார் என்று நீங்கள் கூறலாம். இங்கு ஒருவர் இதயக் கோளாறுடன் இருக்கலாம், அது எந்த ஒரு தொல்லையாக இருந்தாலும், "எனக்கு புற்று நோய் இருக்கிறது, எனக்கு கட்டி இருக்கிறது, நான் மீண்டும் இதிலிருந்து ஒரு போதும் வர முடியாது இப்படி இப்படி எனக்கு இருக்கிறது மருத்துவர் முடியாது என்று கூறுகிறார்" என்று கூறலாம். 71. "ஆனால் இப்பொழுதும் கூட, கர்த்தாவே, பிதாவிடம் நீர் கேட்டுக் கொள்வது எதுவோ, அதை அவர் உமக்கு தந்தருள்வார்". அதுதான் "இப்பொழுதும் கூட நீர் தேவனிடம் கேட்பதை, தேவன் அதை உமக்கு தருவார்" மார்த்தாவுக்கு அந்த கதை தெரிந்திருக்க வேண்டும். 72. 'எல்லோரும் நலமுடன் இருக்கிறார்கள்' என்று அந்த சூனேமித்திய ஸ்திரீ கூறினாள். இப்பொழுது அவள் அந்த பையனுக்காக கேட்டுக் கொண்டிருக்கவில்லை, ஆனால் இந்த தீர்ககதரிசியின் வழியாக அந்த பையனை தேவன் எதற்காக எடுத்துக் கொண்டார் என்று கூறினால் அது அவளை திருப்திபடுத்துவதாக இருக்கும் என்று அவள் அறிந்திருந்தாள். அவர் ஏன் அந்த பையனை எடுத்துக் கொண்டார் என்று அவனால் கூற முடிந்தது என்றால், ஒவ்வொரு காரியமும் சரியாகவே இருந்தது. ஆகையால் எனவே அவள் தேவனுடைய பிரதிநிதிக்கு முன்பாக இருந்தாள், ஆகவே எல்லாம் நன்றாக இருந்தது. 73. சிறிய பர்திமேயுஸ் கண்கள் சற்று பிரகாசமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். "அம்மா, அம்மா சீக்கிரம் என்ன நடந்தது என்று கூறுங்கள்" பாருங்கள், சிறிய பையன்கள் அவசரப்படுவார்கள், அதன் முடிவு என்ன என்று அறிந்து கொள்ள அவர்கள் விரும்புவார்கள். 74. நல்லது, அந்த மகத்தான தீர்க்கதரிசியிடம், அவள் தன்னுடைய மகன் எப்படி மரித்துப் போனான், பிறகு அவனை அந்த அறையில் கிடத்தி வைத்ததையும் அவனுக்கு தெரியப்படுத்தின பின்பு அந்த தீர்க்கதரிசி தன் வேலைக்காரனிடம், "என்னுடைய கோலை எடுத்துக் கொண்டு போய் அந்தப் பிள்ளையின் மீது வை" என்று கூறினான். இப்பொழுது, நான் புதிய ஏற்பாட்டில் அங்கே பவுல் தன்னுடைய சரீரத்தின் மீது போடப்பட்டிருந்த கைக்குட்டைகள், மற்றும் உறுமால்களை எடுத்துக் கொண்டிருந்த அந்த யோசனையை மீண்டும் நினைத்துப் பார்த்தேன். 75."இப்பொழுது அவன் தொட்ட அனைத்தும்ஆசீர்வதிக்கப்பட்டதாக இருந்தது. எலிசாவுக்கு தெரியும், அதனால்தான் அந்த ஸ்தீரியை அதை விசுவசிக்கும் படி செய்தது, அவ்வளவு தான். அதே காரியத்தை அந்த ஸ்தீரியானவளை நம்பும்படியாக செய்ய முடியுமென்றால் ஒரு அற்புதம் எப்பொழுதும் போல நிகழ்ந்திருக்கும். ஆனால் அந்த ஸ்தீரியானவளின் விசுவாசமானது அந்த கோலின் மீது இல்லை". 76. எப்படி இருப்பினும் இப்பொழுது அவள் கூறின அந்த விதம் எனக்கு பிடித்திருக்கிறது. "நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்" என்று அவள் கூறினாள். விடாப்பிடியாக இருக்கும் அந்த காரியம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவ்வளவு தான். 77. நீங்கள் தேவனுக்காக தொடங்குவீர்கள் என்றால், பரிசுத்த ஆவி வரும் வரையிலும், நீங்கள் வாஞ்சித்த அனைத்தும் நடைபெறும் வரையிலும், காத்திருங்கள். அதை விட்டுவிட வேண்டாம். "நான் உம்மை விடுவதில்லை. நான் உமது கரங்களில் இருக்கிறேன். நீர் எனக்குப் பதில் அளிக்கும் வரையிலும் நான் உம்மை விடமாட்டேன்." என்று அவள் கூறினாள். அதைச் செய்வதற்கான வழி அதுதான். 78. இப்படித்தான் இயேசு கற்பித்துள்ளார் என்று உங்களுக்குத் தெரியும். அந்த அநீதியுள்ள நியாயாதிபதி எப்படி அந்த விதவையின் எதிராளியை பழிவாங்கவில்லை என்று உங்களுக்கு தெரியும். ஆனால் "என் கரங்களில் இருந்து அவளை விடுவித்துக் கொள்வதற்காக அவளுடைய பகைவர்களை பழிவாங்குவேன்" என்று கூறினான். நல்லது, அப்படியானால் கருணை உள்ளம் கொண்ட உங்களுடைய பரலோகப்-பிதா இன்னும் எவ்வளவு அதிகமாக உங்களுக்கு கொடுப்பதற்கு தயாராக இருப்பார் என்று அவன் கூறினான். ஆனால் இப்பொழுது அல்ல.... "தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள்உங்களுக்கு அது திறக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.இப்பொழுதே கேளுங்கள். இப்பொழுது நீங்கள் அதைக் கவனிப்பீர்கள்என்றால்"ஆண்டவரே, எனக்கு அது வேண்டும்" என்று கேளுங்கள். 79. "கேட்கிறவன், தேடுகிறவன்." அவர் அதை கூறியிருக்கிறார் தொடர்ந்து தேடிக் கொண்டிருங்கள், தொடர்ந்து தட்டிக் கொண்டே இருங்கள். தொடர்ந்து மேலே செல்லுங்கள், நீங்கள் அங்கே சென்றடைந்து விடுவீர்கள், ஆகவே தொடர்ந்து அது நிகழ்கின்ற வரையில் தட்டிக் கொண்டிருங்கள். தேவனே நான் அதை விசுவாசிக்கிறேன். நான்...நான் உம்முடைய கரங்களில் இருக்கிறேன். நான் உம்முடைய கரங்களில் இருக்கிறேன். என்னுடைய வயிற்றுத்தொல்லையை தேவன் குணப்படுத்தியதை நான் நினைவு கூறுகிறேன். "நீ குணமாக முடியாது" என்று பிசாசு கூறினான். 80. "இங்கேயே இருந்து என்னுடைய சாட்சியை நான் கூறுவதை நீ விரும்பினால் அதைக் கேள். தேவனுக்கு துதி செலுத்த விரும்பினால் என்னுடன் சிறிது நேரம் இருந்து என்னைக் கவனி" என்று கூறினேன். அவன் சோர்வடைந்து அப்பால் சென்று விட்டான். ஆகவே அவன் அப்படித்தான் செய்வான். 81. மற்றொரு நாள் அவன் மோசமான ஜலதோஷத்தை எனக்கு கொடுப்பதற்கு முயற்சித்தான், அதை என்னிடம் கொடுத்து விட்டான். ஆகவே திரும்பவுமாக அதை அவனுக்கே திருப்பி கொடுத்து விட்டேன். மீண்டும் அதை எனக்கு கொடுத்தான். நான் மீண்டும் அதை அவனுக்கே திருப்பி கொடுத்துவிட்டேன். எனவே நாங்கள் மூன்று நான்கு நாட்களாக அதன் மீது சண்டையிட்டுக் கொண்டிருந்தோம் முடிவில் அது அப்பால் போய்விட்டது. ஆகவே அங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள். பாருங்கள் தொடர்ந்து அவனுக்கு அதை திரும்பக் கொடுத்துக் கொண்டே இருங்கள். அதை பெற்றுக் கொள்ள வேண்டாம். மீண்டும் அவனுக்கே அதை கொடுத்து விடுங்கள். அதை அவனுக்கே திரும்பவும் கொடுத்து விடுங்கள். அதுதான் அதைச் செய்வதற்கான வழி அதுவாகத்தான் இருக்கிறது. உறுதியாக இருந்து அதைப்பற்றிக் கொண்டு மட்டும் இருங்கள். அவள் அப்படித்தான் செய்தாள். 82. "தேவனுடைய ஜீவனைக் கொண்டும், உம்முடைய ஜீவனைக் கொண்டும்....," என்று அவள் கூறினாள். இப்பொழுது பாருங்கள் அவனுக்கு அழியாத ஆத்துமா இருந்தது என்பதை அவள் விசுவசித்தாள்., "ஜீவனுள்ள தேவனைக் கொண்டும், உம்முடைய ஜீவனைக் கொண்டும்" 'பாருங்கள், நான் உம்மை விட்டுப் போக மாட்டேன். என்ன நிகழப்போகிறது என்பதை நான் கண்டுபிடிக்கும் மட்டும் நான் உம்முடன் போய்க் கொண்டிருப்பேன். எனவே அவனுடைய கரங்களிலிருந்து அவளை விலக்க முடியவில்லை. ஆகவே அவன் தன் அரையைக் கட்டிக் கொண்டு அங்கே சென்றான். 83. "அவன் அந்த அறைக்குள் நடந்து சென்ற பொழுது, அந்த தீர்க்கதரிசி ஒரு முடிவுக்கு வரவேண்டியிருந்தது என்பதை நான் கவனித்தேன். தேவன் என்ன செய்யப் போகிறார் என்று அவனுக்கு தெரியாது. அங்கே, அந்த தகப்பன் உரத்த சத்தமாக அலறிக் கொண்டிருந்தான், எல்லா ஜனங்களும், அயலகத்தாரும் சுற்றிலுமாக நின்று கொண்டு அலறிக் கொண்டிருந்தனர். இனிமையான குடும்பத்தில் இந்த அருமையான சிறிய பையன் மரித்துப் போனவனாக அந்த அறையில் கிடத்தப்பட்டிருந்தான் எல்லா நம்பிக்கையும் போய்விட்டதாக இருந்தது". 84. இப்பொழுது எலிசா என்ன செய்தான்? இயேசு செய்ததைப் போலவே. அவர்கள் அனைவரையும் வீட்டிற்கு வெளியே போகும்படி செய்தான்; யவீரு தன்னுடைய குமாரத்தி இறந்த போது இயேசு செய்ததைப் போல எனவே அந்த தீர்க்கதரிசி என்ன செய்தான் என்று கவனியுங்கள், அவன் வெளியே சென்று ஜெபித்து தயாராக வேண்டியது இல்லை, நாம் எப்பொழுதுமே ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் விசுவசிக்கிறேன். நீங்கள் அப்படி இல்லையா? 85. இங்கே சிறிது காலத்திற்கு முன்பு ஒரு சிறிய ஜரீஷ் ஸ்திரீயானவள் கப்பலில் வந்து கொண்டிருந்தாள். சுமார் முப்பது, நாற்பது மைல்கள் தூரத்தில், நியூயார்க் துறைமுகத்திற்கு அப்பால் எங்கோ ஒரு பயங்கரமான புயல் வந்து கொண்டிருந்ததாக அவர்கள் கூறினார்கள். அந்த சிறிய கப்பலால் அந்த புயலை தாங்கிக் கொள்ள முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை. அவர்கள் SOS என்ற அவசரகால தகவலை வெளியே அனுப்பினார்கள். அந்தப் புயலானது மேலும் மேலும் மோசமாகிக் கொண்டிருந்தது என்று கூறினார்கள். முப்பது நிமிடங்களுக்கு அந்தப் புயலை அவர்கள் தாங்கிக் கொள்ள முடியும் என்றால் அந்த துறைமுகத்தை அவர்கள் அடைந்து விட முடியும், ஆனால் அப்படி முடியவில்லை என்றால் அவர்கள் கடலின் ஆழத்திற்குப் போய் விடுவார்கள். ஆகவே ஜாஸ்(Jazz] இன்னிசையை நிறுத்திவிட்டு ஜெபம் செய்ய துவங்கினார்கள் 'தேவனே உமது அண்டையில், என்று ஒரு பாடலை பாடினார்கள். ஆனால் இந்த சிறிய ஜரிஷ் ஸ்திரீயானவள், முன்னும் பின்னுமாக தரையில் நடந்து கொண்டு "அல்லேலூயா-அல்லேலூயா-அல்லேலூயா" என்று சத்த மிட்டுக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். அந்த கப்பலின் மாலுமி, "நீ என்னைப் புரிந்து கொண்டாயா? என்று கூறினார். "ஆம் ஐயா நான் புரிந்து கொண்டேன்" என்று கூறினாள். "நல்லது, நீ ஏன் ஜெபம் செய்யக் கூடாது? என்றார். 86. "நான் ஏற்கனவே ஜெபம் செய்து செய்து விட்டேன். தயாராகஇருக்கிறேன்" என்று அவள் கூறினாள். ஆகவே அதை அப்படித்தான் நாமும் செய்ய வேண்டும். மேலும் அவள் "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றாள். மறுபடியுமாக அவள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். அந்த கப்பல் மாலுமி நீ ஏன் மீண்டும் கூச்சலிடுகிறாய்"? என்று கேட்டார். "முப்பது நிமிடங்கள் தாக்குப் பிடித்திருந்தால் நியூயார்க்கில் இருப்போம், அப்படி இல்லையென்றால் கடலுக்கு அடியில் சென்றிருப்போம் என்று கூறினீர்கள்" என்றாள். "அது சரி" என்றார். 87. "நான் அயர்லாந்தில் இருந்து நியூயார்க்கிற்கு என்னுடைய மகளைப் பார்க்க போய்க் கொண்டிருக்கிறேன். மகிமையில் நான் ஒன்றைப் பெற்றுக் கொண்டேன். மேலும் இப்பொழுதிலிருந்து முப்பது நிமிடங்களுக்குள் நான் அவளைக் காண்பேன்." என்று கூறினாள். கப்பல் கீழே மூழ்கிப் போனால் அங்கே மேலே சென்று விடுவேன் அவ்வளவுதான். நீ இழக்கப்பட முடியாது. பார்த்தீர்களா? எப்படி இருந்தாலும் அவள் தனக்கு அன்பானவர்களை முப்பது நிமிடங்களில் காண்பாள் என்று அறிந்திருந்தாள். ஓ அறிந்திருந்தாள். ஓ அதுதான் ஜெபியுங்கள். அவ்வளவுதான். 88. வயதான எலிசா, அவனுக்காக அவள் கட்டியிருந்த அந்த சிறிய இடத்தில் உள்ள மேடைக்கு வந்த போது தரையில் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தான். அவன் அந்த அறையில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தான் என்று வேதாகமம் கூறுகிறது. எனவே அதன் பிறகு அந்த ஆவியானது அவன் மேல் வந்தது, மேலும் அவன் அவன் சென்று அந்த குழந்தையின் மீது தன்னுடைய உடலை கிடத்திக் கொண்டான். அதன் பிறகு அந்த குழந்தையின் உடல் அனல் கொள்வதை அவன் கொள்வதை அவன் உணர்ந்தான். அவன் எழுந்து மீண்டும் முன்னும் பின்னுமாக அந்த அறையினுள் நடந்தான். திரும்பவுமாக வந்து தன்னைத்தானே அந்த பிள்ளையின் மீது மீண்டும் கிடத்திக் கொண்டான். அந்த பிள்ளையானது ஏழுமுறை தும்மியபோது ஜீவன் அவனுக்குள் வந்தது. அந்தப்பிள்ளையை எடுத்து "அந்த சூனேமித்தியாளை கூப்பிடு" என்று சொன்னான்.எவ்வளவாக பர்திமேயுஸ் அதை விரும்பியிருப்பான். 89. ஓ. என்னுடைய தாயார் வழக்கமாக அந்த மாதிரியான கதைகளைக் கூறுவதை கேட்பேன். அவன் யோசிக்க துவங்கினான். அந்த நேரத்தில் ஏதோ ஒரு கோவேறு கழுதை வருகிறதான ஒரு சத்தம் கேட்டது. அது ஒரு வசதி படைத்த ஒரு மனிதனாக இருக்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான பயணங்கள் கால்நடையாகவோ சாலை வழியாக நடந்து செல்ல வேண்டியிருந்தது, வசதி படைத்தவர்கள் கழுதையின் மீது சவாரி செய்தனர். மேலும் இராணுவமானது இரதங்களை பயன்பாட்டில் கொண்டிருந்தது. ஆகவே அவன் "தாமதமாக வந்து கொண்டிருக்கிற அந்த மனிதர் ஒரு செல்வந்தராக இருக்க வேண்டும்" என்று கூறிக்கொண்டான். ஆகவே அவன் எழும்பி தன் வஸ்திரத்தைக் கழற்றி எறிந்து விட்டு ஓடிப்போய், பார்வையில்லாவனுக்கு தர்மம் செய்யுங்கள்; இந்தப் பார்வை இல்லாதவனுக்கு தர்மம் செய்யுங்கள் என்று கூறினான். 90. எனவே அந்த கோவேறு கழுதையானது நின்று விட்டது; "பிச்சைக்காரனே வழியிலிருந்து வெளியே வா, என்ற எரிச்சலுடன் கூடிய ஒரு சத்தத்தை அவன் கேட்டான். எருசலேமில் உள்ள ஊழியக்காரர்களின் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் நான் இருக்கிறேன். அவர்கள் என்னை கர்த்தருடைய ஊழியக்காரர் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். இங்கு தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்கிற, தரிசனங்கள் காண்கிற ஒருவர் இங்கே இங்கே இந்த நகரத்திற்கு வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். அவர் தெய்வீக சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை வைப்பதற்காகப் போய்க் கொண்டிருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். அந்த முழு சபையாரையும் இன்று ஒன்றாக கூட்டுவதற்காக நான் அங்கே போய்க் கொண்டிருக்கிறேன். இந்த மாதரியான முட்டாள் தனமான காரியங்கள் இங்கே நடக்காமல் இருப்பதற்கு இந்த ஊழியக் காரர்களை ஒன்று சேர்ப்பதற்காகப் போய்க் கொண்டிருக்கிறேன். வழியை விட்டு விலகு, தேவனுடைய பாதையில் நான் இருந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்" அந்த தெருவில் அந்த சிறிய கழுதை சென்றது. ஆகவே பர்திமேயுஸ், சரி அவர்களை தேவனுடைய ஊழியக்காரர்கள் என்று நினைத்தான். 91. நல்லது, அவன் அந்த வழியாக திரும்பிச் சென்று அந்த பாறை எங்கு உள்ளது என்று கண்பிடிக்கும் முயற்சியில் இருந்து கொண்டிருந்தான். கடைசியாக அவன் அந்த பாறையை கண்டுபிடித்த போது சூரியன் ஒரு சின்னப்புள்ளியாக நகர்ந்து சென்று கொண்டிருந்தது. மேலும் ஒரு வகை லேசாக குளிர் நிலவியது. அந்த சுவற்றின் மீது பாறையின் நிழல்கள் இருந்தது. ஆகவே, அவன் சிறிது தூரம் நகர்ந்து சென்று, "சரி, இன்றைக்கு எனக்கு காசு கிடைக்காது என்று நினைக்கிறேன். ஆகவே நான் கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு, மீண்டும் போய் உட்கார்ந்து கொண்டு, சிறு பையனாக இருந்த போது நிகழ்ந்தவைகளை பகல் கனவு காண தொடங்குவேன்" என்று கூறினான். 92. அப்போது, தன் தாய் பல வருடங்களுக்கு முன்பு, அந்த வல்லமையுள்ள தேவ மனிதன், மகத்தான தீர்க்கதரிசிகளாகிய எலியாவும், எலிசாவும் அந்த கீழே உருண்டையான கற்கள் பதித்திருந்த அந்த சாலையில் இறங்கி யோர்தான் நதியை திறப்பதற்கு யோர்தானுக்கு சென்றதாக கூறியது நினைவுக்கு வந்தது. ஓ, நான். அந்த இடத்திலிருந்து சரியாக முப்பது அடி தூரத்தில் கடந்து சென்று அங்கே அவன் அமர்ந்து கொண்டான். 93. ஆனால் அந்தோ பரிதாபம், அந்த ஆசாரியன், "அற்புதங்களின் நாட்கள் கடந்து சென்று விட்டது. உனக்குத் தெரியுமா; இனிமேல் யெகோவா தேவன் சுகமாக்க மாட்டார்." என்று அந்த அவனிடம் கூறினான். அந்த ஆவியானது ஒரு போதும் "மரித்துப் போய் விடவில்லை, ஓ, யெகோவா உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட காரியங்களை இனி செய்யமாட்டார். நாம் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் போதும், தசம பாகம் செலுத்த வேண்டும், ஆலயத்திற்கு செல்ல வேண்டும், நடக்கும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் செல்ல வேண்டும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அது மட்டுமே. ஆனால் யெகோவா குணமாக்குவதில்லை. அவர் முன்பு யெகோவாவாக இருந்தார்,இன்று அவர்-அவர் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை" என்று அந்த ஆசாரியன் அவனிடம் கூறினான். 94. ஓ, என்ன ஒரு தவறான காரியம். அவர் எப்பொழுதுமே கவலை கொள்கிறவராக இருந்து கொண்டிருக்கிறார். அவர் எப்பொழுதும் கவலை கொள்கிறவராக இருப்பாரென்றால், அவர் இப்பொழுதும் கவலை கொள்பவராக இருக்க வேண்டும். ஆம் ஐயா, அவருடைய நோக்கங்களை அவர் மாற்றிக் கொள்ள முடியாது, அவருடைய அணுகுமுறையை அவர் மாற்றிக் கொள்ள முடியாது. அவர் இன்னும் யெகோவா தேவனாகவே இருக்கிறார். அவர் மாறுவார் என்று யார் கூறினாலும் அதைக் குறித்து எனக்கு கவலை இல்லை. அவருடைய ஜனங்கள் மாறிவிட்டார்கள். ஆனால் அவரால் மாற முடியாது. அவர் அப்படி செய்வதை நாம் காண முடியாததின் காரணம் நாம் அவரை அப்படி செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருப்பதே ஆகும். அவர் விருப்பம் உள்ளவராகவே இருக்கிறார். 95. நாம் அவருடைய ஏராளமான ஆசீர்வாதங்களை வெறுமையாக்கி விடுகிறோம். என்றே நாம் நினைக்கிறோம் "நல்லது, எனக்கும் அன்றாட மன்னாவை தாருங்கள் என்று நான் தேவனிடம் கேட்டேன். நான் அவரிடம் அதிகமான காரியங்களை கேட்பதில்லை" ஓ நான். 96. பரந்து விரிந்து கடலின் மத்தியில் இருக்கும் ஒரு சிறிய மீன், "சற்றுப் பொறுங்கள்" நான் இந்தக் கடல் நீரை கொஞ்சம் கொஞ்சமாகப் பருகுவது நல்லது, இல்லையென்றால் சில நாட்களிலேயே அதை தீர்த்து விடுவேன்." என்று கூறுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? 97. ஒரு சிறிய சுண்டெலியானது, எகிப்தின் பெரிய தானியக் களஞ்சியத்தின் கீழ் இருந்து கொண்டு "நான் நாள் ஒன்றுக்கு ஒரு கோதுமையை மட்டும் அளவாக உண்பது நல்லது. அடுத்த அறுவடைக்கு முன்பே அதை நான் காலி செய்து விடுவேன்" என்று கூறுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? சற்று, அதை நூறு இலட்சத்தால் பெருக்குங்கள் அது தேவனுடைய நன்மைகளையும், இரக்கத்தையும் வெறுமையாக்க நீங்கள் முயற்சி செய்வதாகத்தான் அது இருக்கும். 98. அவரால் முடிந்த அனைத்தையும் அவருடைய வழியில் உங்களுக்குள் வைப்பதற்கு அவர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். "உங்கள் சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி அதிகமாக கேளுங்கள்" அவருடைய ஜனங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பெரிய காரியங்களை கேட்டுக் கொள்வதையும், மகத்தான காரியங்களை விசுவாசிக்கும்படி அவர் விரும்புகிறார். உயர்ந்த இலட்சியங்கள், உயர்ந்த எதிர்பார்ப்புகள் இவைகளுடன் குன்றின் மீது அமைந்துள்ள ஒரு பட்டிணத்தின் மேல் நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள். நல்லது, இரக்கம், இன்றிரவு அந்த குருடன் அவனுடைய பார்வையைப் பெற்றுக் கொள்வான் என்றால், நாளை இரவு மரித்துப் போனவர்கள் உயிருடன் எழும்புவதை பார்க்க நான் விரும்புகிறேன். ஆம் ஐயா, நான் மகத்தான காரியங்களுக்காக தொடர்ந்து நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். 99. சபையானது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளத் துவங்கும் போதும், மற்றும் அந்நிய பாஷைகளில் பேசும் போதும், அதன் பேரில் ஏன் நிலைத்து நின்று விடுகிறீர்கள்? தொடர்ந்து மேலே சென்று கொண்டிருங்கள். வாக்களிக்கப்பட்ட தேசத்தை நோக்கிச் சென்று கொண்டிருங்கள். நாம் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தின் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். ஒருகாரியத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டாம். நல்லது, நாங்கள் சற்று...நீங்கள் அந்நியபாஷை பேசுகிறீர்களா? நல்லது, நீங்கள் இன்னும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய மகத்தான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளவில்லை. சரியாக சாலையிலிருந்து ஒரு மில்லியன் மைல்கள் தூரத்திற்கு அப்பால் நீங்கள் நின்று கொண்டிருக்கறீர்கள். நிச்சயமாக பெரிய காரியங்கள், உயர்ந்த எதிர்பார்ப்புகள் நிச்சயமாகவே. 100. அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டதாக பர்திமேயுஸ்-க்கு சொல்லப்பட்டதை நாம் கண்டுபிடித்தோம். இப்பொழுது தன்னைத் தேவனுடைய ஊழியக்காரன் என்று அழைத்துக் கொள்ளும் அந்த மனிதனின் பேச்சைக் கேட்பதற்கு பதில் நான் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன செய்வது? அவர் எதைப்பார்க்க கீழே சென்று கொண்டிருக்கிறார்?, எதைப்பற்றி பேசப் போகிறார், நகரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறேன்" சரி எப்படி இருந்தாலும், அற்புதங்களின் நாட்கள் கடந்து போய் விட்டது. மேலும் இன்று யேகோவிற்கு இப்படிப்பட்ட ஊழியக்காரர்கள் இருக்கின்றார்களா? இது அந்த எலியா மற்றும் எலிசாவின் ஊழியத்திலிருந்து அநேக வித்தியாசப்பட்ட ஒன்றாக இருக்கிறதே. என்று கூறினான். 101. "இப்பொழுது, எலியாவும், எலிசாவும் அங்கே கீழே உள்ள யோர்தானுக்கு கடந்து சென்ற போது இந்தப் பாறையின் மீது நான் உட்கார்ந்து கொண்டு இருந்திருப்பேன். கீழே அங்கே ஒரு சிறிய இடத்தில் நான் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். அந்த மகத்தான தீர்க்கதரிசி அவனுடைய மேலங்கியை கழற்றி, அதை முறுக்கி ஒன்றாக சேர்த்து யோர்தானை அடித்தான், அது வழி விட்டது. (ஆமென்) நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பிறகு யோசுவா அதை காரியத்தைச் செய்தான்.." ஆமென். யெகோவா தேவன் இன்று வரையிலும் அவரை விசுவசிக்கிற யாவருக்கும் அதை செய்ய முடியும் என்பதை அது காண்பிக்கிறது. ஆம். 102. அதன்பிறகு அவன் மறுகரைக்கு வந்து விட்டான், இப்பொழுது அவன் களைப்புற்றவனாக இருந்தான். முகத்திற்கு வர்ணம் அடிப்பதையும் மற்றும் தொடர்ந்து அவர்கள் செய்து கொண்டிருந்த இப்படிப்பட்ட காரியங்களைக் குறித்தும் யேசபேல், மற்றவர்களையும் அவன் பதட்டம் கொள்ளச் செய்திருந்தான். அவன் களைப் படைந்தவனாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். ஆகவே இந்த வாலிப தீர்க்கதரிசி அவனுடைய இடத்தை எடுத்துக் கொண்டான். ஆகவே அவன் ஆற்றின் குறுக்காக கடந்து சென்றான். அங்கே ஒரு இரதமானது ஒருபுதருடன் இணைக்கப்பட்டிருந்ததையும், அந்த ரதத்தின் மீது ஏறி அவன் ஒரு சிறிய சவாரி செய்து மேலே வீட்டிற்கு சென்றதையும் அவன் அறிந்திருந்தான். பார்த்தீர்களா? ஆனால் இந்த வாலிப தீர்க்கதரிசி தன்னுடைய புதிய ஊழியத்திற்காக அந்த வயதானவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை கவனித்துக் கொண்டே இருந்தான். அவனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவன் அறிந்திருந்தான். எனவே இந்த வாலிப தீர்க்கதரிசி ஒரு தரிசனத்தில் அவன் மேலே செல்வதைப் பார்த்தான், கீழே விழுந்த அவனுடைய சால்வையைப் பிடித்துக் கொண்டான், அந்த சால்வையை எடுத்து "எலியாவின் தேவன் எங்கே?" என்று கூறி யோர்தானை அடித்தான். ஓ, நான். ஆகவே அந்த நதி மீண்டும் திறந்து வழி விட்டது. அது சரி. பெந்தேகோஸ்தே-வின் தேவன் எங்கே? இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த இருந்த அந்த தேவன் எங்கே? இன்றைய சபைகளின் ஊழியத்தில் காரியம் என்னவாக இருந்து கொண்டிருக்கிறது? 103. அங்கே எபிஸ்கோபிலியன் ஊழியக்காரர் எழுதின ஒரு கடிதத்தை அந்த சபையிலிருந்த யாரோ ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தனர். அதை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்று நான் யூகிக்கிறேன். அதில் கன்னிப் பிறப்பு என்பது ஒரு புராணக் கட்டுக்கதை என்றும் ஏதேன் தோட்டத்தில் இதைப் போன்ற காரியங்கள் இல்லை என்றும் மேலும் எல்லாமே இதைப் போன்ற காரியங்களாகவே இருக்கிறது என்று எழுதியிருந்தார். அந்த மனிதன் பிரசங்க மேடையில் நிற்கக் கூடாது. இல்லை ஐயா, இன்று அதுதான் காரியமாக இருக்கிறது. அதிக கல்வி கற்ற ஜனங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் இதைப் போல அதற்கு எதிராக நின்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் அதிகமான கல்வியை பயின்றிருக்கின்றனர், அவர்களுக்கு அதை எப்படிச் செய்ய வேண்டும், என்பதை அறிந்து கொள்ள போதுமான புத்திக்கூர்மை இல்லை. அவ்வளவுதான். 104. நமக்கு இன்று என்ன தேவை..."நான் உங்களிடத்தில் வந்த போது சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை... நான் பலவீனத்தோடும் பரிசுத்த ஆவியின் உயிர்த்தெழுதலின் வல்லமையோடும் உங்களிடத்தில் வந்தேன், உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்தினால் அல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு...ஆவியினாலும், பெலத்தினாலும் உறுதிப் படுத்தப் பட்டதாயிருந்தது" என்று பவுல் கூறுகிறான், பேராயர் என்று அழைக்கொள்ளும் சிலருடைய காரியங்கள், அப்படித்தான் இருக்கிறது. 105. இப்பொழுது பர்திமேயுஸ் அங்கே நீண்ட நேரம் அமர்ந்திருந்த போது, அந்த இடத்தில் ஏதாவது அற்புதம் நடக்குமா என்று யோசித்து கொண்டிருந்தான் என்பதை பார்த்தோம் அதன்பிறகு அவன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திலிருந்து ஐநூறு கெஜம் அல்லது அதற்கு குறைவான தூரத்தில், அந்த மகத்தான யோசுவா, ஓ, நான், அந்த மோசே என்ற ஊழியக்காரனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு அந்த செங்கடலை கடந்து வந்திருக்க வேண்டும் என்று அவன் நினைத்துப் பார்த்தான், மேலும் அந்த வனாந்தரத்தில் இரண்டு பேர் மட்டுமே திரும்பி சென்று நாம் அந்த தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள முடியும் என்று விசுவசித்தனர் அவர்கள் தேவனுடைய வார்த்தையை மட்டுமே கவனித்தனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையை விசுவசித்தனர். 106. அவர்களில் ஒன்பது பேர் 'ஓ அதை நாம் சுதந்தரித்துக் கொள்ள முடியாது, அவர்களுடைய பார்வைக்கு நாங்கள் வெட்டுக்கிளிகளைப் போல இருந்தோம், அந்த நகரங்கள் மதில்களினால் சூழப்பட்டிருக்கிறது. அதைச் செய்வதற்கு சாத்தியமில்லாதது போல் இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால் அது அப்படி அல்ல. நண்பர்களே அப்படி அல்ல, ஐயா, சகோதரனே, "அதை சுதந்தரித்துக் கொள்வதற்கு நாம் அதிக தகுதி வாய்ந்தவர்களாக இருக்கிறோம்'. 107. ஏன்? அது நீ எதை கவனித்துக் கொண்டிருக்கிறாய் என்பதை சார்ந்தது முடமான உன்னுடைய கையை நீ கவனித்துக் கொண்டிருப்பாயானால், அது அப்படியேதான் இருந்து கொண்டிருக்கும், அந்தக் கட்டியை (Tumor) நீ பார்த்துக் கொண்டே இருப்பாயானால் அதுவும் அப்படியேதான் இருந்து கொண்டிருக்கும். அதில் இருந்து விலகிச்சென்று கவனி. தேவனுடைய வாக்குத்தத்தை கவனி. அது நீ எதைக் கவனித்து கொண்டிருக்கிறாய் என்பதை சார்ந்ததாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் காணக்கூடாதவைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். காரியங்கள் இல்லாத போதிலும் அவைகள் இருப்பதாக ஆபிரகாம் அழைத்தான், ஏனென்றால் அவர்கள் அங்கே இருப்பார்கள் என்று தேவன் கூறியிருந்தார். உண்மையான கிறிஸ்தவர்கள் செய்யக் கூடிய வழி அதுவாகத்தான் இருக்கிறது. உலகம் என்ன கூறினாலும், எப்படி கவனித்தாலும் அதற்கு இதனுடன் ஒன்றும் செய்வதற்கில்லை. அதைப்பற்றித் தேவன் என்ன கூறினாரோ, அதைத்தான் அது செய்கிறது. ஆம் என்னவாக இருந்தாலும்.... 108. எகிப்தில் இருக்கும் போது தேவன் அவர்களிடம் "நான் உங்களுக்கு அந்த தேசத்தை தருவேன்" என்று கூறினார். ஆனால், "நான் அங்கே சென்று எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி வெளியேற்றிவிட்டு, வீடுகளை நன்றாக அலங்கரித்து திரைகளை தொங்க விடுகிறேன், நீங்கள் நகர்ந்து உள்ளே போய்க் கொண்டிருந்தால் மட்டும் போதும்" என்று அவர் கூறவே இல்லை. இல்லை. அவர்கள் எடுத்துக் கொள்ளப் போகிற ஒவ்வொரு அடி நிலத்திற்கும் அவர்கள் போராட வேண்டியிருந்தது. அது சரியே, சண்டையிடுவது அதன் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் போராடுவது. ஆனால் உங்கள் உள்ளங்கால்கள் மிதிக்கும் ஒவ்வொரு அடி நிலங்களும் உங்களுக்கு சுதந்தரமாகும்" என்று கூறினார். காலடிகள் படும் இடம் எல்லாம் உங்களுடையதாக இருக்கிறது. 109. அதே காரியம் தான் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. தெய்வீக சுகம் என்பது நமக்கு உரியது, பரிசுத்த ஆவி என்பது நமக்குரியது, அது நமது உடைமையாக இருக்கிறது, ஆனால் நீங்கள் அதன் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் போராட வேண்டும். ஆம் ஐயா காலடி வைக்கும் இடங்கள் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கிறது. தொடர்ந்து போராடிக் கொண்டிருங்கள், அதை எடுத்துக் கொள்ளுங்கள்" அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன" என்று பிசாசு கூறுவான். 110. "நீ பொய் கூறுகிறாய் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்" என்று தேவன் சொல்லியிருக்கிறார்" அதை எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் கால் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு இடமும் உங்களுக்கு சொந்தமாக இருக்கிறது. 111. யோசுவா சரியாக அவர்களுடன் அந்த நதியைக் கடந்து வந்து அங்கே வெளியில் பாளையமிட்டிருந்தான். ஓ, "நான் அந்த நாளில் வாழ்ந்திருப்பேனானால் ஏன் அந்த ஆசாரியர்கள் நடந்து கொண்டிருந்ததையும், யோசுவா தன்னுடைய கரத்தில் வாளை உயர்த்தி சுழற்றி நடந்து சென்றதையும் நான் பார்த்த மாத்திரத்தில் கீழே அங்கு இறங்கிச் சென்று 'மகத்தான யோசுவா, நீர் எனக்காக ஜெபம் செய்யும் என்று சொல்லியிருப்பேன், மகத்தான அந்த மனிதன் எனக்காக ஜெபித்திருப்பார், நான் பார்வையைப் பெற்றுக் கொண்டிருந்திருப்பேன் என்று நான் நம்புகிறேன் என்று கூறினான் நிச்சயமாக, அந்த மகத்தான மனிதன் எனக்காக ஜெபம் செய்திருப்பார், ஆனால் பரிதாபம், யோசுவா போய்விட்டார், தேவனும் போய்விட்டார் என்று நான் யூகிக்கிறேன். எங்களுடைய போதகரும் அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன என்று கூறுகிறார். அதனால் அது நம்பிக்கையற்றதாக இருக்கிறது என்று நான் யூகிக்கிறேன். நான் ஒன்றுமே செய்ய முடியாது; மிகவும் நம்பிக்கையற்ற ஒரு நிலைமையாக இருக்கிறது" என்று பார்வையற்ற பர்திமேயுஸ் கூறினான். 112. அதன் பிறகு, "என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் எருசலேமை சுற்றிலும் உள்ள அந்த மதில்களை பல நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டிருந்தனர் ஒரு நாள் அந்த மகத்தான யுத்த வீரனாகிய யோசுவா, பிற்பகலில் சிறிது தூரம் நடந்து சென்று எரிகோவின் மதில்களை எப்படி கைப்பற்றுவது, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற போர்த்தந்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தான். ராகாபின் வீட்டிலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருந்த அந்த சிவப்பு கயிறைப் பார்த்தான். அந்த வீட்டைப் பாதுகாக்க அதை கவனித்துக் கொண்டிருந்தான். அப்படி கவனித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று அவனுக்கு முன்னால் ஒரு உருவின பட்டயத்துடன் ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தார். யோசுவா தன்னுடைய பட்டயத்தை உருவி ஓடிச்சென்று அவரை சந்தித்து நேருக்கு நேர் யுத்தம் செய்ய சவால் விட்டான். 'நீர் எங்களைச் சார்ந்தவரா? அல்லது எங்களுடைய பகைவரை சார்ந்தவரா? என்று கூறினாான். 113. "நான் கர்த்தருடைய சேனையின் அதிபதி நான் கர்த்தருடைய சேனையின் அதிபதி என்றார். யோசுவா அவனுடைய பட்டயத்தை கீழே போட்டுவிட்டு அவனுடைய தலைக்கவசத்தை எடுத்துவிட்டு, அவருடைய பாதத்தில் விழுந்தான்." 114. ஓ, நான் அந்த நாட்களில் வாழ்ந்திருந்தால் கர்த்தருடைய சேனையின் அதிபதியிடம் ஓடிச் சென்று பேசியிருப்பேன்" என்று குருடனாகிய பர்திமேயுஸ் கூறியிருப்பான். 115. பிறகு அவன் இருக்கும் இடத்தில் இருந்து நூறு அடி தூரம் கூட இருக்காது, அதே அந்த சேனையின் அதிபதி அந்த நகரத்தின் வழியாக வந்து கொண்டிருக்கிறார் என்று அவன் சிறிதும் கூட நினைத்திருக்க மாட்டான். அந்த கர்த்தருடைய சேனையின் அதிபதி அந்த நகரத்தின் வழியாக அவருடைய பாதையில் இருந்தார். 116. உங்களுக்குத் தெரியுமா, நாம் அவரைக் குறித்து சிந்திக்கத் துவங்கும் போது. அவர் நமக்கு காட்சியில் தோன்றுவார். கிளியோப்பாஸ் மற்றவர்களும் அவரைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த போதுதான் அவர் காட்சியில் தோன்றினார். ஆகவே எப்பொழுதும் அது "என் இருதயத்தின் தியானமாக இருக்கட்டும், என் எல்லா நினைவுகளாகவும் இருக்கட்டும், மேலும் என்னுடைய எல்லா சங்கீதமாகவும் இருக்கட்டும், தேவனே, நான் உம்மையே இரவு பகலாக தியானித்துக் கொண்டிருக்கட்டும். தேவனை நம் அருகில் கொண்டு வரும் வழியாக அது இருக்கிறது. 117. ஜோன்ஸ் குடும்பத்தினர், இதைக் குறித்து என்ன கூறுவார்கள், மேலும் அடுத்த வாரம் எங்கு போகிறீர்கள் என்பதை எல்லாம் குறித்த இப்படிப்பட்ட காரியங்களைப் பற்றி யோசிப்பதை நிறுத்துங்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். ஒவ்வொரு நாளும் நான் அந்தப் பரலோகப் புறாவுடன் நடந்து செல்லும்படி, என் வழியை அன்பால் நிரப்புவீராக. சங்கீதங்களுடனும், புன்னகையுடனும் நான் எப்பொழுதும் செல்லட்டும். ஒவ்வொரு நாளும் அன்பால் என்னுடைய பாதையை நிரப்பும்" அவ்வளவு தான். 118. பள்ளிக்கூடம் செயல்பட்டாலும் அல்லது இல்லை என்றாலும் அது ஒரு பொருட்டல்ல, சரியாக சாலையில் சென்று கொண்டிருங்கள். அப்படி இல்லையென்றால், நாம் ஆசிரியரை வெளியே அனுப்பிவிட்டு தேவனை விசுவாசித்துக் கொண்டே இருப்போம் பாருங்கள்? தேவன் மீது உங்களுடைய தியானத்தை தொடர்ந்து வைத்துக் கொண்டி ருங்கள். இவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள். ''புகழ் எதுவோ, புண்ணியம் எதுவோ இவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்" என்று வேதம் கூறுகிறது. 119. நல்லது, நம்முடைய நினைவுகள் எப்பொழுதுமே எதிர்மறையாகவே இருந்து கொண்டிருக்கிறது. நாம் ஜெப வரிசையில் வருகிறோம், அவர்கள் ஜெப வரிசையில் வருகிறதை நான் கவனித்து பார்க்கிறேன். ஓ அது அப்படியா? என்று அவர் என்னிடம் கூறுவாரென்றால்" ஓ நான், நீ ஒரு போதும் அதைப் போன்ற எந்த ஒன்றையும் பெற்றுக் கொள்ள முடியாது. இல்லை. நீ துவக்கத்திலிருந்தே மிகவும் எதிர்மறையுடன் இருந்து கொண்டி ருக்கிறாய். 120. அப்படியே வாருங்கள்; "இம்மானுவேலின் நரம்புகளிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தால் நிறைந்த நீருற்றுக்கு வாருங்கள். அங்கு தான் பாவிகள் அந்த வெள்ளத்தில் மூழ்கி தங்கள் பாவக் கறைகளை போக்கிக் கொள்கின்றனர்" அவ்வளவுதான். விசுவாசத்துடன் வாருங்கள். "தேவனிடத்தில் வருகிறவர்கள் அவர் இருக்கிறார் என்றும், அவரை உண்மையாக தேடுகிறவர்களுக்கு அவர் பலன் அளிக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும்." 121. நான் ஓரல்இராபர்ட்ஸ்-ன் ஜெபவரிசையின் வழியாக சென்று கொண்டிருக்க முடியாது, அதன் பிறகு டாமிஹிக்ஸ் ஜெப வரிசையின் மூலமாக, பிறகு ஆஸ்பார்னுடைய ஜெபவரிசையில் மற்றும் ஆலனுடைய ஜெப வரிசையின் வழியாக மற்றும் பிரன்ஹாம்-ன் ஜெபவரிசை, இன்னார் இன்னாரின் ஜெபவரிசை, இந்த சபைக்கு மற்றும் அந்த சபைக்கு சென்று கொண்டிருக்க முடியாது. ஏன், நீங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டு மட்டுமே இருக்கிறீர்கள்; அவ்வளவுதான். அவ்வளவுதான். 122. நாம் செய்ய வேண்டி காரியம் என்னவென்றால் அது தேவனாக இருக்கிறது என்று உங்கள் மனதில் நிச்சயப்படுத்திக் கொள்வது மட்டுமே, தேவன் அப்படித்தான் கூறியுள்ளார், நான் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்யப் போகிறேன். அது என்றென்றைக்குமாக அதை தீர்த்து வைக்கிறது. ஆமென். அவ்வளவுதான் தேவன் அப்படிச் சொல்லியிருக்கிறார். போதகரிடத்தில் சென்று "போதகரே மூப்பர்களை வரவழைத்து அவர்கள் மீது எண்ணெய் பூசி அவர்களுக்காக ஜெபியுங்கள், விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். எனக்குத் தெரிந்ததெல்லாம் அதுமட்டுமே" ஆமென். 123. ஜெர்மனி தேசத்தில் உள்ள ஒரு சிறு பெண்ணிடம் இருந்து எனக்கு சமீபத்தில் ஒரு கடிதம் கிடைத்தது. ஏன், அவள் சுமார் பதினைந்து வருடங்களாக மூட்டு வலியினால் நடக்க முடியாதவாறு முடமாக்கப் பட்டிருந்தாள்; நான் அவளுக்கு ஒரு கைக்குட்டையை அனுப்பினேன். நாங்கள் ஒரு மாதத்தில் அவைகளை ஆயிரக்கணக்கில் வெளியே அனுப்பி வைப்போம். அதனால் அவளுக்கு இந்த சிறிய கடிதம் கிடைத்தது. மேலும் நாங்கள் ஒரு சங்கிலி தொடர் ஜெபத்தை உலகம் முழுவதிலுமாகக் கொண்டிருந்தோம். ஆகவே அவள் இதை வாசித்தாள், "இப்போது அதில் இப்படியாக கூறப்பட்டிருந்தது, 'உன்னுடைய போதகர் அங்கு இல்லாமல் இருப்பாரென்றால், அல்லது அவர் ஒரு அவிசுவாசியாக இருப்பாரென்றால், அவரை அழைக்க வேண்டாம் பார்த்தீர்களா? ஆனால் அங்கே அண்டை வீட்டுக்காரர் ஒரு விசுவாசியாக இருப்பாரென்றால், அந்த விசுவாசியை அழைத்து, உன்னுடைய தவறுகள் எல்லாவற்றையும் அறிக்கையிடு நீ செய்த எல்லாவற்றையும் தேவன் மன்னிக்க வேண்டும் என்று கேள். ஒவ்வொரு காரியத்தையும் சரி செய்து கொள். பின்பு ஜெபம் செய். இந்த கைக்குட்டையை உன்னுடைய வஸ்திரத்தின் கீழே உள்ள இருதயத்தின் மீது வைத்துக் கொள். பிறகு விசுவசிப்பாயாக" ஆகவே அவளுக்கு அனுப்பப்பட்டிருந்த எல்லா தேவைகளையும் அவள் சந்தித்தாள். அப்படி அவள் செய்த போது, தன்னுடைய இருதயத்தின் மீது அவளுடைய கரத்தை வைத்தாள். "இப்பொழுது பழைய மனிதனாகிய பிசாசே, நீண்ட காலமாக நீ என்னிடத்தில் இருந்தது போதும். வெளியே போ" என்று கூறினாள். இதோ இங்கே அவள் நடந்து வந்து கொண்டிருக்கிறாள் அவ்வளவுதான் அது விசுவாசிப்பதற்கு எளிமையாக இருக்கிறது. 124. இங்கே அரிசோனாவில், நாங்கள் அப்பாச்சி என்ற பழங்குடி இந்திய ஜனங்களிடத்தில் இருந்தோம். நான் எப்பொழுதும் அந்த அப்பாச்சி பழங்குடியினருக்காக கவலை கொண்டவனாக இருந்தேன். அந்த இரவில் அவர்கள் அங்கே வெளியே இருந்தனர். அங்கே அவர்கள் ஒரு படையைப் போல (Army) அங்கே அமர்ந்து கொண்டிருந்தனர் அவர்களிடம் தேவனைக் குறித்துப் பேச ஆரம்பித்தேன். உங்களுக்குத் தெரியுமா? அந்த இந்தியன் (Red Indians) அவன் ஒரு வகையான விசித்திரமானவனாக இருந்தான். அவன் ஒரு கோவேறு கழுதையைப் போல இருந்தான். அவன் தவறான இடத்தில் சாப்பிட மாட்டான். ஆகவே அவன் அதைக் கவனித்தான், முதலில் அவன் அதைப் போலி என்று நினைத்தான். அதன் பிறகு அவன் கொண்டு வரப்பட்டான். நான் ஜெப வரிசைக்கு அழைத்தேன். 125. நல்லது, வெளியில் அங்கே யாரோ சிலர் "தேவனுக்கு மகிமை" என்று உரக்கக் கத்துவதை நான் கேட்டேன். அது என்னுடைய ஸ்பானிஷ் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் சுற்றிலுமாக இருந்து ஒரு ஜெப வரிசையை கொண்டிருந்தனர் என்று நான் அறிந்து கொண்டேன். ஏனென்றால் அவர்கள் எப்பொழுதுமே நம்பிக்கையுடன் விசுவாசத்தைக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள்... இது இந்தியர்களுக்கு மட்டுமே என்று இருந்தனர். 126. முதலாவது காரியம், நான் அங்கே சுற்றிலுமாக கவனித்தேன், தேவசபையைச் (Assembly of God) சேர்ந்த ஒரு ஸ்திரீ அங்கே பின்னால் இருந்தாள், அவள் ஒரு சிறிய ஊழியத்தை உடையவளாக இருந்தாள். நான் இப்படி படிக்கட்டில் நின்று கொண்டிருந்னே, அவர்கள் எல்லோரும் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அது அருமையான காட்சியாக இருந்தது. அவள் முதுகில் ஏதோ ஒன்றை வைத்திருந்தாள் முதலாவது ஆளாக அவளைக் கொண்டு வந்திருந்தனர். அவள் விரிந்த மணிக்கட்டுகளுடன், ஒரு சிறிய குழந்தையை முதுகில் சுமந்து கொண்டிருந்தாள். சிறு குழந்தைகளை சுமக்கும் துணிப்பை அவள் முதுகில் இருந்தது. நான் அவளுக்கு அனுதாபம் கூறவேண்டுமென்று நினைத்தேன். நான் சரியானதை கண்டுபிடிக்க முயற்சித்தேன் என்று நினைத்தேன். "இந்த குழந்தையை எனக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்." என்றேன். அவள் அப்படிச் செய்ய போவதில்லை. ஆகவே நான் சற்று அவளுடைய மனதை பிடித்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். 127. நான், மொழிபெயர்ப்பாளரிடம் "அவளுக்கு பால்வினை நோய் (Vinereal Disese) இருக்கிறது, ஆனால் அது...." என்று கூறினேன். அந்த மொழிபெயர்ப்பாளர் அதை அப்படியே கூறினார். அவள் உண்மையில் ஆழமாக என்னைப் பார்த்தாள். இப்பொழுது அதற்கு காரணம், ஒழுக்கக்கேடான வாழ்க்கையால் அது ஏற்படவில்லை, அழுக்கிலும், சகதியிலும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது" என்று கூறினேன். அது சரி என்பதைப் போல் தலையை அசைத்தாள்; நான் அவளுக்காக ஜெபித்தேன். 128. அடுத்ததாக பார்வை நரம்பை சேதப்படுத்தும் கண் அழுத்த (Glaucoma) நோயாக இருந்தது. இந்தியர்களுக்கு (Red Indians) அது அதிகமாக இருந்தது, அதற்காக ஜெபித்தேன். அடுத்து ஒரு சிறிய பெண் வந்தாள், அவளுடைய தலை இப்படி கீழே தொங்கிக் கொண்டிருந்தது. அவள் ஒரு கூச்ச சுபாவம் உடையவளாக இருந்தாள். "இப்பொழுது இந்த சிறிய பெண்" என்று கூறினேன். மேலும் "அவளுக்குக் காய்ச்சல் கண்டிருந்தது, அந்த காய்ச்சலானது அவளைக் காது கேட்கமுடியாமலும், வாய் பேச பேசவும், கேட்கவும் முடியாமலும் செய்து விட்டது. அவள் முடியாமல் இருந்தாள்" என்று கூறினாள். 129. "ஆம் அது சரியாக இருந்தது, ஒவ்வொன்றும் அப்படியே சரியாக இருந்தது" என்று அவளுடைய தாயாரும் கூறினாள் என்று அந்த மொழிபெயர்ப்பாளர் கூறினார். இந்தியர்களாகிய அவர்கள் சுற்றிலுமாக ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள துவங்கினார்கள் உங்களுக்கு தெரியுமா, அவர்கள் இதுவரை கண்டிராத சில காரியங்களை காணத் துவங்கினர். ஆமாம். 130. எனவே, "இந்த சிறுமியை பேசவும், கேட்கவும் வைக்க என்னால் செய்ய முடியாது. தேவன் அதைச் செய்து கொண்டிருக்கிறார்" என்று கூறினேன். ஆனால் "அவர் இங்கே இருந்து கொண்டிருக்கிறார் என்பதின் அடையாளமாக மட்டுமே அது இருக்கிறது அந்த அவருடைய பிரசன்னமானது இங்கே இருந்து கொண்டிருக்கிறது. அவர் நம்மை அபிஷேகித்து இருக்கிறார்" என்று கூறினேன். மேலும் அந்த சிறிய பெண்ணை என் கரங்களில் எடுத்துக் கொண்டேன். "பரலோக பிதாவே" என்றேன். அந்த ஜெபத்தை அவர்கள் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. "ஊமையும், செவிடுமான அந்த ஆவி இந்த சிறுமியை விட்டு அகன்று போகட்டும்" என்று கூறினேன். மேலும் அவளை இப்படி கீழே இறக்கி விட்டேன். அவள் சுற்றிலுமாக திரும்பிப் பார்த்து அவளுடைய பெரிய கருப்பு கண்களால் என்னை கவனித்தாள். "தேவனுக்கு துதி உண்டாகட்டும் என்று கூறு" என்றேன். "லும்.. லும்... லும்மா லும்" அல்லது இப்படி எதையோ கூறினாள். "அவள் நன்றாகப் பேசுவாள்" என்று கூறினேன். "அவள் இப்பொழுது நன்றாகப் பேசுகிறாள்" என்று அவளுடைய தாயார் கூறினாள். பிறகு அவள் அப்பால் சென்று விட்டாள். "அதன் பிறகு அவளுடைய பேச்சு இப்பொழுது நிறைவாக இருக்கிறது" 131. அடுத்தாக வந்தது ஒரு தாயாராக இருந்தார்கள், அதன் பிறகு உடனே ஒரு சிறிய அருமையான பையன் வந்தான். "சரி, நீ தேவனை விசுவசிக்கிறாயா? நீ ஆங்கிலம் பேசுவாயா? என்று கேட்டேன் இல்லை அவன் ஆங்கிலம் பேசவில்லை. "இந்த சிறிய பையனை தேவன் குணமாக்குவார் என்று விசுவசிக்கிறாயா?" என்று கூறினேன். 132. அவள் கீழே சென்று அவனுடைய தலையைப் பிடித்துக் கொண்டாள்; உங்களுக்கு தெரியுமா, அவர்கள் முரட்டுத்தனம் அவனுடைய தலைமயிர் குதிரையின் பிடரியில் இருக்கும் முடியைப் போல கடினமாக சொரசொரப்பாக இருந்தது, அவனை இப்படி பிடித்துக் கொண்டாள். "அவனுக்கு மாறுகண் கோளாறு இருக்கிறது, ஆனால் நீ தேவனை விசுவசிக்கிறாய்?" என்று கூறினேன். மொழிபெயர்ப்பாளர் "மாறுகண்கள்" என்று கூறியதை அவள் கேட்டாள். ஆகவே, அவள் உடனே அவளுடைய தலையின் பின்பகுதியை பிடித்துக் கொண்டு இப்படி பின்னாக திரும்பினாள். சிறிய கண்களால் இப்படி பார்த்தாள். "இப்பொழுது நீ விசுவாசித்தால் தேவன் அந்த சிறிய கண்களை நேராக்க முடியும்." என்று கூறினேன். மேலும் "தேவன் அதைச் செய்வார்" என்றும் கூறினேன். ஆகவே அந்த மொழிப்பெயர்ப்பாளார்....அப்படியே கூறினார். "இப்பொழுது, "அதை மெதுவாக பெற்றுக்கொள்" என்று கூறினேன். 133. அவர்களுக்கு எந்த ஒரு வாக்கியமோ அல்லது நிறுத்தற் குறீயிடுகளோ தெரியாது. அவர்கள் மிகவும் கீழானநிலையிலிருந்து துவங்கியவர்கள் பிறகு மேலே ― மேலே செல்கிறவர்கள். எப்படிப்பட்டவர்கள் அந்த அப்பாச்சியர்கள் (பழங்குடியினர்) என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் ஒருவித கரடு முரடான இந்தியர்களாக இருந்தனர். "ஆம்". அதன் பிறகு அவள் விசுவாசித்தல் என்று அவர்கள் கூறினார்கள். 134. அந்த சிறிய பைனை மேலே தூக்கி வைத்துக் கொண்டேன்.. அவன் அரைகுறையாக பழக்கப்பட்ட ஒரு குதிரையை நீங்கள் அடக்க முயற்சிப்பது போல இருந்தான். என்னிடம் ஒரு துண்டு மெல்லும் பசை (Chewing gum) மிட்டாய் இருந்தது. நான் இதை அவன் மூக்குக்கு அருகில் அதை அவன் நுகரட்டும் என்று வைத்தேன். பின்னர் நான் அவனை இப்படி என் கைகளில் ஏந்திக் கொண்டேன், "இதை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டாம்" என்று கூறிவிட்டேன். "பரலோகப் பிதாவே, இந்த ஏழை ஜனங்கள், இவர்கள் தான் உண்மையான அமெரிக்கர்களாக இருக்கிறார்கள்" என்று கூறினேன். 135. அது சரிதான். நாம் அமெரிக்கர்கள் அல்ல. ஹா...ஹா.. நாம் அமெரிக்கர்கள் அல்ல, நாம் வேறு இடத்திலிரு்து உள்ளே வந்த அந்நியர்கள், நாம் அவர்களிடமிருந்து தேசத்தை எடுத்துக் கொண்டோம். அவர்கள் தான் உண்மையான அமெரிக்கர்களாக இருக்கின்றனர். தேவன் அவர்களுக்கு இந்த தேசத்தை கொடுத்தார்; நாம் வந்து அதை அவர்களிடம் இருந்து எடுத்துக் கொண்டோம். நாம் அவர்களை நடத்திய விதம், இந்த தேசத்தின் கொடியில் ஒரு கறை படிந்ததாக இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். அது சரி. ஜப்பான் மற்றும் எல்லா இடங்களுக்கும் நாம் பணத்தை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். அது திரும்பவும் நமக்கு வந்து விடும், ஆனால் நம்முடைய இந்தியர்கள் (பழங்குடி இனத்தை சேர்ந்த செவ்விந்தியர்களை தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார்) இங்கே படுத்துக் கொண்டு, பட்டினியால் மடிந்து கொண்டிருக்கிறார்கள், அது சரியல்ல. நிச்சயமாக அது சரியாக இல்லை. 136. அதன்பிறகு அந்த ஏழை பையனை கவனித்தேன். நான் அவனை என்னுடைய தோளின் மீது வைத்துக் கொண்டேன்."தேவனே, இந்த ஜனங்களுக்கும் தயவு கிடைப்பதை நான் காணச் செய்வீராக. இந்த சிறிய பையனின் கண்கள் நேராக்கப்பட்டும்" என்று கூறினேன். மேலும் எனக்கு முன்பாக ஒரு தரிசனம் வந்தது, அவனுடைய சிறிய கண்கள் நேராக்கப்பட்டதைப் போல இருந்ததை நான் கவனித்தேன். 137. அவனுடைய தலை என் தோள் மீது இருந்தது. நான் அவனை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். மேலும் "நீங்கள் அனைவரும் கவனியுங்கள்" என்றேன். நூற்றுக்கணக்கானவர்கள் எல்லா இடங்களிலும் உட்கார்ந்து கொண்டிருந்தனர் "இப்பொழுது அந்த குழந்தையின் கண்கள் நேராகவில்லையென்றால், நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாக இருப்பேன். பாருங்கள்? அவைகள் சரியாகி விட்டால், அதன் பிறகு, நான் உங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருந்து கொண்டிருப்பேன். இந்த அரசாங்கம் உங்களுக்குச் செய்கிற உதவியை நான் செய்ய முடியாது. ஆனால் "இயேசு உங்களை நன்றாக போஷிப்பார் என்று நான் அறிந்திருக்கிறேன். இப்பொழுது, நீங்கள் இது சரியா அல்லது அப்படி இல்லையா இருக்கிறதா என்று பாருங்கள்." என்றேன். நான் அவனுடைய தலையை சுற்றிலுமாக காண்பித்தேன். ஒரு ஜெபவரிசையைக் குறித்து பேசுகிறீர்கள். இப்பொழுது எனக்கு அது கிடைத்தது என்று கூறினேன். அங்கே ஒரு நெரிசல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. 138. அதன் பிறகு அடுத்ததாக வயதான ஒரு இந்திய ஸ்திரீயானவள் வந்து கொண்டிருந்தாள் அவளுக்கு அடுத்ததாக அவள் இருந்தாள். ஓ, நீங்கள் அவர்களை தோற்கடிக்க முடியாது, மேலும் அங்கே ஒரு இந்திய ஸ்திரீ வந்தாள் அவள் இரண்டு துடைப்பக் குச்சிகளை ஒரே துண்டாக சுற்றி இங்கே கைக்கு கீழே வைத்துக் கொண்டு இருந்தாள், மேலும் அவள் வெளியே செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தாள். 139. மேலும், அங்கே ஒரு சிறிய இந்தியப் பையன் குதித்துக் கொண்டிருந்தான்; மேலும் அவளுக்கு முன்பாக குறுக்கே கடந்து செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தான். நாங்கள் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே சகோதரர் ஜாக் மூர் (Jack Moore) உங்களில் அநேகருக்கு சகோதரர் ஜாக் மூர்-ஐ தெரியும்; அவர் அங்கே சென்று, அவனை மேலே கொண்டு வந்தார். 140. எனவே, நான் அந்த வயதான ஸ்திரீயை கவனித்துக் கொண்டிருந்தேன். இப்படி அவள் மேலே மிக அருகில் வந்தாள். அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஓ, நீங்கள் ஜெப வரிசையை குறித்துப் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். அவள் உண்மையிலேயே மேலே வந்து கொண்டிருந்ததை நான் கவனித்துக் கொண்டிருந்தேன், இரண்டு ஊன்றுகோல்களை வைத்துக் கொண்டு நகர்ந்து வந்து கொண்டிருந்தாள். மேலும் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தாள். அதில் ஒன்றை அவள் வெளியில் வைத்து விட்டு, மற்ற ஒன்றை வைத்துக் கொண்டு இப்படி சற்று மெதுவாக நகர முடிந்தது. அவளுக்கு எண்பது வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அவள் எனக்கு அருகில் வந்த போது என்னை ஏறெடுத்துப் பார்த்தாள். மேலும் ஆழமான வெட்டுக்காயங்கள் அவளுடைய கன்னத்தில் இருந்தது, அவைகள் பெரிதாக இருந்தது என்னுடைய தாயார் ஒரு பாதி கலப்பு இனத்தவள் என்று நீங்கள் அறிந்துள்ள வரையில் கூட எனக்கு தெரியாது, அவர்களுக்கும் கூட ஆழமான பெரிய வெட்டுக்கள் கன்னங்களில் இருந்தது. ஆகவே இப்படி அவள் மேலே வந்த போது, நான் அவளை கவனித்தேன் அப்பொழுது, அந்த ஆழமான வெட்டுக்காயங்களின் வழியாக வெளிறிப் போன அந்த சிறிய கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் வழிந்து கொண்டிருந்தது. "யாரோ ஒருவருடைய தாய்" என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆகவே முதலாவதாக நான் அவளுக்கு ஜெபம் செய்ய வேண்டும் என்பதைப் போல அவள் என்னை பார்க்கிறாள் என்று நான் நினைத்தேன். ஓ தேவனே, இந்த சிறிய வயதானவர்களின் காரியத்தை, இப்படி நடுங்கிக் கொண்டிருக்கிற அந்த சிறிய கன்னங்களையும் நோக்கிப் பார்ப்பீராக" அவள் என்னையே கவனித்துக் கொண்டிருந்தாள், அவள் புன்னகைக்க ஆரம்பித்தாள். அவள் வைத்திருந்த அந்த ஒரு ஊன்று கோலையும் அங்கே என்னிடம் ஒப்படைத்து விட்டு மேடையை விட்டு வெளியே சென்றாள். ஆமாம். பாருங்கள், எளிமையான விசுவாசம் விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். 141. நான் எல்லோருக்காகவும் ஜெபம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், ஆனால்...ஓ, நான், பிறகு நான் பகுத்தறியும் காரியத்தை நிறுத்த வேண்டியதாகி விட்டது. இவ்வளவு காலமும் காலை சுமார் மூன்று மணி, நான்கு மணிக்கெல்லாம் குளிரில் நனைந்து, கொண்டு மேடு பள்ளங்கள் வழியாக வந்து கொண்டிருந்தனர். எவ்வளவு ஈரமாக இருக்க முடியுமோ அவ்வளவு ஈரத்துடன் இருப்பார்கள். ஆகவே "அவர்களுடன் இது என்ன ஒரு காரியமாக இருக்கிறது?" என்று கூறினேன். 142. "நல்லது, நீங்கள் தவறாக இருக்கிறீர்கள் என்று அவர்கள் நினைத்தார்கள்" என்று அவர் கூறினார். மேலும் அவர் "இப்பொழுதோ அவர்கள் பாலைவனத்துக்குள் சென்று தங்கள் அன்புக்குரியவர்களை நேசித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆற்றின் ஆழமில்லாத இடத்திற்கு சென்று கொண்டிருக்கவில்லை; அவர்கள் ஆற்றின் வழியாக மெதுவாக கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார். 143. நல்லது, இதோ வயதான ஒரு மனிதர் தலைமயிர் நரைத்தவராக வந்தார். அவர் ஒரு மரப்பலகை மற்றும் மீது இரண்டு குச்சிகளை வைத்திருந்தார் கால்களை அதன் மேல் வைத்து, இரண்டு குச்சிகளை வைத்து கடந்து சென்றார். அவர் வாத நோயினால் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். அங்கே ஒரு பெரிய ஆள் நின்று கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அழகாக, பெரிய இந்தியனைப் போல இருந்தார், அவருடைய உதடுகள் சற்று நீல நிறத்தில் ஈரமாக இருந்தது. எனவே நான் உங்களுக்கு விஷக்காய்ச்சல் இருக்கிறது, பயமில்லையா? என்று கூறினேன். அவர் "இல்லை" என்றார். "நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?" என்றேன். "கொஞ்சம் பேசுவேன்" என்றார். "உங்களுக்கு விஷக்காய்ச்சல் கண்டிருக்கிறது நீங்கள் பயப்பட வில்லையா? என்றேன். "இல்லை" என்றார். "இயேசு கிறிஸ்து என் மீது அக்கறை கொண்டிருக்கிறார். நான் என்னுடைய அப்பாவை அழைத்துவந்திருக்கிறேன் என்றான். "ம்....ம்.... என்று கூறிவிட்டு, அது உன்னுடைய சகோதரனா? என்று கேட்டேன்.'ஆம்" என்றான். "நான் அவருக்காக ஜெபம் செய்தால் அவர் சரியாகி விடுவார் என்று நினைக்கிறாயா?" என்றேன்."ஆம்" 'அவர் ஏதாவது ஆங்கிலம் பேசுவாரா?" " இல்லை " "அவரை அருகில் வரச்சொல்" என்று கூறினேன். 144. அவர்கள் அவரைக் கொண்டு வந்தனர். அவருடைய தலையின் மீது என்னுடைய கரங்களை வைத்தேன். வயதான அவருடைய தலை நடுங்கிக் கொண்டிருந்தது. "பிதாவே, அவர் இந்த பையன்களுக்காக அநேக நாட்கள் கடினமாக வேலை செய்திருக்கிறார். அவர்கள் இப்பொழுது உம்மைகனப்படுத்துகின்றனர். ஜெபத்திற்காக இந்த காலை வேளையில் ஆற்றைக் கடந்து அவர்கள் அவரை அழைத்து வந்திருக்கின்றனர், அவரை குணப்படுத்த வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்" என்று கூறினேன். மேலும் அவரை கொண்டு செல்லுங்கள். அடுத்த நபரை வரச் சொல்லுங்கள் என்று கூறினேன். 145. முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, ஒவ்வொருவரும் சத்தமிட்டுக் கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும் இருப்பதை கேட்க முடிந்தது. அந்த முதியவர் தனது தோளின் மீது அந்த மரப்பலகையை வைத்துக் கொண்டு, சுற்றிலும் எல்லோரிடமும் கைகளை அசைத்து கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அது என்னவாக இருக்கிறது. அது தேவனை விசுவாசிப்பதற்கு வெறும் நம்பிக்கையாக மட்டுமே இருக்கிறது. அது ஏதோ ஒரு ஏமாற்றுகிற மந்திரவித்தை அல்ல, அது குழந்தையின் விசுவாசத்தைப் போல மட்டுமே இருக்கிறது. பாருங்கள், நாம் அதை வியாக்கியானம் செய்ய முயற்சித்து வெகுதூரம் சென்று விட்டோம். விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். 146. அவ்வளவுதான். அந்த வழியானது இந்த மகத்தான "சேனைகளின் கர்த்தருடைய அதிபதியாக இருக்கிறது. அங்கே அந்த இரவில் அங்கு இருந்த ஒளி அவராக இருந்தது, அவரே அங்கே இருந்தார். உங்களுக்குத் தெரியுமா, அதில் இன்னும் சில காரியங்கள் இருக்கிறது, இயேசு இருந்து கொண்டிருக்கும் இடங்கள் மற்றும், இயேசுவை எங்கெல்லாம் பார்க்கிறீர்களோ அங்கே அதிக சத்தத்தைக் கேட்பீர்கள்... ஏன் என்று எனக்கு தெரியாது நெருக்கிக் கொண்டிருப்பார்கள், ஆனால் அது தான் வழியாக இருக்கிறது. அவர்களில் சிலர் கலிலேயாவின் தீர்க்கதரிசிக்கு ஓசான்னா, ஓசான்னா என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். 147. ஆனால் மற்றவர்கள் "இந்த வஞ்சகனை விட்டு விலகி இருங்கள். அவனை இந்த நகரத்தில் இருந்து துரத்துங்கள். இங்கே அவன் நமக்கு தேவை இல்லை" என்று கூறிக்கொண்டிருந்தனர். அழுகிப் போன பழங்களையும், அழுகிப்போன முட்டைகளையும் அவர் மேல் வீசி எறிந்தனர். உங்களுக்கு தெரியும், அது இப்படியாக போய்க் கொண்டிருந்தது. 148. எனவே பர்திமேயுஸ் "கடந்து போய்க் கொண்டிருப்பது யார் என்று" "கடந்து சென்று கொண்டிருப்பது யார் என்று கூறினான், மேலும் அவனைச் சுற்றிலுமாக ஜனங்கள் கூட்டமாக கூடியிருந்தனர். அவனை முன்னும் பின்னுமாக நெருக்கிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அவனைக் கீழே தள்ளிவிட்டனர். அவன் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த பாறையில் போய் விழுந்தான், மீண்டும் கீழே சென்று அமர்ந்து கொண்டான். ஜனக்கூட்டத்தில் சிலர், அவருக்கு ஆதரவாகவும், சிலர் அவருக்கு எதிராகவும் பேசிக் கொண்டிருந்ததை அவன் கேட்டான். இன்றும் கூட அதே வழியில் தான் அது இருந்து கொண்டிருக்கிறது. சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் அவருக்கு எதிராகவும் இருக்கின்றனர். 149. "ஏய் தீர்க்கதரிசி, நீ தானே லாசரு என்ற பெயரை உடைய மரித்துப் போன மனிதனை உயிரோடு எழும்பச் செய்தாய்; இங்கே எங்களிடத்தில் உள்ள கல்லறைகள் முழுவதும் மரித்தவர்களால் நிறைந்திருக்கிறது நாங்கள் காணும்படி நீ சென்று ஒருவனை எழும்பச் செய். நாங்கள் உன்னை விசுவாசிப்போம். அதை செய்யும் வரையிலும், நீ ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாக இருக்கிறாய்" என்று அந்த ஆசாரியன் கூறிக்கொண்டிருந்ததை நேரடியாக அவன் கேட்டான். அதே ஆள்தான் "நான் கீழே சென்று அதை நிறுத்தப் போகிறேன், இதெல்லாம் என்ன? என்று" என்னிடம் கூறினான் என்றான் 150. "யாராவது எனக்கு சொல்லுங்கள், யாராவது எனக்கு உதவி செய்யுங்கள், யாராவது எனக்கு உதவி செய்யுங்கள ஏன்? யார் அருகில் கடந்து சென்று கொண்டிருப்பது யார்? இந்த சத்தங்கள் எல்லாம் என்ன?" என்று கூறிக்கொண்டே இருந்தான். யாரும் அவனைக் கவனிக்கவே இல்லை, வெகு நேரத்திற்குப் பிறகு அது ஒரு வாலிப பெண்ணாக இருந்திருக்க வேண்டும். அங்கே படுத்துக் கொண்டிருந்த இந்த வயதான ஏழை மனிதனை அவள் பார்த்தாள், மேலும் அவனை தூக்கி எடுத்தாள். ஐயா, உங்களுக்கு ஏதேனும் காயம் இருக்கிறதா? என்று கேட்டாள். "இல்லை அம்மா, இந்த சத்தங்கள் எல்லாம் என்ன? என்று எனக்கு கூற முடியுமா? என்று விரும்புகிறேன்" என்று கூறினான். "ஓ", 'நசரேயனாகிய இயேசு அருகில் போய்க் கொண்டிருக்கிறார்' என்றாள் அவள். "ஏன், யார் அந்த நசரேயனாகிய இயேசு? என்றான். "நீங்கள் ஒரு இஸ்ரவேலர் தானே?" என்றாள்."ஆமாம்" என்றான். 151. "நல்லது, இங்கே பாருங்கள், நான் நசரேயனாகிய இயேசுவின் ஊழியக்காரியாக இருக்கிறேன்." நசரேயனாகிய இயேசுவின் ஊழியக்காரர்களுக்கு எந்த இடத்திலும் ஏதாவது காரியம் இருந்து கொண்டே இருக்கும் அவர்கள் எப்பொழுதுமே, யாருக்காவது உதவி தேவைப்பட்டால் அதை செய்ய விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். யாருக்காவது தேவைப்படும் நின்று அவர்களுக்கு உதவி செய்ய விருப்பம் கொண்டிருப்பார்கள். தேவனுடைய ஊழியக்காரர்கள் அப்படித்தான் செய்வார்கள். மேலும் அவள்"நானும் கூட நசரேயனாகிய இயேசுவின் விசுவாசியாக இருக்கிறேன். நசரேயனாகிய இயேசு தாவீதின் குமாரான் என்று உங்களுக்குத் தெரியுமா, என்று கூறினாள். "தாவீதின் குமாரனா?" ஏன், எனக்கு நினைவு இருக்கிறது, நான் எப்பொழுதுமே இங்கே உட்கார்ந்து கொண்டு என்னுடைய தாயார் என்றாவது ஒரு நாள் தாவீதின் குமாரன் வருவார் என்று என்னிடம் கூறியதை நான் சிந்தித்துக் கொண்டே இருப்பேன்" என்று கூறினான். 'ஆமாம் அவர்தான், அந்தக் கலிலேய தீர்க்கதரிசி""தீர்க்கதரிசியா?' "ஆமாம்""மேலும் நகரத்தில் சகேயு என்று அழைக்கப்படும் அந்த வியாபாரியை உனக்கு நினைவிருக்கிறதா? என்றாள். "ஆமாம், எனக்கு அவரை நன்றாகவே நினைவிருக்கிறது. அவர் எனக்கு முன்பு காசு கொடுப்பார்" என்றான். "நல்லது, அவருடைய மனைவி ரெபேக்காளை உனக்குத்தெரியுமா? "ஆமாம் எனக்கு ரெபேக்காளை நினைவிருக்கிறது" 152. "நல்லது, ரெபேக்காள் ஜெபம் செய்து வந்தாள். இந்த நகரத்திற்கு இயேசு வந்து கொண்டிருந்தார் என்று அவள் அறிந்திருந்தாள். ஏன் அவளுடைய கணவன் அவரை இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் ஜெபம் செய்து கொண்டிருந்தாள். "ஆமாம், மேலே தொடர்ந்து சொல்லுங்கள்" என்றான். 153. "நல்லது, இந்த காலையில் சகேயுஸ் அவரைக் காண்பதற்கு வெளியே போய்க் கொண்டிருந்தான்; மேலும் இயேசு அவனை பார்த்து விடக் கூடாது என்று விரும்பினான். ஆகவே அவன் அந்த அல்லேலுயா தெருவின் மூலைக்கு ஓடிச்சென்று மகிமையின் சாலைக்கு திரும்பினான், குப்பைத் தொட்டி ஒன்றை எடுத்து அதை கீழே வைத்து ஒரு அத்திமரத்தில் ஏறி, இரண்டு கிளைகளுக்கு இடையே குறுக்காக அமர்ந்து கொண்டான்.""ஹா ......ஹா ..." 154. "ஏற்கனவே, ரெபேக்கா அவனிடம் நீர் ஒரு யூதனாக இருந்து கொண்டிருக்கிறீர், மேலும் மேசியா வரும் போது அவர் ஒரு தேவனுடைய தீர்க்கத்தரிசியாக இருப்பார், காரணம் "தேவனாகிய கர்த்தர் உன்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவேன்" என்று மோசே கூறியுள்ளார். உமக்கு தெரியும் சகேயுஸ் என்று கூறியிருந்தாள், அவன் அந்த நகரத்தில் உள்ள வியாபாரிகளில் ஒருவனாக இருந்தான். மேலும், அவன் ஒரு செல்வந்தனாக இருந்தபடியினால் அந்த ரபி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உட்கார்ந்து கொண்டு சீட்டு விளையாட்டு விளையாடுவர்கள், அவர்களுக்கு காரியங்கள் அனைத்தும் நன்றாகவே தெரியும். அதனால் அந்த ரபி மற்றும் அவர்கள் அனைவரும், அவர் ஒரு தீர்க்கதரிசி அல்ல என்று தீர்மானம் செய்திருந்தனர். அந்த காரணத்தால் அந்த மனிதன் மேல் யாரும் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று கூறியிருந்தனர். 155. அதனால், சகேயுஸ் அவர் எப்படி இருப்பார் என்று காண விரும்பினான். அவன் அந்த மரத்தின் மீது ஏறி எல்லாக் கிளைகளையும் இழுத்து தன்னை சுற்றிலும் மறைத்துக் கொண்டான். மகிமையின் வீதி வழியாக அவர் வரும் போது அவனைப் பார்க்கும்படியாக ஒரு பெரிய பனை ஓலையை மேலே உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தான். எனவே அந்த மரத்தின் மேல் அவன் இருப்பதை யாரும் காணமுடியாதபடி இப்படி எல்லாவற்றையும் அமைத்து உட்கார்ந்து கொண்டான். மேலும் அவன் இப்பொழுது அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பாரென்றால் நான் பார்க்கிறேன். மேலும் நான் அவருடைய முகத்தை பார்ப்பேன். அவர் தீர்க்கதரிசியா அல்லது இல்லையா என்பது எனக்கு தெரிந்து விடும். ஒரு தீர்க்கதரிசி எப்படி இருப்பார் என்று எனக்கு தெரியும் என்று சொல்லிக் கொண்டான். 156. அந்த மூலையைச் சுற்றிலும் எல்லா சீடர்களும் வந்திருந்தனர். அந்த மீன்பிடிக்கும் பெரிய மனிதர்கள், தயவு செய்து நீங்கள் பின்னால் நிற்க முடியுமா? எங்களுடைய எஜமான் மிகவும் களைப்படைந்தவராக இருக்கிறார். இதை சொல்வதற்காக வருந்துகிறோம், ஆனால் எனவே நீங்கள் சற்று நேரம் பின்னால் தள்ளி நில்லுங்கள் அவருக்கு வழிவிடுவிடுகிறீர்களா? அவர் லெவின்ஸ்கி-யுடன் மேலே உள்ள உணவகத்தில் இரவு உணவு அருந்துவதற்கு போய் கொண்டிருக்கிறார். அதனால் பின்னால் நின்று கொள்ளுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தனர். நான் இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன், ஆனால்.... உத்தமத்துடன் இதைக் கூறுகிறேன், இங்கு லெவின்ஸ்கி என்ற பெயர் உடையவர் யாரும் இல்லை என்று நம்புகிறேன். எப்படி இருப்பினும், நான் அதை சற்று இயல்பாக இருக்க வேண்டுமென்று அர்த்தப்படுத்துகிறேன். அதை ஒரு நாடகம் போல உங்களுக்கு கூறினேன். "கொஞ்சம் பின்னால் நில்லுங்கள்" மற்றவர்களும் இங்கே வந்து கொண்டிருக்கின்றனர். 157. ஆகவே அவன் அந்த பனை ஒலையை சற்று மேலே உயர்த்தியவாறு வெளியில் கவனித்தான். "ம்....ம்...அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஓ... ஓ.. ஒருவேளை அவருடைய சீடர்களாக இருப்பார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ரெபேக்கா என்னிடம் அதைப்பற்றி கூறியிருக்கிறாள். "ம்....ம்.. நான் இன்னும் ஒரு நிமிடம் காத்திருப்பேன் என்று கூறினான். கொஞ்ச நேரம் கழித்த பிறகு மறுபடியும் அந்த பனை ஓலையை உயர்த்தி "நான் நன்றாகவே மூடிக்கொண்டிருக்கிறேன் இப்பொழுது அவர் என்னைப் பார்க்கட்டும். ஆமாம் நான் இரண்டு கிளைகளுக்கு இடையில் அமர்ந்திருக்கிறேன்" என்று கூறிக்கொண்டான். அங்கேதான் அந்த இரண்டு பாதைகளும் சந்திக்கின்றன, மேலும் அங்கேதான் உங்களுடைய வழிகளும், தேவனுடைய வழிகளும் சந்திக்கின்றன, அங்கேதான் அநேக ஜனங்கள் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வளவுதான். அங்கிருந்துதான் நீங்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். 158. அவன் அந்த கிளையின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தான். உங்களுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து ஒரு வகையான காலியிடத்தை அவன் பார்த்தான். இன்னும் சிறிது நேரம் சென்ற பிறகு அந்த மூலையைச் சுற்றிலும் எட்டிப்பார்த்தான், என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அவருடைய முகத்தை அவன் பார்த்தான். அந்த முகத்தைப் பார்த்தவுடன், அங்கே அந்த மனிதரிடத்தில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே, அவர் பேசிய விதம், அவர் எவ்வளவு கருணை உள்ளவராக இருக்கிறார் என்பதையும் வழியில் அவர் பேசியதை என்னால் கேட்க முடிகிறது. அவர் ...அவர் வித்தியாசமானவராக இருந்தார். அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதை நான் அறிந்து கொண்டேன். அவர் ஒரு தீர்க்கதரிசி இல்லை என்றால் பிறகு அவர் மேசியாவாக இருக்க முடியாது. ஏனென்றால் மேசியா ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று மோசே நமக்கு கூறியிருக்கிறார் என்று கூறினான். 159. "எனவே நான் அவரை முட்டாளாக்கி விட்டேனே. அவரை நோக்கும் போது எவ்வளவு நன்றாக இருந்தது. நான் திரும்பிச் சென்று ரெபேக்காவிடம் இதை சொல்ல வேண்டும். நல்ல காரியங்களை செய்வதற்கு எனக்கு அவிப்பிராயம் கிடைத்து விட்டது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த மரத்திலிருந்து வெளியே குதித்து, உண்மையிலேயே என்னுடைய சிந்தையின் ஒரு பகுதியை அவரிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியும். ஜனங்கள் எப்படி என்று உங்களுக்குத் தெரியும். "அற்புதத்தின் நாட்களெல்லாம் கடந்து போய்விட்டன, என்று லெவின்ஸ்கி அப்படி கூறியிருந்ததால். மற்றவர்களும் அதையே கூறினார்கள். அதனால் நான் நம்பினேன் என்று அவரிடம் கூறவேண்டும். ஆகவே நான் இதை விசுவாசிக்கிறேன் அதைச் செய்வேன் எனக்குத் தெரியும் நான் இன்னும் சற்று நன்றாக இருக்கிறேன், காரணம் நான் நன்மையினால் சரியாக மூடப்பட்டவனாக நிமிர்ந்து நிற்கிறேன். "அவர் அப்படியே, நடந்து சென்றார்.....". "ஐயா, உங்கள் பெயர் என்ன?" என்றார். "நான் பர்திமேயுஸ்" என்று கூறினேன். 160. நல்லது, பர்திமேயுஸ். அவர் இன்னும் அந்த மரத்தின் கீழ் நடந்து கொண்டே இருந்தார். மரத்தின் அருகே வந்த போது அப்படியே நின்று மேலே நோக்கிப் பார்த்தார், "சகேயுஸ், கீழே இறங்கி வா. நான் உன்னுடன் வீட்டிற்கு சென்று இரவு விருந்து உண்ண வேண்டும் என்று கூறினார். பர்திமேயுஸ், அவர் தாவீதின் குமாரனாக இருந்தார் என்று நீ விசுவாசிக்கிறாயா? "அவர் எங்கே இருந்தாலும் அதைத்தான் செய்வார்." "அவர் அதைச் செய்து விட்டு கீழே அங்கே உள்ள தெருவின் வழியாக வெகுதூரம் சென்று விட்டார்" 161. அவன் மேலே குதித்தான், தன்னுடைய மேலாடையை கீழே வீசி எறிந்துவிட்டு குதித்துக் கொண்டிருந்தான். ஓ. இயேசுவே, தாவீதின் குமாரனே என் மேல் இரக்கமாயிரும், என் மேல் இரங்கும், என் மேல் இரக்கமாயிரும். ஓ இயேசுவே தாவீதின் குமாரனே என் மேல் இரக்கமாயிரும். ஆம், என் மேல் இரக்கமாயிரும்." அவனுக்கு அது கடைசி வாய்ப்பு, அங்கே அவர் அருகில் சென்று கொண்டிருந்தார். வெகுதூரம் அவர் சென்று விட்டார். மேலும் அந்த வயதான அர்ப்பமான பார்வையற்ற ஏழை மனிதனின் சத்தத்தை அவர் எப்போது கேட்பார்? அங்கிருந்த ஜனங்கள் "கீழே உட்கார், கீழே உட்கார்" இப்படி கூச்சல் போட்டுக் கொண்டிருக்காதே. கீழே உட்கார்ந்து கொள், அவர் சாலையின் மறுமுனைக்கு சென்று விட்டார்" என்றனர். 162. 'அவர் மேசியாவாக இருக்க வேண்டும், அவர் இருக்கிறார் என்று நான் அறிவேன். இப்பொழுது நான் அவரைப் பிடித்துக் கொள்வதற்கு ஒரே வழி அவர் அங்கே கீழே வருவாரென்றால், அந்த மேசியாவை எனக்குத் தெரியும், அவர் வரும் போது அவர் நமக்கு எல்லாக் காரியங்களையும் அறிவிப்பார், அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று நாம் அறிந்திருக்கிறோம்" இப்படி பர்திமேயு அவர்களிடம் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவன் தன்னுடைய முழங்கால்களில் நின்று "யெகோவா தேவனே, அவர் மேசியாவாக இருப்பார் என்றால் அவர் உம்முடைய குமாரனாக இருப்பார். "நீர் அவரை நிறுத்தும்படியாக நான் ஜெபிக்கிறேன். ஓ என் மேல் இரக்கமாயிரும். ஓ. அவர் என் மேல் இரக்கம் வைப்பாராக." என்று கூறினான். ஆகவே இயேசு நின்று விட்டார். என்ன இது? அவனுடைய சத்தம் அவரை நிறுத்தவில்லை, ஆனால் அவனுடைய விசுவாசம் அவரை நிறுத்தியது. கவனியுங்கள் "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" பார்த்தீர்களா? 163. கவனியுங்கள். உலகத்தின் எல்லாப் பாரங்களையும் சுமந்து கொண்டு சிலுவையில் அறையப்படும்படிக்கு அவர் எருசலேமுக்கு சென்று கொண்டிருந்தார்; அதை அவர் அறிந்திருந்தார். உலகத்தின் எல்லாப் பாரங்களும், பாவங்களும், அல்லது இனிசெய்யப் போகிற ஒவ்வொரு பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது. அவருடைய இருதயத்தை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்; அழுகிய முட்டைகளும், பழங்களும் மற்ற காரியங்களும் அவர்மீது வீசப்பட்டது, "இங்கே மேலே வந்து மரித்துப் போன சிலரை எழுப்பு. நாங்கள் ஒரு அற்புதத்தைக் காணட்டும் மற்றும் நீ மேசியாவனால் இதை-அதை செய்கிறதை நாங்கள் பார்க்கட்டும். எருசலேமின் அல்லது எரிக்கோவின் அந்த ஊழியக்காரர்களின் சங்கம் (Ministerial Assosication) நீ செய்யப் போகிற ஏதோ ஒன்றை நாங்கள் காணட்டும் அதில் ஒன்றுமே இல்லை" என்று நான் கூறுகிறேன். இப்படிப்பட்ட எல்லா சத்தங்களுடனும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர் பாருங்கள். அவருக்கு பிசாசுகளைக் குறித்து கவலை இல்லை அவர் இனிமேலும் அப்படி செய்ய மாட்டார், நீங்கள் பாருங்கள், ஆகவே பிதா அவருக்குக் காண்பிப்பதை மட்டுமே அவர் செய்வார்; 164. ஆனால் அந்த பார்வையற்ற பிச்சைக்காரன் அங்கு வந்து தாவீதின் குமாரனே" என்று சொல்லிக் கொண்டிருந்தான், அவர் அப்படியே நின்று விட்டார். சகோதரனே, 'அவர் நின்று விட்டார்' என்ற தலைப்பில் உங்களிடம் எப்பொழுதாவது நான் பேச விரும்புகிறேன். ஆம் ஐயா அவன் அதை செய்தபோது அவர் அப்படியே நின்று விட்டார். மேலும் அவர் சுற்றிலும் திரும்பி பார்த்தார், அவனுடைய சத்தத்தை நிச்சயமாகவே அவர் கேட்டிருக்க முடியாது. ஆனால் அவனுடைய விசுவாசம் அவரை நிறுத்தியது. அவனுடைய விசுவாசம் அவரை நிறுத்தியது. அவர்கள் அவனை அங்கே கொண்டு வந்தனர். "நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாய்" என்று கூறினார். "ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும்" என்றாள். 165. அவர், "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்று கூறினார். பாருங்கள், அவரை நிறுத்தும்படியான போதுமான விசுவாசத்தை அவன் உடையவனாக இருந்தான். விசுவாசம் அவரை தொட்டது. வேதாகமத்தின் மற்ற வாக்கியங்களோடு அது எப்படி ஒத்துப் போகிறது என்பதை நீங்கள் காணமுடியவில்லையா? நல்லது, அவனுடைய சுகமளித்தலை ஏற்றுக் கொள்ளும்படி போதுமான விசுவாசம் அவனுக்கு இருந்தது. "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, உன் விசுவாசமே அதைச் செய்தது" ஆகவே அவர் தன்னுடைய தலையை திருப்பி எருசலேமை நோக்கி நடந்து கொண்டிருந்தார், ஓ, நான், அவர்எருசலேமை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். 166. அங்கே குருடனான பர்திமேயு நின்று கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது, அவர் மேசியாதான் என்கிற என்னுடைய விசுவாசத்தை குறித்து என்னிடம் கூறினார். விசுவாசம் என்றால் என்ன? அந்த விசுவாசமானது, அவர் மேசியா என்பதை நான் நம்பும்படி செய்ததாகும். அங்கே அந்த மதிலுக்கு இருநூறு அல்லது முந்நூறு கெஜம் தூரத்தில் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த என் சத்தத்தை அவர் எப்படி கேட்க முடிந்துது? அவர்கள் எல்லோரும் கூச்சலிட்டுக் கொண்டு தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். மேலும் ஜனங்கள் அந்த விதத்தில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர், நான் போதுமான விசுவாசத்தை கொண்டிருந்ததால் நிறுத்தினேன். இப்பொழுது....நான் நான் நான் என்னுடைய கரங்களைப் பார்க்க முடிகிறது" என்று சொல்லிக் கொண்டிருந்தான். பிறகு, அவன் தேவனை துதித்துக் கொண்டு, சந்தோஷத்துடன் அவரை பின் தொடர்ந்து சென்றான் என்று வேதாகமம் கூறுகிறது. 167. ஒரு குருட்டு பிச்சைக்காரனுடைய விசுவாசம் சமயப் பணியில்இருக்கும் அப்படிப்பட்ட ஒருவரை நிற்கும்படி செய்தது. இன்றிரவு அந்த விசுவாசத்தைக் கொண்டுள்ள ஒருவரால் மகிமையிலிருந்து அவரை இந்தக் கட்டிடத்திற்குள் கொண்டு வரமுடியும், நிச்சயமாக அவர் அதை செய்வார் அவர் உன்னை சுகப்படுத்த முடியும். அவர் உனக்கு விடுதலையைத் தர முடியும். 168. குருடன் பர்திமேயுஸ்-ஐக் குறித்த ஒரு கதையை நான் படித்தேன். முடிக்கும் முன்பாக, என்னுடைய நேரம் சென்று விட்டது; ஆனால் முடிக்கும் முன்பாக இதை நான் கூற விரும்புகிறேன், பிறகு பீட அழைப்பை செய்யலாம். இப்பொழுது சற்று நேரம் கவனியுங்கள். 169. இந்த கதையை நான் வாசித்தேன். அது ஒருவேளை கற்பனையாக இருக்கலாம், எனக்குத் தெரியாது. ஆனால் நான் குருடன் பர்திமேயுவைக் குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன். அவன் வாலிப பையனாக இருந்த போதே பார்வையற்றவனாக சென்று கொண்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அவன் கல்யாணமானவனாக இருந்தான். மேலும் அவனுக்கு ஒரு மனைவியும், சுருள் முடி கொண்ட ஒரு சிறிய பெண்ணும் இருந்தனர், அவனுடைய வாழ்க்கையில் அவர்களை பார்த்ததே இல்லை. மேலும் ஒரு நாள் இரவு அவன் வியாதிப்பட்டான். அந்தக்கதை இப்படியாக செல்கிறது, அவன் சில காட்டுப்புறாக்களை வைத்திருந்தான். அங்கே வெளியில் வந்து அவைகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து சிறிய குட்டிகரணம் அடித்து நடந்து செல்லுபவர்களின் கவத்தை கவரும் விதமாக விளையாடிக் கொண்டிருக்கும். அந்த சிறிய புறாக்கள், ஒன்றின் மேல் ஒன்று கரணம் அடிப்பதை ஜனங்கள் சிறிது நேரம் நின்று கவனித்துப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பார்கள், பிறகு ஒரு நாணயத்தை அவனுக்கு கொடுப்பார்கள், இப்படித்தான் இன்றும் கூட அதை செய்கிறார்கள். 170. மேலும் அவனுடைய சிறிய மகள் வியாதிப்பட்டாள். அவர்கள் ஒரு மருத்துவரிடம் சென்றனர். அந்த மருத்துவர் "சரி", "அந்தக் குழந்தைக்கு அதிக காய்ச்சல் கண்டிருக்கிறது". மேலும் நான் அந்த குழந்தை உயிர் பிழைத்துக் கொள்வாள் என்று நான் நினைக்கவில்லை, பர்திமேயுஸ், காய்ச்சலை சரிப்படுத்த எங்களிடம் எதுவும் இல்லை, அதனால் நான்-நான் இந்த குழந்தை உயிருடன் வாழப் போகிறது நான் நம்பவில்லை" என்று கூறிவிட்டார். 171. ஆகவே ஒருவேளை பர்திமேயுஸ் அந்த சிறிய செங்கலால் கட்டப்பட்ட சிறிய வீட்டிற்கு வெளியே வந்து ஓரமாக அடியெடுத்து வைத்து, அங்கே நின்று கொண்டு "யெகோவா தேவனே, நீர் என்னுடைய சிறிய மகளை மரித்துப் போகவிடமால் குணப்படுத்துவீர் என்றால் நாளை என்னுடைய இரண்டு காட்டுப்புறாக்களையும் உமக்கு காணிக்கையாக செலுத்துவேன் என்று உமக்கு வாக்குக் கொடுக்கிறேன்" என்று கூறினான். 172. பாருங்கள், நீங்கள் சில காரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டும்; இன்று ஜனங்கள் அவர்கள் ஏதாவது ஒரு சிறிய காரியத்தை செய்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். இல்லை, அது காயப்படுத்துகிறதான ஒரு காரியமாக இருக்கிறது, சில காரியங்கள் நீங்கள் ஆழமாக தோண்டி எடுத்துப் பெற்றுக்கொள்ள வேண்டிய வழியாக இருக்கிறது. அந்த விதத்தில் தான் தேவன் அதைப் பார்க்கிறார். "நான் என்னுடைய இரண்டு காட்டுப்புறாக்களையும் உமக்கு கொடுத்துவிட்டு அவைகள் இல்லாமல் வெறுமனே தொடர்ந்து சென்று கொண்டிருப்பேன்" என்றான். ஆகவே மறுநாள் காலையில் அந்த காய்ச்சல் போய்விட்டது. அவன் சென்று அந்த இரண்டு காட்டுப்புறாக்களையும் காணிக்கையாக செலுத்தினான். 173. சிலகாலம் சென்றபின் அவனுடைய மனைவி உண்மையாகவே நோய்வாய் பட்டாள். ஆகவே அந்த வைத்தியர் வந்து "அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்" என்று நினைக்கிறேன், அவள் சரியாகி விடுவாள் என்று நான் நம்பவில்லை பர்திமேயுஸ்" என்றார். என்னுடைய மருந்து அவளுக்கு உதவாது. அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்" என்று கூறினார். ஆகவே அவன் அந்த வீட்டிற்கு வெளியே மீண்டும் சென்றான். 174. இன்றைய நாட்களில் மக்களை வழிநடத்திக் கூட்டிச் செல்லும் நாய்களை குறித்து உங்களுக்கு தெரியுமா? நீங்கள் அவைகளை எப்படி அழைக்கிறீர்கள் என்பதை நான் மறந்து விட்டேன். காண்கிற 'கண்-நாய்' என்று அழைப்பார்கள், அவைகள் அவர்களை வழிநடத்திச் செல்லும். ஆனால் நாய்களுக்குப் பதிலாக அவர்கள் அந்த நாட்களில் ஆட்டுக்குட்டிகளை வைத்திருந்தனர். அது அவர்களை வழிநடத்தி கூட்டிச் செல்லும் என்று அவர்கள் கூறினார்கள். பர்திமேயுஸ் ஒரு காண்கிற ஆட்டுக்குட்டியை வைத்திருந்தான். எனவே அவன் "தேவனே, நீர் என்னுடைய மனைவியை குணமாக்கும், என்னுடைய விலைமதிப்பற்ற என்னுடைய மனைவியை மரித்துப் போக விடாதேயும் அப்படி செய்வீர் என்றால், நாளை நான் உமக்கு என்னுடைய ஆட்டுக்குட்டியை தருகிறேன்" என்று கூறினான். எனவே மறுநாள் அவனுடைய மனைவி நலமுடன் இருந்தாள். ஆகவே அவன் அந்த அவன் அந்த ஆட்டுக்குட்டியை காணிக்கையாக கொடுக்கச் சென்று கொண்டிருந்தான். எனவே அந்த ஆசாரியன் "குருட்டு பர்திமேயுஸ் நீ எங்கே போகிறாய்? என்றார். 175. "யெகோவாவுக்கு என்னுடைய ஆட்டுக்குட்டியை காணிக்கையாக பலி செலுத்துவதற்கு போய்க் கொண்டிருக்கிறேன்" என்று கூறினான். நான் என்னுடைய ஆட்டை கொடுப்பேன் என்று அவரிடம் உறுதி அளித்து விட்டேன், ஏனென்றால் அவர் என்னுடைய மனைவியை குணப்படுத்தினார் என்றான். 176. "ஓ, பர்திமேயுஸ், நீ அந்த ஆட்டுக் குட்டியை பலி செலுத்த வேண்டாம்" என்றார். மேலும் "நான் உனக்கு கொஞ்சம் பணம் தருகிறேன், நீ சென்று வேறு ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி பிறகு அந்த ஆட்டுக்குட்டியை காணிக்கையாக செலுத்து, வெளியே சென்று விற்கிறவர்களிடத்தில் வாங்கிக் கொள்" என்று கூறினார். ஓ, ஆசாரியரே, நீங்கள் கூறுவது நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் நான் தேவனிடத்தில் ஒரு ஆட்டுக்குட்டியை கொடுக்கிறேன் என்று ஒரு போதும் உறுதி அளிக்கவில்லை; நான் 'இந்த ஆட்டுக்குட்டியை' அவருக்கு தருவதாக உறுதி அளித்தேன் அவ்வளவுதான்."நான் இந்த ஆட்டுக்குட்டி என்றுதான் உறுதி அளித்தேன்." 177. தேவன் அவருடைய பிரசன்னத்தை எனக்கு காண்பித்தால் மட்டுமே நான் அவரை என் முழு இருதயத்துடனும் விசுவாசிப்பேன் என்று உறுதி அளித்தேன். செல்வி ஜோன்ஸ் (Miss. Jones] அவரை விசுவாசிப்பதால் அல்ல, ஆனால் நான் அவரை என் முழு இருதயத்துடனும் நம்புவதால்" அவ்வளவுதான் பார்த்தீர்களா? ஒரு ஆட்டுக் குட்டியை அல்ல, ஆனால் இந்த ஆட்டுக்குட்டி" என்று தான் அவருக்கு உறுதி அளித்தேன். "பர்திமேயுஸ் நீ அந்த ஆட்டுக்குட்டியை கொடுக்க வேண்டாம். அந்த ஆட்டுக்குட்டி உன்னுடைய கண்களாக இருக்கிறது." என்றார் அவர். "யெகோவா- தேவனிடம் அளித்த வாக்குறுதியை நான் காத்துக் கொண்டால், தேவன் குருட்டு பர்திமேயுஸ்-ன் கண்களுக்கு பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியை அருளுவார் என்றான். இந்த குளிர்ச்சியான வசந்த காலத்தின் காலை வேளையில் குருட்டு பர்திமேயுஸ்-ன் கண்களுக்கு பதிலாக தேவன் ஒரு ஆட்டுக்குட்டியை அருளினார். "ஓ, தாவீதின் குமாரனே, என் மேல் இரக்கமாயிரும்". 178. அதே ஆட்டுக்குட்டி ஒவ்வொரு பாவிக்கும், ஒவ்வொரு வியாதிக்கும் அருளப்பட்டிருக்கிறது, ஒவ்வொரு வியாதிக்கும் அருளப்பட்டுள்ளது. தேவன் நம்முடைய ஆவிக்குரிய கண்களுக்கும் ஒரு ஆட்டுக்குட்டியை வழங்கியிருக்கிறார், நம்முடைய சரீரப்பிரகாரமான கண்களுக்கும், சரீர பிரகாரமான ஆரோக்கியத்திற்கும், ஆவிக்குரிய ஆரோக்கி யத்திற்கும் ஒரு ஆட்டுக்குட்டியை அருளியிருக்கிறார். அவர் யெகோவாயீரே-வாக இருக்கிறார். தேவன் நம்முடைய குருட்டு தனத்திற்காக ஏற்கனவே ஒரு ஆட்டுக்குட்டியை அருளியிருக்கிறார்; நாம் உலகத்தை பார்த்து கொண்டிருக்கிறவர்களாக அவரை நோக்கி பார்ப்பதற்கு இனிமேல் ஒன்றும் இல்லை என்பதைப் போல நாம் உலகத்தைப் பார்த்து கொண்டிருக்கிறோம்; வியாதியுடையவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம், அவர் நேற்றும் என்றும் இன்றும் மாறாத தேவனாக இருக்கிறார் என்பதை அறிந்தவர்களாக நாம் இருக்க வேண்டும். ஜெபத்திற்காக நாம் சிறிது நேரம் தலைகளைத் தாழ்த்துவோம். 179. இங்கே யாராவது ஒரு பாவி இருப்பீர்கள் என்றால், நீஙக்ள் இப்படிக் கூற விரும்புகிறீர்களா? "சகோதரர் பிரன்ஹாம் அவர்களே, என்னை நினைவு கூறுங்கள், ஓ இயேசுவே, தாவீதின் குமாரனே என் மேல் இரக்கமாயிரும்". நான் என்னுடைய ஆவிக்குரிய பார்வையை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். நீர் உண்மையான தேவனுடைய குமாரானாக இருக்கிறீர் என்பதைக் காண விரும்புகிறேன். "தாவீதின் குமாரனே என் மேல் இரக்கமாயிரும்." உங்களுடைய கரங்களை அவரிடத்தில் உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மேல் மாடத்தில் இருப்பவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். "நான் உம்மைக் காண விரும்புகிறேன், நான்- நான்.... ஓ தேவனுடைய ஆட்டுக்குட்டியே ஓ, தாவீதின் குமாரனே"தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மேல் மாடத்தில் இருக்கும் என் சகோதரனே மீண்டும் அந்த வழியில் மேலே நோக்கிப் பாருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 180. இங்குள்ள வாலிப வயதில் உள்ளவர்கள் சிலருக்கு பர்திமேயுஸ்-ஐ குறித்த சிறிய கதை தெரியுமா? ஒரு வேளை உங்கள் தாய் நீங்கள் பிறந்த போது உங்களை தேவனுக்கு அர்ப்பணித்திருக்கலாம். நல்லது, கடைசியாக பர்திமேயுஸ் அவனுடைய தாய் அவனை அர்ப்பணித்த போது அந்த ஊழியத்தை அவன் நிறைவேற்றினான். வாலிபர்களே, இன்றிரவு உங்களுடைய கணகள் திறக்கப்படட்டும், வாலிபர்களே நீங்கள் தேவனுடைய ஆட்டுக் குட்டியைக் காண்பீர்கள். "தாவீதின் குமாரனே என்மேல் இரக்கம் வையும்." 181. இன்னும் யாராவது, உங்கள் கரத்தை உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா?"தாவீதின் குமாரனே என் மீது இரக்கம் வையும்" தேவன் இந்த சிறு வாலிப பெண்ணை ஆசீர்வதிப்பாராக. இந்த வாலிப ஸ்தீரியை ஆசீர்வதிப்பாராக இங்கே அமர்ந்து கொண்டிருக்கின்ற பெண்மணியை ஆசீர்வதிப்பாராக. மேலே இருக்கிற அந்த சிறிய பையனை ஆசீர்விதிப்பாராக. "தாவீதின் குமாரனே, என் மீது இரக்கம் வையும்". 182. அவனை இங்கே கொண்டு வாருங்கள் என்று பர்திமேயுஸ்-க்கு அவர் கூறியதைப் போல, உங்களுடைய விசுவாசம் அவரைத் தொடமுடியும். அவர் வேறு யாராகவும் இல்லை... நீங்கள் மட்டும் பர்திமேயுஸ் விசுவாசத்துடன் செய்ததைப் போன்ற விசுவாசத்தைக் கொண்டிருப்பீர்களென்றால், அது அவரை நிறுத்தி பரலோகத்தை விட்டு இன்றிரவு இந்த தேவசபைக்குள்ளாக (Assembly of God Church) வரச்செய்து இரக்கத்தை நீங்கள் காணும்படி செய்யும்."தாவீதின் குமாரனே, என் மீது இரக்கம் வையும்." வேறு யாராவது கைகளை உயர்த்தாமல் இந்த கட்டிடத்திற்குள் இருக்கிறீர்களா? அங்கே பத்துஅல்லது பன்னிரெண்டு கரங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறது. அவர்கள் மீதும் தேவனுடைய இரக்கம் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். "தாவீதின் குமாரனே" 183. அங்கே சுமார் பத்து வயது சிறுமி உட்கார்ந்து கொண்டிருந்ததை கடந்து இரவு நான் கவனித்தேன். அவள்தன்னுடைய கரத்தை கொஞ்ச நேரம் உயர்த்தினாள். அவளுக்கு இயேசு தேவையாக இருந்தது. என்னுடைய சிறிய மகள் பெக்கி வயது அல்லது வீட்டில் இருக்கும் என்னுடைய சிறிய ரெபேக்கா வயது இருக்கும் என்று நான் யூகிக்கிறேன். அவள் கடந்த இரவு மேலே வருவதைக் கவனித்தேன், அப்பொழுது அவள் அந்தப் பீடத்தின் மீது நின்று கொண்டிருந்தாள். வேறு யாரும் அவளுடன் அங்கே இல்லை சகோதர்களில் யாரோ ஒருவர் அவள் எல்லா சபைகளுக்கும் ஓடிக் கொண்டிருக்கிறாள், அன்னிய பாஷை பேசுகிறாள், அன்னிய பாஷையில் பாடுகிறாள், இப்படி ஒவ்வொரு காரியமும் செய்து கொண்டிருக்கிறாள் என்று என்னிடம் கூறினார். பழங்கதைகள் மற்றும் உலகத்தின் அசுத்தங்கள், எல்லாவிதமான மோசமான காரியங்களைக் கொண்ட பத்திரிக்கைகள், வார இதழ்கள், மூலமாக அவளுடைய சிறிய இருதயம் இழுக்கப்படுவதற்கு முன்பு மென்மையானதும், இளமையானதும் கொண்ட அவளுடைய இருதயத்தை கர்த்தர் எவ்வளவாக அந்த சிறிய குழந்தையை ஆசீர்வதித்திருக்கிறார். சிறிய குழந்தைகள் வருவதைக் காண விரும்புகிறேன். 184. தேவன்; உங்கள் வாழ்க்கையை தேவனுக்கு பிரதிஷ்டை செய்யுங்கள். தேனே அவர், உனக்கும் கூட சில காரியங்களைச் செய்வார். அவர் நிச்சயமாகச் செய்வார். நாம் ஜெபிப்பதற்கு முன்பு வேறு யாராவது இருக்கிறீர்களா? "தேவனே, தாவீதின் குமாரனே என்மீது இரக்கம் வையும்". 185. எங்கள் பரலோகப் பிதாவே, நான் அவர்களை உம்மிடம் தருகிறேன். அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தினார்கள். இயேசு கிறிஸ்துவில் வைத்திருக்கும் விசுவாசத்தின் மூலம் அவர்கள் உம்முடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். பிதாவே நீர் இங்கே இருந்து கொண்டிருக்கிறீர் என்பதை அவர்கள் அறிவார்கள் நீர் தேவனுடைய குமாரானாக இருக்கிறீர் என்பதை அறிந்திருக்கின்றனர். அவர்கள் அதை விசுவாசிக்கும்படியாக நீர் அவர்களுடைய இருதயங்களில் பேசினீர், உம்மை இரட்சகராக ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இருக்கின்றனர். ஏனென்றால்,"ஒரு மனிதனும் என்னிடத்தில் வர முடியாது" என்று கூறியிருக்கிறீர். முதலாவதாக "என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால்" என்று கர்த்தராகிய இயேசு கூறியுள்ளார். ஆகவே "பிதா எனக்கு தந்தருளின எல்லாரும் வருவார்கள்". இப்பொழுதும், தேவரீர் இன்றிரவில் கர்த்தராகிய இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழாக அவாகள் வருகிறார்கள். ஆகவே நான் அவர்களுக்கு ஒரு ஆசாரியனாக, அல்லது அவர்களுக்கு மேய்ப்பராக அல்லது ஊழியக்காரனாக இருந்து பிதாவே உம்மிடத்தில் ஜெபிக்கிறேன் விசுவாசமுள்ள என்னுடைய ஜெபமானது உம்மிடம் சென்று கொண்டிருக்கிறது. 186. மேலும் அவர்கள் தாங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வார்களாக, நான் உம்மையும், உம்முடைய வார்த்தையையும் மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறேன். "என் வசனத்தைக் கேட்டு" என்று நீர் கூறியிருக்கிறீர் கடந்த நான்கு மணி நேரம் தொடர்ந்து அல்லது அதிகமாக நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன். "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு அது நிகழ்காலமாக இருக்கிறது அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." பிதாவே நீர் அப்படி கூறியிருக்கிறீர். அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி அதை விசுவாசிப்பதாக கூறியிருக்கின்றனர். மேலும் அதை விசுவாசித்து, அதை பெற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆகவே. இப்பொழுது நீர் அவர்களுக்கு நித்திய ஜீவனை கொடுத்திருக்கிறீர் என்றும், மேலும் கடைசி நாளில் நீர் அவர்களை மீண்டும் எழுப்புவீர் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். நீர் அதைச் செய்வதாக உறுதி கொடுத்திருக்கிறீர் நீர் அதைச் செய்வீர். நீர் உம்முடைய வாக்குத்தத்தை காத்துக் கொள்கிற தேவனாக இருக்கிறீர். உம்முடைய வாக்குத்தத்தங்கள் ஆம் என்றும் இல்லை என்றும் இருக்கிறது. ஆகவே நீர் உம்முடைய வாக்குத்தத்தங்களை திரும்பவுமாக எடுத்துக் கொள்ள முடியாது. நீர் அதைச் செய்வதாக நீர் உறுதி அறித்திருக்கிறீர். 187. இப்பொழுது, பிதாவே, அந்த ஆவியானது அவர்களுக்கு இருப்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படி அவர்களுக்கு தைரியத்தை அளிப்பீராக. "பிள்ளையே நீ தவறாக இருக்கிறாய். நீ இன்றிரவு என்னை ஏற்றுக் கொள். நான் நின்று என்னுடைய திட்டமிடப்பட்ட பெரிய அவசர வேலைகளை விட்டுவிட்டு திரும்பி"உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்ப்பட்டன. போ இனி பாவம் செய்யாதே" என்று கூறுவேன். அநேக சமயங்களில் நீர் கூறினதைப் போல, இன்றிரவிலும் அதை நீர் கூறுவீராக, ஏனெனில் அவர்கள் தங்கள் முடிவை எடுத்து விட்டனர். 188. இப்பொழுது பிதாவே தேவனே, நீர் அவர்களில் ஒருவரைக்கூட தவற விட்டுவிட வேணடாம் என்று ஜெபிக்கிறேன். நான் கூறினதற்காக தங்கள் கரங்களை உயர்த்தி இருக்கின்றனர் என்று நான் நம்பவில்லை. அவர்கள் உத்தமமாக அதைச் செய்தனர் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர்கள் உண்மையாகவே அதைப் புரிந்து கொண்டனர். ஆகவே இப்பொழுது அவர்களை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன், மேலும் அவர்களுடைய பாவங்களை நீர் மன்னிக்கும்படியாக நான் உம்மிடத்தில் கேட்கிறேன். இங்கேஇருக்கின்ற ஒவ்வொரு பாவியினுடைய பாவங்களையும் நீர் மன்னிக்க வேண்டும் என்று நான் என்னுடைய முழு இருதயத்துடனும் அவர்களுக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறேன். 189. பிதாவே, இந்த சிறு குழுவை, நாங்கள் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொள்ளப்படும் போது சந்திக்க விரும்புகிறேன், ஒவ்வொரு தேசங்களிலும் இருந்து அவர்கள் ஒன்றாக ஓடிவந்து கொண்டிருப்பதை காண விரும்புகிறேன். "உயிருடன் இருக்கும் நாம் நித்திரை அடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை" எக்காளம் தொனிக்கும், முதலாவதாக மரித்தோர் எழுந்திருப்பார்கள் பிறகு நாம் அவர்களை சந்திப்போம், அதன்பின்பு அவர்களுடன் ஒன்றாக நாம் எடுத்துக் கொள்ளப்பட்டு கர்த்தரை ஆகாயத்தில் சந்தித்து இவ்விதமாய் என்றென்றும் அவருடன் இருப்போம். கர்த்தாவே, நீர் அப்படி தெசலோனிக்கேயர் புத்தகத்தில் 5-ம் அதிகாரத்தில் கூறியிருக்கிறீர், அது உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன். ஆகவே நாம் அவர்களைச் சந்திக்கும் முன்பு, நாங்கள் உம்மைச் சந்திப்போம். ஆகவே இதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம். 190. மேலும் நாங்கள் அதை நம்புகிறோம் நான் என் முமு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தினார்கள். நான் ஜெபித்து கேட்டுக் கொண்டு அந்த ஆவியின் வழிநடத்துதலை பின்பற்றினதால், எனக்குத் தெரிந்த மட்டில் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன. அதற்காக அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். கர்த்தாவே நீர் அவர்களிடம் இன்னும் ஒரு காரியத்தை செய்யச் சொல்லியிருக்கிறீர், "மனிதர்களுக்கு முன்பாக என்னை அறிக்கை செய்கிறவன் எவனோ அவனை நான் என் பிதாவிற்கு முன்பாகவும், அந்த பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் அறிக்கை செய்வேன்" 191. இளைய தலைமுறையினருக்கு இந்த இரவானது மறக்க முடியாத ஒரு இரவாக இருக்கட்டும், சிறிய பர்திமேயுஸ் அவனுடைய தாயார் கூறின கதையை கவனித்துக் கேட்டான். தேவன் அவனை ஒருநாள் பயன்படுத்தினார் என்பதையும் நினைவில் கொண்டிருப்பார்கள். ஆகவே இந்த மணிவேளையில் நீர் அவர்களைப் பயன்படுத்தி அவர்களுடன் பேசி, தேவனுடைய இராஜ்யத்திற்குள் அழைத்துச் செல்லும் வயதானவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளார்கள். ஒரு காலத்தில் பர்திமேயுஸ் குருடனாக இருந்தான் பின்னாளில் அவன் பார்வையைப் பெற்றுக் கொண்டதைப் போல, அவனுடைய ஆவிக்குரிய பார்வையையும் பெற்றுக் கொண்டான். இப்பொழுதும், பிதாவே, இன்றிரவு அவர்களை உம்முடைய குழந்தைகளாக மாற்றுவீராக, மேலும் அவர்கள் சில நல்ல சபையை சேர்ந்து ஞானஸ்நானத்தை கிறிஸ்தவ ஞானஸ்நானத்தின் மூலமாக பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளட்டும். கர்த்தாவே அதை அருள்வீராக. 192. இப்பொழுது உங்கள் தலைகள் வணங்கியிருக்கிறது, நான் உங்களைப் பார்த்து கேட்கப் போவது, நீங்கள் மிகவும் உத்தமமாக, என்னை தேவனுடைய தீர்க்கதரிசி அல்லது அவருடைய ஊழியக்காரன் என்று நம்புகிறீர்கள் என்றால், மாறாக நான் அவருடைய ஊழியக்காரனாக இருக்கிறேன் என்று உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிப்பீர்களானால், நான் மேற்கோள் காட்டியவைகள் சத்தியம் என்று விசுவாசியுங்கள், நீங்கள் தேவனுடைய வார்த்தையை கேட்டீர்கள்; "என்னுடைய வார்த்தையைக் கேட்டு....."பரிசுத்த யோவான் 5:24." "என்னை அனுப்பினவரை..." நான் வார்த்தையை பிரசங்கித்தேன்; நீங்கள் தேவன் மேல் விசுவாசம் வைத்தீர்கள், நீங்கள் ஒரு பாவி என்றும், நீங்கள் பாவியாக இருக்க முடியாது என்றும் உங்கள் கரங்களை மேலே உயர்த்தினீர்கள்" என்னுடைய பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வர முடியாது" என்று தேவன் கூறியுள்ளார். அப்படியென்றால் எதற்காக உங்கள் கரங்கள் மேலே உயாத்தப்பட்டது? அது தேவன். நீங்கள் உங்கள் தீர்மானத்தை செய்தீர்கள். எல்லாம் சரியே, இப்பொழுது அவர் என்ன கூறியிருக்கிறார்? "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" 193. உண்மையிலேயே நீங்கள் அதைஅப்படி நினைத்திருந் தீர்களானால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்கிறீர்கள். சிறுபையன்களாகிய நீங்கள் மற்றும் சிறுமிகள், வயதானவர் நடுத்தர வயதினர் மற்றும் வாலிப வயதினர் நீங்கள் எல்லோரும் அதை விசுவாசிக்கும் போது கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்கள். 194. இப்பொழுது நீங்கள் இன்னும் ஒரு காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. நீங்கள் உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசித்தால், சற்று நீங்கள் எழுந்து காலூன்றி நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் போகிறேன்; மேலும் இதைக் கூறும் போது எழுந்து நில்லுங்கள், நீங்கள் எந்த ஒரு வார்த்தையையும் பேச வேணடாம், ஆனால் அந்த ஜனங்களுக்கு சாட்சியாக மட்டும் நீங்கள் இருப்பதற்காக எழுந்து நில்லுங்கள், "நான் இப்பொழுது என்னுடைய பாவங்கள் அனைத்தையும் அறிக்கையிடுகிறேன், இயேசுவே என்னுடைய இரட்சகர் என்று ஏற்றுக் கொள்கிறேன்." இப்பொழுது அந்த வழியில் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள், எழுந்து காலூன்றி நில்லுங்கள். 195. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த சிறிய பெண்ணைக் குறித்து என்ன? அவரை உன்னுடைய இரட்சகராக இருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறாயா? அது சரி. தேனே எழுந்து நில், சிறிய பையன் இங்கே இருக்கிறாள்...சரி, நீ பின்னால் மேல் மாடத்தில், இருந்து கொண்டிருக்கிறாய், அந்த சிறிய பையனும் சிறிய பெண்ணும் மேல் மாடத்தில் இருக்கின்றனர். அருமை. வேறு யாரேனும் இயேசுவை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் எழுந்து நில்லுங்கள். "மனிதருக்கு முன்பாக என்னைக் குறித்து சாட்சி கொடுப்பவன் எவனோ அவனைக் குறித்து என் பிதாவுக்கு முன்பாகவும் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் நான் சாட்சி பகருவேன்." 196. இப்பொழுது அங்கே உங்களில் சில வயதான ஜனங்கள் உங்கள் கரத்தை உயர்த்தினீர்கள். இங்கே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, இன்றிரவில் பர்திமேயுஸ் குறித்து என்னுடைய சிறிய கதையை கேட்ட நான்கு குழந்தைகள் எழுந்து நின்று கொண்டிருப்பதைக் காண்கிறேன். இப்பொழுது, உங்களில் வயதான சிலர் உயர்த்தின கரங்களை குறித்து என்ன? உங்களுக்குத் தெரியுமா...? அவர்களுடைய சிறிய மென்மையான இருதயங்கள் எப்படியாக இருக்கிறது? அவர்கள் விசுவசித்ததால் மட்டுமே எழுந்து நின்று அவரை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் மன்னிக்கப்பட்டார்கள் என்று விசுவசிக்கிறீர்களா? நிச்சயமாகவே அவர்கள் மன்னிக்கப்பட்டனர். நிச்சயமாகவே அவர்கள் அப்படித்தான் இருக்கின்றனர். 197. இப்பொழுது உங்களில் சிலர் அவரை ஏற்றுக் கொண்டு "நான் பகிரங்கமாக சாட்சி கூறுவேன்" என்று கூற விரும்புகிறீர்கள். "விசுவாசித்தவர்கள் அனைவரும் சபையில் சேர்க்கப்பட்டனர்" என்று வேதாகமம் கூறுகிறது. இன்றிரவு உங்கள் பாவங்களை தேவன் மன்னித்தார் என்று விசுவாசிக்கிறீர்களா? இந்தக் குழந்தைகளுடன் காலூன்றி எழுந்து நில்லுங்கள். இப்பொழுது எத்தனை பேர் சரியாக அதைச் செய்வார்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அந்த சக்கர நாற்காலியில் உள்ள பையன், இங்கே உள்ள இந்தப் பையன், இங்கே இருக்கிற அந்தப் பெண், நல்லது; அருமை யாரோ ஒருவர் "நான் இப்பொழுதே அவரை ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறுகிறார். 198. இப்பொழுது, உணர்ச்சிவசப்படாதீர்கள்....அப்படிசெய்யாதீர்கள்.... உணர்ச்சி வசப்படுகிறதை நான் கவனிப்பதில்லை. அவர் எனக்கு வாக்குத்தத்தம் செய்ததை மட்டுமே கவனித்துக் கொண்டிருப்பேன்; "என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படமால் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட் பட்டிருக்கிறான்." அவைகளின் அடிப்படையின் பேரில் தான் உங்கள் பாவங்கள் அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு பாவி என்பதை உணர்ந்து எழுந்து நின்று அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள். எழும்புங்கள். 199. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, இன்னும் ஒருவர் அங்கு இல்லையா? நீங்கள் உட்கார்ந்து கொள்ளும் முன்பு இன்னும் ஒருமுறை உங்களுக்காக ஜெபிக்க முடியும். அங்கே இன்னும் ஒரு முறை உங்களுக்காக ஜெபிக்க முடியும். வெளியே வராண்டாவில் யாராவது நின்று கொண்டிருக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே. அது அற்புதமாக இருக்கிறது எல்லாம் சரி, வேறு யாராவது அங்கே இருக்கிறீர்களா? அங்கே ஏழு எண்ணிக்கை இருக்கிறது. அது ஒரு பரிபூரணமாக எண்ணாக இருக்கிறது. இப்பொழுது நாம் நமது தலைகளை தாழ்த்துவோம் அப்படியே நின்று கொண்டிருங்கள். 200. எங்கள் பரலோகப் பிதாவே, உம்முடைய வார்த்தை ஒரு போதும் தவறிப் போகமுடியாது; அது நித்தியமாக இருக்கிறது. "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரைவிசுவாசிக்கிறவனுக்கு அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட் பட்டிருக்கிறான்." ஏனென்றால் அவர்களுடைய பாவங்களை அவர் எடுத்துக் கொண்டு அவர்களுக்குப் பதிலாக அவர் மரித்தார் என்று விசுவாசிக்கின்றனர். அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கள்நீதிமான்களாக்கப்பட்டிருக்கின்றனர். இதோ அவர்கள் இருக்கிறார்கள், பிதாவே, அவர்கள் இந்தச் செய்தியின் வெற்றிச் சின்னங்களாக இருக்கிறார்கள். இங்கே அவர்கள் இருக்கின்றனர். அவர்கள் உம்முடைய பிள்ளைகளாக இருக்கின்றனர். 201. இப்பொழுது, நான் இந்த பூமியில் ஒருபோதும் அவர்களுடைய கரங்களை பிடித்து குலுக்க முடியாமல் போகலாம். ஆனால் பிதாவாகிய தேவனே, உம்முடைய வார்த்தையின் அடிப்படையில் நான் விசுவாசித்து நீரே தேவன் என்பதையும் உம்மால் பொய் கூற முடியாது என்றும் உம்முடைய வார்த்தை நித்தியமானது என்றும் ஏற்றுக் கொள்கிறேன். சுவிசேஷத்திற்காக நான் அவர்களை உரிமை கோருகிறேன். தேவனுக்காக, இயேசு கிறிஸ்து மூலமாக அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் மன்னித்ததற்காக நான் அவர்களை உரிமை கோருகிறேன். 202. எனவே, பிதாவே, நீர் இந்தப் பிள்ளைகளை நித்திய ஜீவனுக்குள்ளாக வழிநடத்தும்படியாக ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நான்த்திற்காகவும் அவர்களை வழிநடத்தும். அவர்களைக் கழுவும், பிதாவே இயேசு கிறிஸ்துவினுடைய சரீரத்திற்குள்ளாக இருக்கும் ஆவி மற்றும் வல்லமையையும் நீர் தேவனுடைய குமாரனாக இருக்கிறீா என்றும் அவர்களுடைய சொந்தக் கண்களால் காணட்டும். அவர்கள் இரட்சிக்கப்பட்டுள்ளனர் என்ற உமது வார்த்தையின் அடிப்படையில் விசுவாசத்தின் மூலம் அதை ஏற்றுக் கொண்டுவிட்டனர். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் அவர்களுக்காக ஜெபித்து அவர்களை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன். 203. இப்பொழுது, ஜனங்கள் நின்று கொண்டிருக்கிறதைப் பார்க்கிறீர்கள், உங்கள் தலைகளை உயர்த்துங்கள், நின்று கொண்டிருப்பவர்கள், அமர்ந்திருப்பவர்களுடன் கைகளை குலுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கே மேலே பால்கனியில் இருக்கிறவர்கள் இங்கும், அங்கும், இருப்பவாகள், கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அருகில் அமர்ந்திருப்பவர்களுடன் கைகளை குலுக்கி "தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்று சொல்லுங்கள். இங்கே உள்ள இந்த சிறிய பையனுடைய கரத்தை குலுக்குங்கள். அங்கே உள்ள அவனுடைய சிறிய இதயத்தை தேவன் ஆசீர்வதிப்பாராக. இங்கே சில தாய்மார்கள் அமர்ந்திக்கிறார்கள் அது சரி. 204. உடைந்து போன பாதத்துடன் அங்கே இருக்கின்ற சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக கவலைப்படாதீர்கள், நீங்கள் சரியாகி விடுவீர்கள், அது எனக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே தெரிந்து விட்டது. ஆகவே அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் சரியாகி விடுவீர்கள். அங்கே மேல் மாடத்தில் இருக்கிற உங்களையெல்லாம் நான் பார்க்கிறேன், எல்லாம் சரி. அவர் அற்புதமானவராக இல்லையா? "இயேசுவே, தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்" 205. "சகோதரன் பிரன்காம் அவர்களே, அது சத்தியம் என்று விசுவாசிக்கிறீர்களா? என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஏன், நிச்சயமாக, அது சத்தியமாக இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நான் விசுவாசிக்காத சில காரியங்களை இங்கு நின்று கொண்டு பிரசங்கிக்க மாட்டேன். நான் விசுவாசிக்கின்ற சில காரியங்களைப் பிரசங்கிக்கின்ற போதே எப்போதும் தொல்லைக்குள் மாட்டிக் கொள்கிறேன். அதனுடைய முடிவுகள் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் நான் அதை விசுவாசிக்கிறேன், ஏனென்றால் தேவன் அப்படி கூறியிருக்கிறார். அது அதை எனக்குத் தீர்த்து வைக்கிறது. குருடனாகிய பர்திமேயுஸ் சாலையில் சென்று கொண்டிருந்த அவரை நிறுத்தி வைத்ததைப் போல இந்த ஜனங்கள், அந்த சிறிய பெண், சிறிய பையன்கள். மற்றும் இப்படிப்பட்ட ஜனங்கள் அவரை மகிமையில் இருந்து அழைத்து வரமுடியும், நான் அதை அப்படியே விசுவசிக்கிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 206. எத்தனை பேர் இங்கு சுகவீனமாக இருக்கிறீர்கள்? வியாதியாக உள்ளவர்கள், தேவையுள்ளவர்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அவர் அதே தேவனாக இருக்கிறார் என்பதை எத்தனை பேர் விசுவசிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. அது சரியே. நான்...நான்... பிறகு ஏதோ ஒன்று என்னை தடுத்தது. அவர் இங்கே இருந்து கொண்டிருக்கிறார். நீங்கள் இந்த படத்தில் காண்கிற கர்த்தருடைய தூதனானவர், தேவன் என்னுடைய நியாயாதிபதியாக இருக்கிறார், அவர் இங்கே நிச்சயமாக இருந்தார் என்று நியாயத்தீர்ப்பின் நாளில் நீங்கள் காண்பீர்கள். அது சரிதான். கர்த்தருடைய தூதனானவர் இங்கே இருந்து கொண்டிருக்கிறார். 207. எங்கோ யாரோ சிலர் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடத்தில் விசுவாசம் இருக்கிறது, அவர்களிடத்தில் நகர்ந்து நம்பிக்கை இருக்கிறது. ஏதோ சில காரியங்களுடன் செல்கிறது. யாரோ எங்கேயோ ஏதோ செய்திருக்கின்றனர், அல்லது ஏதோ காரியம் நிகழ்ந்திருக்கிறது. மேலும் சுவிசேஷ ஊழியமாக இதை நான் வைத்துக் கொண்டிருக்க முயற்சிக்கிறேன். அவர் அப்படி வந்திருக்க மாட்டார். 208. நீங்கள் ஏதாவது ஜெப அட்டை வைத்திருக்கிறீர்களா? உங்களிடம் ஜெப அட்டை இல்லையா? நல்லது, அவைகள் இனி உங்களுக்கு தேவை இல்லை. அவைகள் உங்களுக்கு தேவை இல்லை. உங்களுக்கு விசுவாசமும் நம்பிக்கையும் இருக்கிறது. இங்கே மனம் மாறிய வாலிபர்களிடம், அவர் இங்கே இருக்கிறார் என்று நான் கூறினால்... ஓ நண்பர்களே, அது எப்படிப்பட்ட உணர்ச்சியாக இருக்கும் என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாது, அவர் - அவர் உங்களைப் பிடித்துக் கொள்ளும் போது அது என்னவாக இருக்கிறது என்பதை உணர்வீர்கள் பிறகு அதைப்பற்றி நீங்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஓ, நான் கொஞ்சம் எவ்வளவாக நேர்மறையாக இருக்க முடியுமோ அப்படியே நான் இருக்க முடியும். இப்பொழுது நீங்கள் விசுவாசத்துடன் இருங்கள். விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். 209. சாராள் கூடாரத்தில் அமர்ந்து கொண்டு, தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, நகைத்துக் கொண்டிருந்தாள், எனவே அந்த கர்த்தருடைய தூதனானவர் திரும்பி, "ஏன் சாராள் நகைத்தாள் என்று கூறினார் அது அப்படி இருக்க முடியுமா? என்று தனக்குத்தானே கூறிக்கொண்டாள் அது சரியா? அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்ட அந்த ஸ்தீரியைப் பற்றி அவர் எவ்வளவாக நோக்கிப் பார்த்திருப்பார்? அவர் அதே பிரதான ஆசாரியராக இன்றிரவு இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா? 210. இப்பொழுது, புதிதாக மனம் மாறியவர்களே, அன்பான சகோதரியே, மேலும் அன்பான வாலிப சகோதரியே உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோதரியே, மேலும் அந்த சிறிய பையன், அந்த சிறிய பையன், அங்கே மேலே உட்கார்ந்திருக்கும் சிறுமி, நீங்கள் யாரைத் தொட்டீர்கள் என்று நான் உங்களுக்கு நிரூபிக்க விரும்புகிறேன், அது, அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அதே இயேசு கிறிஸ்துவாக இருக்கிறார் என்பதை நான் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். ஓ, நான். ஓ நான் எல்லா நேரங்களிலும் இந்த வழியிலேயே உணர முடியும் என்று விரும்புகிறேன் சரி. தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள். எல்லாருக்காகவும் ஜெபம் செய்யுங்கள். ஜெபத்தில் மட்டுமே இருந்து கொண்டே இருங்கள். 211. நாம் சோதோம்-ன் நாட்களில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை உங்களுக்கு காண்பிக்கவும் இந்த தேசமானது ஒரு நவீன சோதோம் ஆக இருக்கிறது என்பதையும் கர்த்தருடைய தூதனானவர் இன்றும் அதே தூதனாக இருக்கிறார் என்பதையும் உங்களுக்கு காண்பிக்கும்படியாக, என்னுடைய முதுகு உங்கள் பக்கமாக இருக்கும்படி நான் திரும்பிக் கொள்ளப் போகிறேன். இப்பொழுது உங்களிடம் ஜெப அட்டைகள் இல்லை. ஆகவே நாம் ஜெப வரிசையை அமைக்க வேண்டியதில்லை. நான் கூறியவைகள் சத்தியம் என்றும் சுவிசேஷம் சத்தியமாக இருக்கிறது என்றும், மேலும் அது தேவனாக இருக்கிறது என்பதையும் நீங்கள் விசுவசிக்க வேண்டும் என்கிற ஒரே காரியத்தை மட்டுமே நான் உங்களிடம் கேட்டுக் கொள்ளப் போகிறேன். 212. அங்கே பின்னால் இருக்கின்ற ஊழியக்காரர்களை நான் பார்க்கிறேன். சகோதரர்களே நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன், இந்த சுவிசேஷத்தையும், நான் சத்தியத்தை மட்டுமே பிரசங்கித்தேன் என்பதையும் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்கள் இருதயங்களை ஆசீர்வதிப்பாராக. எனக்குப் பின்னால் அமர்ந்து கொண்டிருக்கிற சகோதரர்களாகியஉங்களுடைய விசுவாசத்தினால், எனக்கு ஒரு மகத்தான நல்ல உணர்வுகள் இருந்து கொண்டிருக்கிறது. இந்த வாரத்தில் நான் பலமுறை கடினமாக கடிந்து கொண்டதைப் போல், மற்றக் காரியங்களையும் செய்தேன். நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் என்னுடைய சகோதரர்களாக இருக்கிறீர்கள். ஆனால் சபையானது விலகி அப்பால் சென்று கொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். நாம் அதை திரும்புவும் கொண்டு வர வேண்டும், அதை திரும்ப கொண்டு வாருங்கள். நாம் அதை திரும்பவும் பெற்றுக் கொள்ள வேண்டும். 213. இப்பொழுது அது இங்கே இருக்கிறது. அங்கே ஒரு ஸ்திரீ எனக்கு முன்பாக இருந்து கொண்டிருக்கிறாள். வலது பக்கத்தின் மூலையில் இருக்கும் அவளை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் அங்கே வெளியில் இருந்து கொண்டிருக்கும் சிலர் அந்த பிரதான ஆசாரியனைத் தொட்டுக் கொண்டிருக்கின்றனர். அவள் இங்கே எதையோ கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்று நான் பார்க்கிறேன். நமது இயேசுவை அந்த ஸ்திரீயானவள் தொட்டதைப் போல, ஒரு நிமிடம் பொறுங்கள், யாரோ சிலர் அவரை தொட்டனர், அதையே இந்த ஸ்திரீயும் செய்தாள், மேலும் சற்று நான் அவருடைய இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் பாருங்கள்? எல்லாம்....உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? இப்பொழுது அது அப்படி இருக்கும்... நான் அதை சற்று நேரத்தில் பிடித்துக் கொள்வேன். பாருங்கள் அது அங்கிருந்து வந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது யாரோ சிலர் அவரைத் தொடுகின்றனர். நீங்கள் ஒவ்வொருவருக்கும் ஜெபம் செய்து கொண்டிருங்கள். உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசியுங்கள். உண்மையான அமைதியுடன் இருங்கள். விசுவாசியுங்கள். 214. ஆம் ஐயா, அங்கே வலது பக்கத்தில் மூலையில் ஒரு ஸ்தீரியானவள் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஆம் அது சரி. உன்னிடம் ஜெப அட்டை இருக்கிறதா, உன்னிடம் ஜெப அட்டை இல்லை என்று நான் அறிவேன் உன்னை எனக்குத் தெரியாது; உன்னைத் தேவன் அறிந்திருக்கிறார். பாருங்கள், எல்லாம் முடியாதா...? நீங்கள் எல்லோரும் இந்த வழியாக நோக்கிப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த ஸ்திரீயானவள் இருக்கின்ற இடத்தில் அவளுக்கு மேலான அந்த வெளிச்சமானது தொங்கிக் கொண்டிருக்கிறதை உங்களால் பார்க்க முடிகின்றதா? அதை பாருங்கள் - அந்த சிறிய... மேலான தெய்வீக தோற்றத்தில் அந்த ஒளியானது அவளுக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கவனித்துப் பாருங்கள் அது திறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த ஸ்திரீயானவள் ஒரு வகையில் ஒரு அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவர்களால் சோதனை செய்யப்பட்டிருந்தாள், அவளுக்கு அது வளர்ந்து உள்ளதாக அவர்கள் கூறினர் சில காரணத்தால் அந்த அறுவை சிகிச்சையானது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது, ஆனால் அவள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுத்து விட்டாள். அவள் தேவன் பேரில் நம்பிக்கை வைத்து அவளுடைய சுகத்திற்காக முயற்சித்துக் கொண்டிருந்தாள். அது சரியே, பெண்மணியே. உங்கள் கரத்தை உயர்த்துங்கள். 215. இப்பொழுது, புதிதாக மனம் மாறியவர்களே, அந்தப் பெண்மணி நலமுடன் இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறாள். அவள் பார்ப்பதற்கு... அந்த ஒளியானது அந்த பெண்மணி உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திற்கு மேலாக நகர்ந்து சென்றது. அவள் நலமுடன் இப்பொழுது இங்கு அமர்ந்து கொண்டிருக்கிறாள். மீண்டும் அங்கே அது இருந்து கொண்டிருக்கிறது. அது அந்த பெண்ணுக்கு பின்னால் சென்று விட்டது என்று நான் நினைக்கிறேன் ஆனால் அது அந்த பெண்ணை நோக்கி சென்றது. அவள் ஒரு விசுவாசியாக இருக்கிறாள், ஒரு கிறிஸ்தவ விசுவாசியாக இருக்கிறாள். அவளுக்கு ஒரு வகையான ஒவ்வாமை (Allergy) இருந்தது அல்லது அவளுடைய கைகளை உடைத்து விட்டிருந்து. அது சரியே. பெண்ணே உன்னை எனக்கு தெரியாது அப்படித்தானே? உன்னிடம் எந்த ஒரு ஜெப அட்டையும் இல்லை, நிச்சயமாகவே நீ சுகத்தைப் பெற்றுக் கொள்ளப் போகிறாய் என்று விசுவாசிக்கிறாயா? அது தேவன் என்று நீ விசுவசிக்கிறாயா? நீ எதற்காக ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தாய் என்று நான் உன்னிடம் கூற முடிந்தால் அதை விசுவசிப்பாயா? (அமைதியாக இரு, அமைதியாக இரு, தயவு செய்து கீழே உட்கார்ந்து கொள்) நீ விசுவசிக்கிறாயா? திருமதி பாஸ்லர்? நீ குணமாகப் போகிறாய்? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ அப்படித்தான் இருக்கிறாய், இல்லையா? 216. வலதுபக்கத்தில் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற சிறிய பையனே, உன்னைக் குறித்து என்ன? இங்கே அது உனக்காக இருக்கிறது. உன் தோள்பட்டைகள் இப்படி வளைந்து இருப்பதைப் போல எனக்குத் தெரிகிறிது. ஆனால் அதற்கும் மேலாக ஏதோ ஒன்று உன்னுடன் தவறாக இருக்கிறது. உன்னுடைய தொல்லை என்ன என்று தேவன் என்னிடம் கூறுவாரென்றால், நான் அவருடைய தீர்க்கதரிசி, அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிப்பாயா. அது ஒரு வயிற்றுத் தொல்லையாக இருக்கிறது நீ ந அதனால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறாய். கர்த்தர் உரைக்கிறதாவது அது சரியாகி விட்டது. ம்..ம் அது குடல் புண் அல்ல, அது உன்னுடைய வயிற்றை கெடுத்துக் கொண்டிருப்பதால் நீ கொஞ்சம் பதட்டத்துடன் இருக்கிறாய். அது சரி இருக்கிறது. நீ உன்னுடைய முழு இருதயத்துடன் விசுவாசிப்பாயானால்... 217. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது பயபக்தியுடன் இருங்கள் பாருங்கள்? பயபக்தியுடன் இருங்கள். நீங்கள் அசையும் எந்த நேரத்திலும் அது ஏதாவது செய்யும், பயபக்தியுடன் இருங்கள். இந்தப்பக்கத்தில் யாராவது இருக்கிறீர்களா? அது இங்கிருந்துதான் வருகிறது, நாம் இங்கே போகலாம். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (மூன்று அல்லது நான்கு எண் வரும் பொழுது யாராவது சொல்லுங்கள்) 218. விசுவாசம் கொண்டவர்களாக இருங்கள்; சந்தேகம் கொள்ள வேண்டாம். சற்று நான் எங்கேயாவது பார்த்துவிட்டு இது அல்லது அது என்று எதையாவது சொல்ல என்னால் முடியாது நான் கொஞ்சம் கவனித்து சொல்ல வேண்டும். விசுவாசம் என்பது ஜனங்களுக்கு மிகவும் உணர்வற்றதாக இருக்கிறது. 219. வலது பக்கம் ஒரு சிறிய பெண் அமர்ந்து கொண்டு என்னை பார்த்துக் கொண்டு இருக்கிறாள். ஆமாம், அவள் உங்களுக்கு பின்னால் வலது பக்கம் இருந்து கொண்டிருக்கிறாள். சகோதரியே உன்னுடைய கண்களில் தொல்லை இருக்கிறது அது சரியாகி விடும். நீ விசுவசிக்க மாத்திரம் செய்தால் அவர் அதை உனக்கு குணமாக்க மாட்டாரா? நீ அதைச் செய்யாவிடில் உன்னுடைய பார்வையை இழந்து விடுவாய்; எல்லா நேரங்களிலும் அது சற்று மங்கலாகிக் கொண்டு வருகிறது. நீ மட்டும் உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தேவன் நீ யார் என்று சொல்லுவார் என்பதை விசுவாசிப்பாயா? உன்னைக்குறித்து எனக்கு தெரியாது, எனக்கு அதிகம் தெரியாது என்று உனக்குத் தெரியும். செல்வி ஜான்சன், வீட்டிற்குச் சென்று நலமுடன் இருப்பாயாக, தேவன் பேரில் விசுவாசம் கொள். 220. அந்த பெண்மணி அவளுக்கு அடுத்ததாக உட்கார்ந்திருக்கிறாள், சில நிமிடங்களுக்கு முன்பு எழுந்து வெளியில் சென்றாள் உன்னை அபகரிக்க சாத்தான் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தான். உன்னுடைய தொல்லை என்ன என்று தேவன் என்னிடம் கூறுவார் என்று விசுவாசிப்பாயா? நான் அவருடைய தீர்க்கதரிசி என்று ஏற்றுக் கொள்வாயா? நீ உன் முழு இருதயத்துடனும் அதை விசுவா சிக்கிறாயா? உன்னை எனக்கு தெரியாது. என் வாழ்க்கையில் உன்னை ஒருபோதும் பார்த்தது இல்லை, ஆனால் இப்பொழுதே நீ தேவனுடன் உண்மையில் ஒரு தொடர்பை பெற்றிருக்கிறாய். சரி. நீ மீண்டும் வியாதிப்பட்டவளாக இருக்கிறாய். அது சரியா. அது பித்தப்பையாக இருக்கிறது. அது சரி. மற்றும் ஒரு காரியம் உன் இதயமானது சற்று விரிவடைந்த நிலையில் இருக்கிறது. அது முற்றிலும் சரி. திருமதி. மில்லர், அது சரி என்றால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சென்று உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்து சரி செய்து கொண்டிருக்கிறார். 221. அதை விசுவாசிப்பதற்கு நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். அதை விசுவாசிக்க மட்டும் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அவ்வளவுதான், தேவனில் விசுவாசம் கொள்ளுங்கள் நீங்கள் அவரை விசுவாசிக்கறீர்களா? "இயேசுவே, தாவீதின் குமாரனே என் மீது இரக்கம் வையும்" உங்கள் முழு இருதயத்துடனும் அவரை விசுவாசிக்கிறாயா? பிறகு என்னை கவனியுங்கள். எத்தனை விசுவாசிகள் இங்கு இருந்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள் அவ்வளவுதான். நீங்கள் ஒரு விசுவாசியாக இருக்கிறீர்கள் என்றால் இப்பொழுது உங்கள் கரங்களை கீழே போடுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசியாக இருக்கிறீர்கள். எத்தனை பேர் வியாதியாக இருக்கிறீர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள் எல்லாம் சரி, விசுவாசிகளாகிய நீங்கள் உங்கள் கரங்களை மற்றவர்கள் மீது வையுங்கள். நான் அதே வார்த்தையை மேற்கோள் காட்டுவேன். "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்". அது அப்படித்தான் இருக்கிறது. அதை நீங்கள் விசுவசிக்கிறீர்களா? இப்பொழுது மேல்மாடத்தில் உள்ளவர்கள், நீங்கள் மற்றவர்களுக்கு ஜெபம் செய்யுங்கள். உங்களை சுற்றியுள்ள உங்கள் அருகில் உள்ளவர்களின் மீது உங்கள் கரங்களை வையுங்கள். ஆம் விசுவாசியுங்கள். 222. நடுவில் அமர்ந்திருக்கும் அந்த ஸ்திரீயானவள் நரம்பு சம்பந்தமான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள். சரி சகோதரியே, உன்னை எனக்குத் தெரியாது, என் வாழ்க்கையில் ஒரு போதும் உன்னைப் பார்த்ததில்லை. சரியா? ஆனால் நீங்கள் பலவருடங்களாக ஒருவித பதட்டத்துடன் இருக்கிறீர்கள். கிறிஸ்து உங்களை சுகப்படுத்துகிறார் உங்களை நலமுடன் இருக்கச் செய்கிறார். மேல் மாடத்தில் உள்ளவர்களே நீங்கள் விசுவாசிப்பீர்கள் என்றால் உங்கள் ஒவ்வொருவரையும் அவர் சுகமாக்குவார். ஒருவருக்கொருவர் ஜெபம் செய்யுங்கள். ஒருவருடைய கைகளை ஒருவர் மீது வையுங்கள். 223. பரலோக பிதாவே, இந்த ஜனங்களின் விசுவாசமானது, இன்றிரவு பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர்கள் மத்தியில் கொண்டு வந்திருக்கிறது, இழந்து போனதையும், வியாதியஸ்தர்களையும் இரட்சித்தது. ஓ, தேவனே, அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கரங்களை பற்றிக் கொள்ளட்டும். நீர்தாமே நேற்றும், இன்றும், என்றும் மாறாத அதே தேவனாக இருக்கிறீர் என்று அவர்கள் விசுவாசிக்கட்டும். ஓ, இயேசுவே, தாவீதின் குமாரனே" என்று அவர்கள்கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இயேசுவை கல்லறையிலிருந்து எழுப்பிய அந்த வல்லமையானது, அவர்களையும் எழும்பி சத்தமிடவும், தேவனுக்கு துதிகளை செலுத்தவும் சாட்சியாக இருக்கட்டும். அவர்கள் பர்திமேயுஸ் போல நின்று கொண்டு,தேவனுடைய வல்லமை அவர்களை குணப்படுத்துகிறதைக் காணும் வரை துதித்துக் கொண்டு இருக்கட்டும். தேவனே. இதை அருள்வீராக. இப்பொழுது ஜெபம் செய்து கொண்டிருங்கள், தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருங்கள், ஜெபம் செய்து கொண்டே இருங்கள். 224. ஓ, தேவனே அவிசுவாசம் என்கிற ஒரு தன்னிச்சையான காரியம் மட்டுமே சுகமளிக்கும் ஆராதனையை நிறுத்துவதாக இருக்கிறது. நான் இந்த கூட்டத்தை முழுவதுமாக கவனித்துக் கொண்டிருக்கிறேன், தேவனே சுற்றிலும் வட்டமடித்துக் கொண்டிருக்கும் அந்த மகிமையான வெளிச்சமானது, அந்த இருளின் வழியாக யாரையாவது தொட முயற்சி செய்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. 225. ஓ, பிதாவாகிய தேவனே, எனக்கு பலத்தை தாரும், எனக்கு விசுவாசத்தை தாரும். நான் கூறியவைகள் சத்தியம் என்று ஜனங்கள் புரிந்து கொள்ளும்படியாக நீர் அதை உறுதிப்படுத்துவீராக. தேவனே, "நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாதிருந்தால் என்னை விசுவசிக்க வேண்டாம்" என்று நீர் உலகத்தில் இருந்த போது கூறியிருக்கிறீர்; மேலும் நான் என்னுடைய மீட்பரின் கிரியைகளை செய்யாதிருந்தால் அவர்கள் என்னை விசுவாசிக்க வேண்டாம். ஆனால் தேவனே, நீர் உலகத்தில் இருந்த பொழுது செய்த அதே கிரியைகளை இப்பொழுதும் நீர் செய்து வருகிறீர். 226. ஓ, பிதாவே, இதை அவர்கள் விசுவாசிக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். அவர்களை மூடிக்கொண்டிருக்கும் அந்த இருளானது முழுவதுமாக கலைந்து செல்லும்படியாக விசுவாசத்தை எனக்குத் தாரும், தேவனே அந்த வல்லமையும், தேவனுடைய வெளிச்சமும் இங்கு உள்ள ஒவ்வொரு ஆத்துமாவின் மீதும் விழட்டும், அது அவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்துவதாக. 227. சாத்தானே, நீ அம்பலப்படுத்தப்பட்டாய், ஏன் நீ ஒரு பிசாசாக இருக்கிறாய். இந்த மக்கள் கூட்டத்தை பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் உனக்கு சவால் விடுகிறேன். இந்த ஜனங்களை விட்டு வெளியே வா, அவர்களை விட்டுவிடு. 2